webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part31

இரவு அடர்ந்த பனியை பூசி இருந்தது . மிகவும் ரசிக்கத்தக்க குளிராக இருந்தது . ராம் அந்த ஹோட்டலின் முதல் மாடியை தேர்வு செய்த போதும் ஜன்னல் வழி காட்சி ரம்மியமாக இருந்தது . குளிர் காற்று இதமாக வீசியது. ராம் தனியாகத்தான் வந்திருந்தான் .ஊட்டி இத்தனை சுவாரஸ்யமாய் இருக்குமென்று நினைக்கவில்லை . திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது . வெளியே கதவை திறந்து பார்த்தான் , எல்லா அறைகளுக்கும் மின்சாரம் இல்லை . கொஞ்சம் பொறுங்க என்னனு பார்த்துடுவோம் என room boy பொறுமையாக பதிலளித்து கொண்டிருந்தான் . reception அருகே தவிப்பாய் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பாருங்க சார் கொஞ்சம் நிம்மதியா ஹனிமூன் வந்தா இங்கேயும் பவர் cut . ராம் அவனை புன்னகையுடன் சமாதானப்படுத்தினான் . தன் பெயர் கதிரேசன் என்றும் கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறதென்று சொன்னான். இப்போதான் வர நேரம் கிடைச்சது . தான் ஒரு சிறிய சூப்பர்மார்கெட் ஒன்று கோயம்பேட்டில் வைத்திருப்பதாகவும் சொன்னான் . ராமை சந்தித்ததில் மகிழ்ச்சியென்று சொன்னான் . சரியாய் அரை மணி நேரத்தில் ராமின் கதவு தட்டப்பட்டது . 

கதிரேசன் அழுதபடி நின்றிருந்தான் . என்ன சார் என்ன ஆச்சு மொதல்லே உள்ளே வாங்க . ஏன் அழறீங்க , இந்த லெட்டரை பாருங்க சார். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ? பதறாம சொல்லுங்க. ஓடி போய்ட்டா சார் என் wife . சே சே அதெல்லாம் இருக்காது . அன்புள்ள கதிருக்கு 

நாம ஆசைப்பட்ட மாதிரியெல்லாம் நடக்கணும்னு கட்டாயமில்லை .எனக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கு , எங்க அப்பா அம்மா விருப்பத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். இப்போ என் காதலர் நவீன் நான் இல்லாம கஷ்டப்படுத்த சகிக்க முடியல . அதனால அவர் கூட போறேன் . என்னை தேட வேண்டாம் . இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி கவிதா . இப்போ நான் suicide தான் பண்ணிக்கணும் .ஊர்ல என் பேமிலி கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் .

இது உங்க wife கையெழுத்து தானா? ஆமா சார். அவங்க போன் எங்க ?எதுக்கும் ட்ரை பண்ணி பாருங்க ? நம்பரை தட்டினான் .ரிங் போகுது ஆனா எடுக்க மாட்டறா சார். எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பிடிக்கணும் ஹெல்ப் பண்ணுங்க சார். ப்ளீஸ் . இதுல நான் தலையிட்டா சரியாய் வராது என்றான் ராம் .காலையிலே போலீஸ் ஸ்டேஷன் ல complaint பண்ணுவோம் .இப்போ போய் தூங்குங்க என்றான். மணி 12 தொட்டிருந்தது . பாவம் எவ்வளவு ஆசையாய் தேனிலவு கொண்டாட வந்திருப்பார்கள் . அந்த லெட்டரை மறுபடி ஒருமுறை படித்தான். அந்த பெண்ணும் எவ்வளவு வருத்தத்துடன் எழுதி இருக்கிறாள் .

விடிந்தும் விடியாததுமாய் வந்துவிட்டான் கதிரேசன். காபி குடிச்சுட்டு போவோம் . சரி ஓகே .யாராவது வேண்டுமென்றே பவர் cut செய்திருப்பார்களோ ? அதெல்லாம் இருக்காது சார் என்றான் ராம் . போலீஸ் ஸ்டேஷனில் கம்பளைண்ட் எடுக்க மறுத்தார்கள் . எதுக்கும் ஊர்ல போய் கம்பளைண்ட் பண்ணி பாருங்க. அவங்க ரெண்டு பேரும் ஊருக்குத்தான் போயிருப்பாங்க . எதுக்கும் இங்க இருக்குற லொட்ஜ் ஹோட்டல் விசாரிச்சு பாக்கலாமே சார் . நீங்க மட்டும் கம்பளைண்ட் எடுக்கலேன்னா நான் இங்கேயே எங்கேயாவது குதிச்சு செத்துடுவேன் . என்னய்யா நீ பொண்டாட்டிய காப்பாத்த துப்பில்லை இங்க வந்து வீர வசனம் பேசுற . சரி ஒரு போலீஸ்காரரை அனுப்பி வைத்தார். அவர் விசாரிச்சுட்டு வருவார் . நீங்க ரூமுக்கு போங்க .இல்லே நாங்களும் வருவோம் .சரி போய் தொலைங்க . கம்பளைண்ட் டில் எல்லா டீடெயில்ஸ் ம் கொடுத்திருந்தான் .

இங்கே சந்தேகப்படுற மாதிரி யாரும் வந்தாங்களாய்யா?.நெறைய பெரு வர்றாங்க எல்லாம் மஞ்சக்கயிரோடத்தான் வராங்க . பேரென்ன சார் நவீன், கவிதா . அவன் இப்போதான் டிபன் வாங்கிட்டு வரேன்னு போனான் .ஆமா சார் ரூம் நம்பர் 108 . வேகவேகமாக விரைந்தார்கள் . கவிதா கவிதா என்று குரல் கொடுத்தவாறே கதவை தட்டினான் கதிரேசன் . கொஞ்சம் பொறுங்க சார். கதவு இடுக்கு வழியாக பார்த்தார்கள் . ஒன்றும் பிடிபடவில்லை .கதவு உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது . டிபன் வாங்க போன நவீன் வந்துவிட்டான் , அவன் போலீசை பார்த்ததும் பம்மவில்லை. மாறாக என்னாச்சு சார் . டேய் நீ வாழ என் பொண்டாட்டி கேக்குதாடா என நவீனின் சட்டையை பிடித்தான் . இருவரும் கட்டி உருண்டார்கள் . கொஞ்சம் அமைதியா இருங்கப்பா இல்லே ரெண்டு பேரையும் உள்ள தள்ளிடுவேன் . கதவை உடைப்பதென தீர்மானிக்கப்பட்டது . 

குளியலறை உள்ளே கவிதா பிணமாக கிடந்தாள் . கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தாள் . நவீனும் கதிரேசனும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக்கொண்டனர். நீயே கொன்னுட்டு இப்போ டிபன் வாங்கிட்டு வர மாதிரி நடிக்கிறியா என்றான் கதிரேசன் .இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துபோனார்கள் . கவிதா உடலை கைப்பற்றி போஸ்டமோர்டெத்துக்கு அனுப்பி வைத்தார்கள் . இருவரின் மேலும் சந்தேகம் இருப்பதால் கதிரேசன், நவீன் ரெண்டு பேரையும் சிறையில் அடைத்தார்கள் . கதிரேசனை ராம் நம்பியதால் அவனுக்கு உதவ முன் வந்தான் . அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் சொன்னான். அவர்கள் வந்தவுடன் விடை பெற்றுக்கொண்டான் . கதிரேசன் ஜாமீன் கிடைத்தவுடன் வந்து பார்ப்பதாக சொன்னான். 

ஊட்டியில் தேனிலவு வந்த இளம்பெண் கொலை . பெரிதாக நாளிதழில் வந்திருந்தது . ராம் கதிரேசனிடம் சொல்லிவிட்டு ஊருக்கு வந்தான். எப்படி சார் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இந்த கொலை நடந்துச்சு என்றாள் தீபு. யாரோ தெரிஞ்சவங்க வந்திருக்கலாம் . வந்து கொலை செய்த பிறகு ஜன்னல் வழி இறங்கி போயிருக்கலாம் அதுக்கும் சான்ஸ் இருக்கு . இப்போ என்ன சார் பண்ண போறீங்க கதிரேசன்,நவீன் ரெண்டு பேரையும் பார்த்த பாவமா இருக்கு . கதிரேசன் கேட்டா இந்த கேஸ் எடுக்கலாம் . பொண்ணு விழுந்து கிடந்த பொசிஷனையம்,கத்தி குத்தையும் பார்த்தா யாரோ ரொம்ப கிளோஸ் ஆனவங்க குத்துன மாதிரிதான் இருந்தது.என்ன காரணம்னு தெரியல . எதுவா இருந்தாலும் அந்த பொண்ணு புருஷன விட்டு அர்த்த ராத்திரியிலே போனது தப்பு . இப்போ எப்படி ஆரம்பிக்கறது சார். நவீன் கூட வேற யாரவது இருந்தாங்களான்னு தெரியல . பொண்ணு சொந்த ஊரு கோயம்பத்தூர்தான் . அதனால தெரிஞ்சவங்க யாரும் பாக்க வந்தங்களானு தெரியல . சிசிடிவி ல யாரும் சந்தேகப்படுற மாதிரி இல்லை. இதை பண்ணவனும் திடீர்னுதான் பண்ணி இருக்கான் . பழம் நறுக்குற கத்தி . ரூம் பாய் யாராவது ஏதாவது சொன்னார்களா ? நவீனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. படிக்கும்போதே லவ் பண்ணியிருக்காங்க . 

தீபு நான் ரொம்ப disturbed ஆஹ் இருக்கேன் மதியம் போல ஆபீஸ் வரேன் என்றான் ராம் . சரி சார் . தீபு நாளிதழில் வந்த செய்தியை கவனமாக படித்தாள். கவிதாவுடைய செல்போன் உடைக்கப்பட்டு இருந்தது . கதிரேசனுக்காக வருத்தப்பட்டான் ராம். ஊட்டியிலிருந்த போலீஸ்காரரின் நம்பர் இருந்தது . விசாரித்தான் அது ஒன்னும் சொல்றதுக்கில்லே சார் அடிச்ச அடியிலே நவீன் தான் murder பண்ணுனதா ஒத்துக்கிட்டான். இப்போ கேஸ் கிளோஸ் ஆகிடும் சார். எதுக்காக பண்ணுனானாம் ,ஏதோ நகையை கேட்ருக்கான் . அந்த பொண்ணு தர முடியாதுன்னு சொன்ன உடனே குத்திட்டான் . சரிங்க சார் நான் வைக்கிறேன் .ஒரு வழியாக கதிரேசனுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. போன் பண்ணியிருந்தான். இந்த கேஸ் நீங்கதான் சார் நடத்தணும் ஏன்னா நவீன் இதை செய்யலேன்னு படுது. போலீஸ் இந்த கேஸ் நகைக்கு ஆசைப்பட்டு நவீன் கொன்னதா சொல்றாங்க .ஆனா நகையெல்லாம் என்கிட்டதான் இருக்கு. கவிதா போனப்பவே எல்லாத்தையும் ஒரு box ல போட்டு என் பையில வெச்சிருக்கா. நவீனை காப்பாத்த இந்த ஒரு ஆதாரம் போதாது . என்ன நடந்துச்சுனு detail வேணும் . நவீனை எப்படியாவது ஜாமீன்ல எடுக்கணும்னா கவிதாவோட போன் ல ஏதாவது எவிடென்ஸ் இருக்கானு பாக்கணும். கவிதா போனை ரிப்பேர்க்கு கொடுத்திருக்கேன் .அது வந்தவுடனே நானே கால் பண்ணி சொல்றேன் சார். நகையும் காரணமில்லை . வேறு ஏதோ நடந்திருக்கிறது . அந்த ஹோட்டல்ல இதுக்கு முன்னாடி இதே மாதிரி ஏதாவது நடந்த நியூஸ் இருக்கா பாரு தீபு என்றான் . நான் google பண்ணி பாக்குறேன். இப்போ அந்த ஹோட்டல் சீல் வெச்சுட்டாங்க . இதுக்கு முன்னாடி எந்த வழக்கும் இல்லை சார். கவிதா Facebook ,இன்ஸ்டாகிராம் ல அவங்க close friend யாராவது இருக்காங்களா பாரு . அவங்க போன் நம்பர் வாங்கு . ஜாபர் னு ஒருத்தன் இருக்கான் சார்.கவிதா ,நவீன் கூட படிச்சவன் common friend . எந்த ஊரு பாரு? ஊட்டி தான் சார் . ஓ அவனை விசாரிச்சா தெரியும் . வேற யாருமே அவங்க friend ஊட்டில இல்லையா . இவன்தான் எல்லா போட்டோலேயும் கிளோஸ் ஆ இருக்கிறான். இப்போதைக்கு இது போதுமென ராம் நினைத்தான். ரொம்ப தோண்டினால் குற்றவாளி உஷாராகிவிடுவான் .கதிரேசன் போன் செய்திருந்தான் . கவிதாவின் போன் ரிப்பேர் செய்யப்பட்டுவிட்டதென்று . நான் இப்போவே அதை எடுத்து வரேன் சார் என்றான். கவிதா போன் கல்யாண போட்டோக்களால் நிரம்பி இருந்தது. உங்களுக்கு ஜாபர் னு யாரையாச்சும் தெரியுமா . ஓ தெரியுமே அவர்தான் நாங்க தங்குன ஹோட்டல் புக் பண்ணி கொடுத்தார் . கவிதாவோட fiend. அவர் இப்போ எங்கே இருக்காரு . சென்னைல தான் வேலை பாக்குறாரு மீட் பண்ணலாமா . கண்டிப்பா . அவரை சந்தேகப்படுறீங்களா இல்லை ஏதாவது information கிடைக்கலாம் இல்லையா என்றான் ராம் .அந்த போனை குடுங்க வாய்ஸ் ரெகார்ட் ஆயிருக்கான்னு பாப்போம் . நவீன் பேசியது இருந்தது . அடுத்தது கடைசி கால் ஆக ஜாபர் பேசியதும் இருந்தது .அன்றைய தினம் பேசியவர்கள் எல்லோருடைய காலும் ரெகார்ட் ஆகி இருந்தது