webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part30

சரி வா தீபக் மணி வீட்டுக்கு போய் பாக்கலாம் . அதற்குள் போன் வந்துவிட்டது. பார்மா கம்பெனிக்காரங்க என்கிட்டே patient details கேட்டாங்க. நானும் கொடுத்தேன் . ஆனா அது ஒரிஜினல் இல்லயாம் . ஒரிஜினலை குடுக்க சொல்லி என் மனைவியை கடத்திட்டாங்க சார். உங்களை நம்பலாமா மணி. நாங்க கேட்டப்ப இல்லேனு சொன்னீங்க. தப்புதான் சார் இப்போ போலீசுக்கு போனா என் மனைவியை கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க . ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார். ரெண்டு நாள் டைம் குடுத்திருக்காங்க அதுக்குள்ள அந்த patient details கண்டுபிடிக்கணுமாம்.

நாளைக்கு எங்க ஆபீஸ்க்கு வந்துடுங்க . சரி ராம் என்றான் . மணி மேல எனக்கென்னவோ இன்னும் சந்தேகமாத்தான் இருக்கு . நிரஞ்சன்குமார் கிட்டே சொல்லித்தான் பிரதாப் newspaper column எழுத சொல்லி இருக்கணும் . நிரஞ்சனைதான் கொன்னுட்டாங்களே . அந்த பேப்பர்ஸ் அவர் பத்திரமா வெச்சிருக்கணும் . 

நிரஞ்சன்குமார் வீடு அண்ணா நகரில் இருந்தது. பெரும்பாலும் தனியாகவே வசித்து வந்தார். போலீஸ் காவலுக்கு இருந்தது. இவன் அதை பொருட்படுத்தவில்லை. 500 ரூபாய் தாள் ஒன்றை கையில் திணித்ததும் police வழி விட்டார் . நான் போய் டீ சாப்பிட்டு வந்துடறேன் சார் என்று கிளம்பி போனார். வீடு சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது. மாடியும்தான். மணி இங்கே என்ன சார் தேட வந்துருக்கோம் என்றான். உங்க மாமனார் இவர்கிட்ட தான் அந்த papers குடுத்துட்டு போயிருக்கார் . நிரஞ்சனோட மெயில் id அவர் காண்டாக்ட் லிஸ்ட்ல இருந்தது . நிரஞ்சன்தான் தொடர்ந்து பார்மா கம்பெனி பத்தியும் எழுதிக்கிட்டு வந்தார் .

நீங்க அவங்களுக்கு கொடுத்த டூப்ளிகேட் list copy இருந்தா கொடுங்க . அதை வாசித்து பார்த்தான் ராம். ஹெல்த் பார்மா கம்பெனி மருந்துகள் மோசமான பின்விளைவுகளை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும். patients பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கோர்ட்டுக்கு போனால் பல கோடி ருபாய் இழப்பீட்டை ஹெல்த் நிறுவனம் தர வேண்டி இருக்கும். யார் இந்த patients? டாக்டர் பிரதாப் patients ஆஹ் கூட இருக்கலாம். கிளினிக் போய் பாக்கலாமா? ஏதாவது records கிடைக்குமான்னு பாக்கலாம் . இங்கே எதுவும் இல்லே என்றான் ராம். 

 கிளினிக் ராயபுரத்தில் இருந்தது . எளிமையானவர்களை தேடிப்போய் பார்த்து மருத்துவம் செய்தவர் டாக்டர் பிரதாப் என்றான் ராம். nurse கண்மணி மட்டும் இருந்தார் . மணியை பார்த்ததும் எழுந்து நின்றாள். டாக்டர் பிரதாப் அறை பூட்டி இருந்தது . கண்மணி இந்த ரூம் key கொண்டு வாங்க என்றான். அறை சுத்தமாக இருந்தது . என்ன விஷயம் சார் ? இங்கே இருந்த patients ரெகார்ட் எங்கே . டாக்டர் எல்லாத்தையும் ஸிஸ்டெத்துல ஏத்த சொல்லி சுமதிங்கிற பொண்ணுகிட்ட குடுத்திருக்காரு . அவங்க ஆபீஸ் எங்கே? இங்கேயிருந்து ரைட் ல ரெண்டாவது தெரு .சுமதி மின்னல் வேகத்தில் டைப் செய்து கொண்டிருந்தாள் . 

அவங்க இப்போதான் வந்தாங்க ..சுமதி ஆபீஸ் போயிருக்காங்க . என போனில் சொன்னாள். patients details கிடைச்சவுடனே எனக்கு போன் பண்ணு என்றார் குருமூர்த்தி . skin disease பெயரில் 4 பேர் இருந்தார்கள். அவர்கள் போன் நம்பரும் இருந்தது . அந்த patients டீடெயில்ஸ் ஒரு பென் டிரைவில் போட்டு வாங்கிக்கொண்டான் . நீங்க பார்மா கம்பனிக்கு போன் பண்ணுங்க இதைத்தான் அவங்க தேடி இருப்பாங்க . மொதல்ல உங்க மனைவியை காப்பாத்துவோம் . 

மணிக்கு அவர் மனைவியிடமிருந்து போன் வந்தது . மணி நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீங்க அந்த pendrive கண்மணிகிட்டே குடுத்தா போதும்னு சொல்றாங்க . கண்மணிகிட்டயா ?நர்ஸ் கண்மணிகிட்ட . ஓகே மா நா குடுத்துட்றேன் . கண்மணியோடு இருவர் பேசி கொண்டிருந்தனர் . கண்மணி பென் டிரைவ் வாங்கி அவர்களிடம் கொடுத்தாள். ரொம்ப தேங்க்ஸ் ராம் சார் . நான் வீட்டுக்கு போய் அவளை பாக்குறேன் என்றவாறு கிளம்பினான் . நாம போய் patient தீபாவை மீட் பண்ணலாம் தீபக் என்றான் ராம் .போன் பண்ணிட்டு போலாமே . நான் ஏற்கனவே போன் பண்ணி அலெர்ட் பண்ணிட்டேன் . அவங்க அண்ணா நகர் ல நிரஞ்சன் வீட்டுக்கு பக்கத்துல ஒரு restaraunt கு வரச்சொல்லி இருகாங்க .

நிரஞ்சன் வீட்டுல ஒன்னும் இல்லைனு சொன்னீங்களே .இருக்கு அது தீபா கிட்டே உள்ள வண்டி சாவியிலே .நிரஞ்சன் அவரோட டூ வீலர் வண்டி நம்பர மேஜைக்கு கீழே எழுதி இருக்கார் . அந்த வண்டியை தீபாவுக்கு கொஞ்ச நாள் முன்னாடிதான் வித்துருக்கார் . தீபாவுக்கே அதுல research papers இருக்குறது தெரியாது . இப்போ அந்த வண்டிலேதான் தீபா வருவாங்க தீபாவும் ஒரு மாற்றுத்திறனாளி . தீபா என்ன சார் விஷயம் ஒண்ணுமில்லேம்மா நீங்க டாக்டர் பிரதாப் கிட்ட டீரீட்மென்ட் எடுத்துகிட்டப்போ ஏதாவது சொன்னாரா. ஆமாம் என் ஸ்கின் கேர் கிரீம் பத்தி கேட்டாரு . அப்புறம் வேற மருந்து எழுதி கொடுத்தாரு . வண்டிய வழிலேருந்து எடுக்க சொல்றாங்க சாவி கொஞ்சம் தரீங்களா என கேட்டான் தீபக். திறந்து டாக்குமெண்டை பத்திரப்படுத்தினான் . ரொம்ப நன்றி தீபா இவ்ளோ தூரம் வந்ததுக்கு ஹெல்த் பார்மாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னுதான் கூப்பிட்டோம் .ரொம்ப நன்றி சார் என்றாள்.

மணி வீட்டில் ஏற்கனவே வைத்திருந்த ஒலி பதிக்கும் கருவியை disable செய்ய போனான் தீபக் . ஒரு நிமிஷம் என்றான் ராம். ரொம்ப தேங்க்ஸ் மைதிலி நீ மட்டும் ஹெல்ப் பண்ணாம போயிருந்தா என் மாமனார் கதை இதோட முடிஞ்சிருக்காது . நீ எப்படியோ ராம்கிட்டேயிருந்து தப்பிச்சுட்டே என்றான் மணி .மணி பேசுவதை கேட்ட ராமும் தீபக்கும் அதிர்ந்தனர் . மைதிலி இப்படி செய்வாள் என கனவிலும் ராம் நினைக்கவில்லை . தொடர்ந்து கேட்ட போது மைதிலி அப்போதான் shares ஹெல்த் பார்மா கம்பெனியிலே வாங்கியதாகவும் அந்த நேரத்துல பிரதாப் ராஜினாமா பண்ணதுனால பங்கு விலையெல்லாம் சரிந்து ஏகப்பட்ட லாஸ் எனவும் சொன்னாள். பிரதாப் இருக்குற வரை மறுபடி ஹெல்த் பார்மா புதுசா மெடிசின் எதுவும் கொண்டு வர விடமாட்டாரு . மைதிலி, மணி சேர்ந்து கொண்டு அவரை முடிக்க திட்டம் போட்டனர். ஷாப்பிங் மாலுக்கு டாக்டர் பிரதாப் வரும் நேரத்தை mani சொல்ல அங்கு யதார்த்தமாய் வருவது போல் வந்த மைதிலி அவரை காரிலேயே கொன்று விட்டாள். 

இதை எப்படி பாஸ் prove பண்ணுவது . வேண்டும் என்றே காரை காணோம் என்று நாடகம் ஆடியிருக்கிறாள் மைதிலி . டாக்டர் பிரதாப் போன் என்ன ஆச்சாம் அதையெல்லாம் மைதிலி விட்டு வைக்க சான்ஸ் இல்லே சார். போலீஸ் அதை தற்கொலைன்னு சொல்லிடுச்சு . நாம நிரஞ்சன்குமார் கேஸ் கொஞ்சம் பாக்கலாம். அவரும் இதே மாதிரி கொல்லப்பட்டிருக்கலாம் இல்லையா . அவர் எழுதுன புத்தகதுலேயிருந்தே அவரை கொன்னவங்க பிளான் பண்ண மாதிரி தீபு சொன்னா . அதுக்கான தீர்வும் அந்த புத்தகத்துல கிடைக்க வாய்ப்பிருக்கு . சரி அவர் கடைசியா எழுதுன புத்தகம் என்ன ? கூகுளை சர்ச் பண்னு.கண்ணாடி மனிதர்கள் .அதுல ஏதாவது இருக்கானு படிச்சு பார்க்கலாம் .கதையின் முக்கியமான நபரை ரெண்டு பேர் கயிற்றை இறுக்கி கொல்கின்றனர். பிறகு கயிற்றை எரித்தும் விடுகின்றனர். ஆனால் அவர் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவர் எதையோ ஒரு பக்கத்தை மடித்து வைத்திருந்தார் . அந்த 90 ம் பக்கத்தில் யார் அவரை கொல்வார்கள் என எழுதி வைத்திருந்தார் . அந்த பக்கத்தை எடுத்து பார்த்த போது சந்தேகமில்லாமல் அவருக்கு நெருக்கமானவர்கள்தான் . அவர்கள் அருகிலே நெருங்கி நின்று பேசும் போது திடீரெனெ கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி விடுகினறனர் . அவர்கள் பேமிலி நண்பர்கள்தான் . 

மைதிலியை சிக்க வைப்பது அவ்வளவு சுலபமில்லை என தெரிந்தது . இன்ஸ்பெக்டர் புவனேஷிடம் சொல்லி டாக்டர் பிரதாப் சந்தேக மரணம் என மறு பிரேத பரிசோதனை செய்ய வற்புறுத்தினான். முதலில் மறுத்தாலும் மறுபடி சோதனை செய்ததில் டாக்டர் பிரதாப் நகங்களின் இடுக்கில் முடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மைதிலி முடியையும் டாக்டர் பிரதாப் நகங்களில் இருந்த முடியும் ஒன்று தான் என உறுதி ஆனது. மைதிலியை போலீஸ் அரெஸ்ட் செய்த போது தான் தான் அந்த கொலையை செய்ததாக ஒத்துக்கொண்டாள்.

 நிரஞ்சன்குமார் வேறு ஏதாவது ஆதாரத்தை கவர் பண்ண நிச்சயம் ஏற்பாடு செய்திருப்பார் என ராம் நம்பினான் . தீபக் அந்த புத்தகத்தோட தலைப்பு என்ன மறுபடியும் சொல்லு . கண்ணாடி மனிதர்கள் . கண்டிப்பா இது கண்ணாடி சம்பந்தப்பட்டிருக்கணும் உடனடியா நாம நிரஞ்சன்குமார் வீட்டுக்கு போகனும் . ஆமா பாஸ் அங்க ஒரு பெரிய முகம் பார்க்குற கண்ணாடி இருந்தது . நிரஞ்சன்குமார் இருந்த வீட்டுக்கு போனான். அங்குல அங்குலமாக சோதித்தான். ஒரே ஒரு நிலை கண்ணாடி இருந்தது . அவர் ரீடிங் டேபிள் அங்குதான் போடப்பட்டிருந்தது . ஒரு கணம் யோசித்தான் .நிலை கண்ணாடியின் பின்புறம் கழற்றி பார்த்தான். கேமரா இருந்தது . அது எல்லாவற்றையும் பதிவு செய்திருந்தது . மணியும் அவன் மனைவியும் வந்து பேசுவது பின்பு கழுத்தை கயிற்றால் இறுக்குவது போன்றவை பதிவாய் இருந்தது .

மணியையும் அவர் மனைவியையும் நிரஞ்சன் குமாரை கொன்ற குற்றத்துக்காக அரெஸ்ட் செய்தனர். நிரஞ்சன் குமார் தொடர்ந்து பார்மா கம்பெனியில் தயாரிக்கும் மருந்துகளின் தரத்தை பற்றிய கேள்வியை எழுப்பியவாறே இருந்தார். இது மக்களிடத்தில் பார்மா கம்பெனி பற்றி ஒரு மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தியது . பார்மா கம்பெனி என்னையும் என் மனைவியையும் மூளை சலவை செய்தனர். இதை செய்து முடித்தால் வெளிநாட்டில் வேலை வாங்கி அங்கேயே செட்டில் ஆக உறுதி அளித்தார் பார்மா கம்பெனி CEO குருமூர்த்தி. அவர் எங்களை மிரட்டிபாதிக்கப்பட்ட patients லிஸ்ட் வாங்கி கொண்டார்.ராம் தன்னிடமிருந்த research பேப்பர்களை போலீசில் ஒப்படைத்தான். வழியில் நின்றுகொண்டு அழுதுகொண்டிருந்த திலீப்பை பார்க்காதது போல் கடந்து காரில் ஏறிக்கொண்டான்.