webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part32

ஜாபர் நேரில் வந்திருந்தான் . கவிதா எனக்கு சிஸ்டர் மாதிரி சார் . காலைல 9 மணி இருக்கும் அப்போதான் சொன்னா இந்த மாதிரி நவீன் கூட வந்துட்டேன் ஒரே குழப்பமா இருக்குனு சொன்னா .நீங்க என்ன சொன்னீங்க. ஈவினிங் வந்து பாக்குறேன்னு சொன்னேன். நீங்க அப்போ எங்க இருந்தீங்க ஊட்டிலதான் சார் .சரி உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?எனக்கு நவீன் மேலதான் சந்தேகமா இருக்கு. நவீன் நீங்க எல்லாம் ஒண்ணா படிச்சீங்களா ? ஆமா சார் . ஏதாவது முக்கியமான விஷயம் ஞாபகம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க . 

நீங்க என்ன நினைக்கறீங்க கதிரேசன் . எல்லாம் முடிஞ்சு போச்சு . சே சே எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெர்ல . சரி போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் என்ன சொல்லுது . அதுல பெருசா findings இல்ல சார் . அவ செத்த டைம் கரெக்ட்டா காலை 9 மணி பத்து நிமிஷம். அந்த சமயத்துல நவீன் வெளியேதான் இருந்திருக்கிறான். கண்ணால பாத்த சாட்சி இருக்குது. அதனால அவனுக்கு நாளைக்கு ஜாமீன் கிடைச்சுடும் . கைரேகை எதுவும் கிடைச்சுதா .இருந்துச்சு அதை பழைய ரெகார்டஸ் கூட compare பண்ணி பார்த்துகிட்டு இருக்காங்க . நீங்க கல்யாணம் பண்ணது பிடிக்காம யாரவது சொந்தத்துல பிரச்னை பண்ணி இருந்தாங்களா? இல்ல சார் . 

சரி வரேன் சார் . ஓகே கதிரேசன் . நாளைக்கு முடிஞ்சா நவீனை அழைச்சிட்டு வாங்க . கண்டிப்பா . தீபு இந்த கேஸ் ரொம்ப சிக்கலா இருக்கே பேசாம ஊட்டிக்கே போய் விசாரிக்கவா ? போகலாம் சார் நவீன்க்கிட்ட பேசிட்டு அப்புறம் போங்க. உனக்கென்ன தோணுது தீபு . ஹோட்டல் நிர்வாகம் மேலயும் சந்தேகமாத்தான் இருக்கு. திடீர்னு வெளி ஆள் உள்ள வர சாத்தியம் இல்ல . reception ல விசாரிக்காம நேரா ரூம் நம்பர் 108 க்கு போறான்னா ஏதோ விஷயம் முன்கூட்டியே தெரிஞ்சிருக்கணும் . சிசிடிவி footage என்ன சொல்லுது சார். அப்டி யாரும் சந்தேகப்படுற மாதிரி உள்ளே வரல . என்னவோ அந்த பொண்ணு வேற ஏதாவது ஆர்டர் பண்ணியிருந்தா ? இருக்கலாம் என்றான் ராம் .

நவீன் மிகுந்த சோர்வாய் இருந்தான் . கதிரேசன் வரவில்லை . காபி சொல்லவா என்றான் ராம். நான் அப்பவே சொன்னேன் சார் இதெல்லாம் வேணாம்னு அவதான் பிடிவாதமா நின்னா . சரி நவீன் நாம நாளைக்கி ஊட்டிக்கு போவோம் . ஹோட்டல் நிர்வாகம் மேலயும் சந்தேகமா இருக்கு விசாரிப்போம் . எனக்கென்னவோ நம்பிக்கையே இல்லை சார் . ஆனா அவனை விடக்கூடாது சார்.

கதிரேசன், நவீன் , ராம் மூவரும் கொலை நடந்த ஹோட்டலுக்கு எதிர் திசையில் இருந்த ஹோட்டலில் தங்கி இருந்தனர் . ஹோட்டல் பின்பக்க எண்ட்ரன்ஸ் ஏதாவது இருக்கான்னு பாக்கணும் .சிசிடிவி அங்கே இருந்தா அதை செக் பண்ணனும் என்றான் ராம் . கொலை நடந்த ஹோட்டலுக்கு போய் விசாரித்தனர். இப்போதான் 15 நாள் ஆச்சி தொறந்து. நீங்க போய் பாருங்க சார் பின் பக்க கேட் ஒன்று இருந்தது . சாதாரணமாய் ஏறி குதிக்கும் உயரம்தான் இருந்தது . அந்த கேட் கவர் பண்ணுகிறமாதிரி சிசிடிவி எதிர் வீட்டில் இருந்தது . குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஆள் கிராஸ் செய்வது தெரிந்தது. அப்போது மணி 8 தான் ஆகியிருந்தது . திரும்ப அந்த ஆள் அதே கேட் வழியாக போகும் போது காலை மணி 10 .போலீசிடம் அந்த காட்சிகளை பற்றி விசாரித்தனர். நாங்க இந்த ஆள் யாருன்னு செக் பன்றோம் சார் என்றார்.

ரூம் நம்பர் 108 நாங்க பாக்கலாமா .பூட்டித்தான் வெச்சுருக்கோம் சார். யாருக்கும் குடுக்கறதில்ல. இந்தாங்க சாவி பாருங்க . ராம் அந்த ரூமை நோட்டமிட்டான். என்ன சார் இருக்கும்னு எதிர் பார்க்கறீங்க . சில சமயம் கேமரா ஒளிச்சு வைச்சு தம்பதிகளை மிரட்டி பணம் பறிக்கிற கும்பல் உண்டு அந்த மாதிரி எதுவும் இருக்கான்னு பார்க்கிறேன். அப்டி இருந்தா அவங்க இந்நேரம் நம்ம கிட்டே பேசி இருப்பாங்க சார். அவங்க ஒருவேளை கவிதாவை மிரட்டி இருந்தா? சான்ஸ் இருக்கு சார். இங்கே ஒன்னும் இருக்காது சார் . இது டீசெண்டான பேமிலி ஹோட்டல் . இதுக்கு முன்னாடி வந்தவன் அந்த மாறி செட் பண்ணியிருந்தால் ? நாம அதுக்கு முன்னாடி இருந்த ஆள் எத்தனை மணிக்கு காலி பண்ணினானு பார்ப்போம் . அவன் காலி பண்றப்போ நாங்க இங்க தான் reception ல இருந்தோம் 8 30 இருக்கும் . அவன் பேரு கூட விக்கி . அதனாலதான் அவன் திரும்ப வரப்ப சந்தேகம் வரல . நாம பார்த்தப்ப விக்கி 9 மணிக்கு திரும்ப உள்ள வர வீடியோ இருக்குது . 

அவன் அட்ரஸ் வாங்கி பாக்கலாம் . அட்ரஸ் கோவை megna ஸ்டுடியோஸ் என்று இருந்தது . அவனுடைய ஆதார் கார்டு xerox மற்றும் போன் நம்பர் இருந்தது . ஹலோ விக்கி இருக்காங்களா ? ஒரு reception வீடியோ எடுக்கணும் நேர்ல பாக்க முடியுமா என்றான் ராம். நான் விக்கிதான் பேசறேன். நீங்க எங்கிருந்து பேசறீங்க ஊட்டி. function எங்க நடக்குது ஊட்டிலதான் . நான் இப்போ ஊட்டிலதான் இருக்கேன் . நாங்க ஹோட்டல் சக்திவிலாஸ் ல தான் இருக்கோம் வாரீங்களா .சரி வரேன் என்றான். விக்கி வந்ததும் நடந்ததை விவரித்தனர். முதலில் மிரண்டு பிடித்த விக்கி கேமரா வைத்ததை ஒத்துக்கொண்டான். அது இன்னும் அங்கேயேதான் இருக்கு . என்னால போலீஸ் இருந்ததாலே எடுக்க முடியலே . சரி வாங்க போய் எடுப்போம் . என்னை போலீஸ் ல மாட்டி விட்டுட மாட்டீங்களே சார் . நிச்சயமா இல்லே. ஆனா நீ செஞ்ச இந்த காரியத்துக்கு என்றான் நவீன். அப்புறம் திரும்ப ஏன் நீ ரூமுக்கு போன ... எடுத்துடலாம்னு நெனச்சேன் அப்புறம் எதிர்க்க நவீனை பார்த்ததும் வேணாம்னு முடிவு பண்ணினேன். மொத்தம் 5 காமெராக்கள் பொருத்தியிருந்தான் . பாத்ரூம் ,ஜன்னல் , பேன் என பல கோணங்களில் பொருத்தியிருந்தான் . எளிதில் கண்ணனுக்கு புலப்படாத சிறிய கேமராக்கள் . விக்கி நாம இதை உடனே பாக்கணுமே . மெமரி கார்டு எடுத்து மொபைல் லில் போட்டான் . அதில் இருந்த காட்சிகள் மூவரையும் அதிரச்செய்தன . ஒரு வயசானவரும் ,பெண்ணும் பேசிக்கொண்டிருந்தனர் . பேசி கொண்டிருக்கும் போதே அந்த பெண் கவிதாவின் கையை மடக்க பெரியவர் கத்தி எடுத்து குத்தினார். இது கவிதாவோட சித்தப்பா கோவை ல இருக்கார். இவர் எதுக்காக கொல்லனும். அடுத்த மாசம் இந்த பொண்ணுக்கு ரம்யாவுக்கு கல்யாணம் . மெமரி கார்டுகளை கவனமாக வாங்கி கொண்ட ராம் . விக்கியை எச்சரித்து அனுப்பினான்.

இனி என்ன ராம் சார் . அந்த பெரியவர்தான் கேட் வழியா வந்தவரான்னு உறுதிப்படுத்தனும். ரெண்டு பேருமே அதே கேட் வழியாதான் வந்திருக்கணும் . கவிதா சித்தப்பா அரெஸ்ட் செய்யப்பட்டார். ரம்யாவையும் காவலில் எடுத்து விசாரித்தது போலீஸ் . கவிதா சித்தப்பாதான் கவிதாவை எடுத்து வளர்த்தவர். மொத நாள் ராத்திரி எங்களுக்கு கவிதா கால் பண்ணுனா . நான் நவீன் கூட போறேன்னு சொன்னா .நீ அப்டி ஓடி போயிட்டா என் வாழ்க்கையும் பாதிக்கும்னு சொன்னேன் . ஆனா அவ கேக்கலை . சுயநலமா இருந்தா . அவதான் நாங்க ரூம் நம்பர் 108 ல இருக்கோம்னு சொன்னா . அவ என்னை மட்டும் வர சொன்னா . நான் அப்பாகிட்டே சொன்னேன். ரெண்டு பெரும் சேந்து அவ கதையை முடிக்க திட்டம் போட்டோம் . என் குடும்பத்துக்கு அவமானத்தை தேடி தந்த கவிதாவை முடிச்சோம் . இப்பயும் எங்களுக்கு அதுல வருத்தமில்லை. கல்யாணம் ஏற்கனவே நின்னு போயிடுச்சி .

ரம்யா கதறி அழுதாள் . கவிதா சித்தப்பா எதுவும் பேசவில்லை . நீ எதுக்கும்மா அழுகுற . அவளே தப்பு செஞ்சுட்டு தைரியமா நமக்கு போன் பண்ணா.ராமுக்கு கதிரேசனும், நவீனும் நன்றி தெரிவித்தனர். எனக்கு இவங்க மேல சந்தேகமே வரலை சார். சாவுக்கு கூட வந்து இருந்தாங்க .கொலை வெறி புடிச்சவங்களா இருப்பாங்கன்னு நெனைச்சு கூட பாக்கலை. இவங்களை கவிதா மீட் பண்ணுவான்னு நானும் நினைக்கலை என்றான் நவீன். கவிதா செஞ்சது தப்புனாலும் அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா என வருத்தப்பட்டான் ராம். இப்போது கதிரேசனுக்கும் வாழ்க்கையில்லை, நவீனுக்கும் வாழ்க்கையில்லை என வேதனைப்பட்டான் . ரம்யாவை நினைக்கும் பொழுது அவனுக்கு இன்னும் துக்கமாக இருந்தது.