webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part2

அப்பு இறந்த அதிர்ச்சியில் இருந்து ராகவ் இன்னும் மீளவில்லை .ரஞ்சனி அவனை சமாதானப்படுத்தினாள். அப்புவினுடைய மனைவியிடம் postmortem முடிந்த பிறகு உடல் ஒப்படைக்க பட்டது .ஏராளமான நண்பர்கள் வந்து போயினர் .இவனையும் ரஞ்சனியையும் சேர்த்து பார்த்ததில் ஆச்சர்யம் அடைந்தனர் .அப்புவினுடைய போனை இவன் வாங்கி பார்த்தான் .அது லாக் ஆகி இருந்தது .postmortem ரிப்போர்ட் வர ரெண்டு நாட்களாகும் என்றார்கள் .

ரஞ்சனி உனக்கு யாரவது வேண்டாதவங்க இருக்காங்களா நல்லா யோசிச்சு சொல்லு அப்படி யாரும் இல்ல எங்க கல்யாணத்துக்கு கூட பெருசா எந்த எதிர்ப்பும் இல்ல ஷ்யாமுக்கு business எதிரிகள் யாரவது இருந்தார்களா அப்படி யாரும் இல்லை முக்கால்வாசி friends தான் 

சரி ரஞ்சனி உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருந்தா உடனே கால் பண்ணு என்றான் ஓகே ராகவ் நீ எதுக்கும் ஜாக்கிரதையாவே இரு 

அப்புவின் மனைவி பேசக்கூடிய நிலையில் இல்லை .போலீஸ் ஒரு புறம் விசாரித்ததில் அப்பு இரண்டு நாளைக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து வந்ததாகவும் அவசர அவசரமா வீட்டை விற்று காலி செய்ததாகவும் சொன்னார்கள் .அப்புவினுடைய வீட்டை இன்னொருமுறை சுற்றி வந்தான்

திருவாரூர் சென்று வரலாம் என எண்ணினான் . வீட்டுக்கு போனான் குளித்து உடை மாறினான் . தூக்கம் கண்ணை சொக்கியது .சரியாய் தூங்கி ஒரு வாரம் இருக்கும் .

மாலை ஆகி விட்டது .போய் டீ சாப்பிட்டு வந்தான் .அவனை பல பிரச்னைகளில் இருந்து காப்பாற்றியவன் அப்பு . அந்த நன்றிக்கடனுக்காகவேனும் நாம் இதை செய்ய வேண்டும் என நினைத்தான்.

போன் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி கிடந்தது . சார்ஜ் போட்டு வைத்தான் .யாரோ காலிங் பெல் அடித்தார்கள் ,போய் பார்த்தான் அங்கிள் உங்ககிட்டே கொடுக்க சொல்லி சொன்னார்கள் என்று பார்சல் ஒன்றை குடுத்தான் .தங்க்ஸ்பா என்றான் .அதில் எந்த விலாசமும் இல்லை 

பிரித்து பார்த்தான் ஹார்ட் டிஸ்க் ஒன்று இருந்தது .அதற்குள் ரஞ்சனியிடம் இருந்து போன் வந்தது . நீங்க சொன்ன மாதிரி யோசிச்சு பார்த்தேன் ஷ்யாமுக்கு ஆர்டர் போட்டு பணம் கொடுக்காம மிரட்டிய ஒரு ஆளு பத்தி இப்போதான் ஷ்யாமோட டைரில பார்த்தேன் பேரு சிங்காரம் சென்னை .சரி ரஞ்சனி நீங்க டீடெயில்ஸ் எடுத்து வைங்க நாளைக்கு நான் வரேன் என்றான் 

ரஞ்சனியிடம் ஹார்ட் டிஸ்க் பற்றி சொல்ல வேண்டாம் என்று நினைத்தான் .வக்கீலிடம் விசாரித்ததில் ஷியாம் இன்சூர் செய்திருந்ததாகவும் அது ரஞ்சனிக்கு கிடைத்து விட்ட பிறகு ரஞ்சனி ஷியாம் கேசில் அதிக ஆர்வம் காட்டவில்லை எனவும் சொல்லியிருந்தார் .

ஹார்ட் டிஸ்க் password கேட்டது .அதை பத்திரப்படுத்தினான் .அந்த பையனை கூப்பிட்டு இதை கொடுத்தவன் அப்புவா என போட்டோவைக்காட்டி உறுதி செய்து கொண்டான் ,அப்பு இல்லை அவர் சற்றே குண்டாக இருந்ததாகவும் கண்ணாடி அணிந்திருந்ததாகவும் சொன்னான் 

ஹலோ நான் ரவி பேசுறேன் எத்தனை தடவை சொன்னாலும் ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க நான் உங்கள விரும்பலை .ஆனா நான் உங்க குரலுக்கு அடிமை இதையே நீங்க எத்தனை தடவை சொல்வீங்க ரஞ்சனி நீங்க மட்டும் ம் சொல்லுங்க இவள் போனை துண்டித்துவிட்டாள்.

நேத்து கூட ஒருத்தன் ரவின்னு போன் பண்ணான் .ரொம்ப கஷ்டமாயிருக்கு ராகவ் .சரி அந்த சிங்காரம் பத்தி ஏதும் போலீஸ் கிட்டே சொன்னீங்களா லாஸ்ட் இயர் அந்த ஆள் தலைமறைவு ஆயிட்டதா சொல்றாங்க .கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க ஷ்யாமுக்கு affair எதுவும் இருந்ததா. சே சே அப்படியெல்லாம் இல்லை 

ஏதாவது ஹார்ட்டிஸ்க் ,pen டிரைவ் பர்சனல் டைரி ஏதாவது இருந்ததா 

போன் அடித்தது இன்ஸ்பெக்டர் தான் .சொல்லுங்க சார் அப்புவோட போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் வந்துடுச்சு சார் .நீங்க கலெக்ட் பண்ணிக்கிறீங்களா அது suicide மாதிரி செட் பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க .சரி சார் நீங்க ரிப்போர்ட்டை அப்பு wife கிட்ட குடுத்துடுங்க .ஓகே சார்.

அவரோட எல்லா பர்சனல் விஷயத்தையும் என்னோட ஷேர் பண்ணிப்பாரு .எதுக்கும் அவரோட பேங்க் லாக்கர் ஒன்னு இங்கே கனரா பேங்க் ல இருக்கு நான் தேடி பாக்குறேன்.அந்த ஷியாம் கேஸ் ரீ ஓபன் பண்றாங்களாமே .ஆமா சார் நீங்க கொஞ்சம் careful ஆ இருக்குறது நல்லது .அந்த accident ல அவன் சாகலையே அப்புறம் ஏன் நீங்க தலைமைறைவா இருக்கீங்க அவன்கிட்ட 50 lakhs கடன் வாங்கித்தான் business ஸ்டார்ட் பண்ணேன் ஆனா லாஸ் ஆயிடுச்சி அவன் பணத்தை கேட்டு தொந்தரவு பண்ணான் அவனையே முடிச்சிடலாம்னு லாரி விட்டு ஏத்துனேன் அப்பயும் தப்பிச்சுட்டான் ஆஸ்பிடல்லதான் ஏதோ நடந்துருக்கு .போலீஸ் இப்போ என்னை தேடுது .அவன் wife ரஞ்சனியும் கூட எவனோ ஒருத்தனும் இந்த கேச re ஓபன் பண்ண வெச்சிருக்காங்க 

அப்புவின் மனைவியை தொடர்புகொள்ள முயன்றான் . அவளிடத்தில் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை .எங்கே இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. இன்ஸ்பெக்டரிடம் இருந்து அப்புவின் போனை வாங்கிவிட்டான். அவனுக்கு அதை unlock செய்ய முடியவில்லை. 

அப்புவுக்கும் ரஞ்சனிக்கும் ஒற்றுமை உண்டு ரெண்டு பேருமே இசையை நேசித்தார்கள் .சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் செய்திருக்கிறார்கள் . அப்புவும் ரஞ்சனியை விரும்பியிருக்கிறான்.அனால் சொல்லாமல் மறைத்து விட்டான். 

இன்றைய தினம் எந்த கேட்ட செய்தியும் வராமலிருப்பதே அவனுக்கு ஆறுதலாய் இருந்தது .அப்புவினுடைய போனை unlock செய்ய முடியுமா என்று பார்ப்பதற்காக தெரிந்த நண்பர் கடைக்கு போனான் .இது அவருடைய வாய்ஸ் இல்லாமல் ஓபன் ஆகாது என்றார்கள் .வேற வழியே இல்லையா அவனுடைய போன் சிம் கழட்டப்பட்டு இருந்தது .பெங்களூரு ல ஹெட் ஆபீஸ் இருக்கு அவங்க மனைவி இல்ல நெருங்குன சொந்தக்காரங்க போனா வாய்ப்பிருக்கு என்றான்.சிங்காரம் தன்னுடைய அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தான் .யார்ரா அவன் ரஞ்சனி கூட சுத்தறவன் அவனை பத்தி விசாரிங்கடா என்று சொன்னான் 

சிங்காரம் லேசுப்பட்ட ஆள் இல்லை .போலீஸ் encounter லிஸ்டிலும் சிங்காரம் பெயர் இருந்தது 

ராகவுக்கு எல்லா திசைகளும் அடைக்கப்பட்டிருப்பதாக தோன்றிய வேளையில் அப்புவின் மனைவியிடம் இருந்து கால் வந்தது .அவளை சந்தித்தால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்குமென தோன்றியது 

அவர்கள் இப்போது மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள் .சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாலும் அப்பு இல்லாத ஏக்கத்தை அவர்கள் முகம் காட்டியது .அன்னிக்கி என்னம்மா நடந்தது மதியம் ரெண்டு மணி இருக்கும். திடீர்னு என்ன தோணுச்சோ நாம இந்த வீட்ல இருக்க வேண்டாம்மா நீங்க எல்லாம் மன்னார்குடி போயிடுங்க நான் இந்த வீட்டை செட்டில் பண்ணிட்டு வரேன்னு சொன்னவருதான் .அதுக்கப்புறம் அவர்கிட்டேயிருந்து எந்த காலும் வரலே .அவன் வாய்ஸ் ரெகார்ட் பண்ணது இருக்கா password மாதிரி .இல்லீங்களே அவர் அடிக்கடி ஏதாவது வார்த்தை கிண்டலா சொல்வானா.. உங்கள செல்லமா கூப்புட்ற மாதிரி இல்லன்ணா அப்டி எதுவும் இல்ல .அப்ப பெங்களூரு போயி பாக்கலாமா இன்னும் ஒரு வாரம் போகட்டும் குழந்தை தனியா இருக்கா அப்ப வந்துடுவார் அப்புறம் நானே உங்க கூட வரேன் .மெட்ராஸில் பிரைவேட் டிடெக்ட்டிவ் agency நடத்திவரும் ராமை ஒரு சிலர் அவனுக்கு suggest செய்திருந்தார்கள் .இருக்கிற குழப்பத்தில் அவரையும் சேர்க்க வேண்டுமா என யோசித்தான் .ஷியாம் பற்றி லாக்கரில் ஏதாவது கிடைத்ததா என ரஞ்சனியிடம் விசாரித்தான் .அதில் ஒன்றுமில்லை.

ஒன்லைனில் சிங்காரம் பற்றிய செய்திகளை சேகரிக்க தொடங்கினான் ராகவ் .அவனுடைய கம்பெனி வெப்சைட் முடக்கப்பட்டிருந்தது .அவனுடைய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் இருந்தது .கிட்டத்தட்ட நிதி நிறுவனம் போல நடத்தி 25 கோடி வரை மோசடி செய்திருந்தான்.இவன் ராமை சந்திப்பதென முடிவெடுத்தான்

வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு சூறையாடப்பட்டிருந்தது .இதை அவன் எதிர் பார்த்திருந்தான் .எதையோ தேடியிருக்கிறார்கள். சகலமும் கலைத்து போடப்பட்டிருந்தது .

 பெங்களூரு செல்போன் நிறுவனத்தில் போனை unlock செய்து விட்டார்கள் .அப்பு கடைசியாய் பேசிய விடியோவும் சிக்கியது . மச்சான் என்னால இதுக்கு மேல ஓட முடியாது .சிங்காரம் ரொம்ப மோசமானவன் ஜாக்கிரதையா இரு மச்சான் ஹார்ட் டிஸ்க் password உனக்கு அனுப்பிருக்கேன்.ஹார்ட் டிஸ்க் சீக்கிரமே உனக்கு வந்து சேரும் .

அப்புவின் மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு இவன் ராயப்பேட்டையில் உள்ள சிங்காரம் அலுவலகத்துக்கு வந்தான் .அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது .போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.ராமுடைய அலுவலகமும் அதே பகுதியில் சற்று ஒதுக்குப்புறமாய் இருந்தது .அவனிடம் போனில் பேசியிருந்தான். ராகவ் இந்த கேச நான் எடுக்கறதா வேணாமா அப்டின்னு யோசிச்சேன் .என்னவோ உங்களை பார்த்ததும் இதை கண்டிப்பா solve பண்ணுவேன்னு தோணுது .

அந்த ஹார்ட் டிஸ்க் கொண்டு வந்தீங்களா .இல்ல அது என்கிட்டே இருக்குற வரைதான் எனக்கு safety அது அவங்க கையிலே கிடைச்சா என்னை கொன்னுடுவாங்க . நீங்க சொல்றது புரியுது .சிங்காரம் இப்போ தலைமறைவான இருக்குறதுனால என்ன பண்றதுன்னு எனக்கும் புரியல.நாம அப்பு வீட்டை இன்னொரு தடவை பாப்போம் ஏதாவது clue கெடைக்குதான்னு பாப்போம் . எப்போ வரீங்க நாளைக்கே சரி thank u சோ மச் 

ராமும் அவனுடைய அசிஸ்டன்ட் தீபூவும் இது குறித்து பேசிக்கொண்டனர்.தீபு நாம ஏன் சிங்காரம் ஆபிஸ செக் பண்ண கூடாது .போலீஸ் டூட்டி போட்டிருக்காங்க. நம்ம வேலையே அத ஓவர் டேக் பண்றதுதான் .ராம் பின்பக்க சுவர் ஏறி குதித்தான் . தீபு சொன்னபடி சிசி டிவி காமெராக்களை செயலிழக்க செய்திருந்தாள். அது வெகு காலமாக பூட்டப்பட்டிருந்ததால் தூசியும் குப்பையாய் இருந்தது பின் கதவு லாக்கை லாவகமாக திறந்தான் .ஏற்கனவே மக்கள் நிதி நிறுவனத்தை சூறையாடியதால் அதிகம் கம்ப்யூட்டர் போன்றவை காணப்படவில்லை .போன் வெளிச்சத்தில் கீழே குனிந்து பார்த்தான் .ஒரு ஆள் விழுந்து கிடந்தது போல் இருந்தது . அவனுடைய அருகில் சென்றான் .நாடி பிடித்து பார்த்ததில் அவன் எப்போதோ இறந்திருக்க வேண்டும் என தோன்றியது 

அவனுடைய பாக்கெட்டை துழாவினான் .மொபைல் போன் கிடைத்தது .அவன் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருக்கலாம் என ஊகித்தான். இவனுடைய கை ரேகைகளை சுத்தம் செய்தான் .சத்தம் இல்லாமல் வெளியே வந்து அம்புலன்ஸ்க்கு போன் செய்தான் .போலீசுக்கும் தகவல் சொன்னான் . இறந்து போன ஆள் பாவம் யாரேனும் ஏமாந்தவராக கூட இருக்ககூடும் என நினைத்தான். இறந்து கிடந்தவனுடைய செல்போன் அடித்தது.