webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part1

இரவுக்கு ஆயிரம் கைகள் அப்புதான் முதலில் அந்த சோக செய்தியை சொன்னான் .ரஞ்சனி புருஷன் accident ல இறந்துட்டாப்லயாம் பாவம் என்றான் .இவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. என்னடா சொல்ற எப்போ நடந்தது ஒரு மாசம் ஆச்சாம் நேத்துதான் நியூஸ் கிடைச்சுது. அவ இப்போ எங்க இருக்கா 

யு எஸ் லிருந்து தஞ்சாவூர் மாறி வந்துட்டாங்க .அவங்க அட்ரஸ் வாட்ஸாப்ப் பண்ணு நான் போயி பார்த்துட்டு வரேன் . நெஸ்ட் வீக் நான் ஊருக்கு வரேன் அப்போ போயி பாக்கலாம் .சரிடா வெக்கிறேன் என்றான் 

ரஞ்சனி என்ற உடன் அவள் விட்ட அறைதான் நினைவுக்கு வந்தது . இன்ஜினியரிங் சேர்ந்த புதிதில் first இயர் படிக்கும் போது நடந்த சம்பவம். ரஞ்சனியை எல்லோரும் மாமி என்றே குறிப்பிட்டு வந்தனர்.ஒரு நாள் சாயங்காலம் சீனியர்களிடம் மாட்டிக்கொண்டான் .உங்க கிளாஸ் ல மாமின்னு ஒருத்தி இருக்கலாமே தெரியுமோ நோக்கு என்றான் சார் என்னை விட்டுடுங்க என்று கெஞ்சினான் அவ நன்னா பாடுவாள் அது தெரியுமோ நோக்கு என்றான் தெரியுமே அப்போ அங்க வரா பாரு மாமி இங்க வாங்கோன்னு கூப்பிடு பாப்போம் வேண்டாம்னா பாவம் கூப்பிடுறான்னா என்ன கிளாஸ் எடுக்குற அவள் வருவதற்கும் இவன் மாமி என்று கூப்பிடுவதற்கும் சரியாய் இருந்தது ஓங்கி ஒரு அறை விட்டாள். சீனியர் மாணவிகள் அவளை சமாதான படுத்தி கூட்டி கொண்டு போயினர்.

 அதற்கப்புறம் எப்பவும் ரஞ்சனி அவனிடம் பேசவில்லை .இவன் பல முறை மன்னிப்பு கேட்ட பிறகும் அவள் மனம் இறங்கவில்லை 

அப்பு ஊரிலிருந்து வந்து விட்டான். ராகவுக்கு திருமணமாகி மூன்றே மாதங்களில் டிவோர்ஸ் ஆகிவிட்டிருந்தது .ஒண்டியாகத்தான் இருந்தான். அப்புவும், ரஞ்சனியும் தஞ்சாவூர் .இவனுக்கு திருவாரூர்.திருவாரூரிலில் சொந்த வீடு இருந்தது அதை வாடகைக்கு விட்டிருந்தான் . 

விபத்து நடந்தது தமிழ்நாட்டில்தான் என தெரியவந்தது.அவர்கள் மகள் அரங்கேற்றத்துக்கு வந்த போது நடந்திருக்கிறது .அப்பு அவளுக்கு என்னை கண்டாலே ஆகாதே நான் வரவா வேண்டாமா என்றான் .சும்மா வா மச்சான் சிங்கப்பூர்லேயிருந்து நான் வந்திருக்கேன் இங்க இருக்க நீ வராம போனா தப்பாதான் நினைப்பா. தவிர யாருமே போய் பாக்கலையாம் அதான் மச்சான் .சரி நாளைக்கு என் வீட்டுக்கு வந்துடு அங்கிருந்து போயிடுவோம் என்றான் . நான் அவகிட்டே பேசிட்டேன் நீயும் வரேன்னு சொன்னேன் அவ ஒன்னும் சொல்லல. லொகேஷன் அனுப்பிச்சிருக்கா 

அப்புவும் இவனும் அவளுடைய வீடு போய் சேர்ந்த போது மாலையாகிவிட்டது .வீட்டு வாசலில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள். அவளை கண்டதும் ராகவ் தலை தாழ்த்திக்கொண்டான் .உள்ளே வாங்க என்றாள்.அப்பு ரொம்ப ஷாக்கிங் ஆ இருந்திச்சி என்றான் .படம் மாட்டி மாலை போட்டிருந்தது .காபி சாப்பிடுங்க என்றாள் இல்ல வேண்டாம் என்றான் அப்பு பரவாயில்ல சாப்புடுங்க .அவங்க டாடி இல்லாம இவ ரொம்ப கஷ்டப்படுறா .நீங்களாவது வந்தீங்களே அப்பு தேங்க்ஸ் என்றாள்.எந்த ஹெல்ப் வேணா கேளு ரஞ்சனி நான் செஞ்சு தரேன் என்றான் .

நான் அப்பா அம்மா இங்கேயே இருக்கறதா முடிவு பண்ணிட்டோம் .எனக்கொரு job arrange பண்ணி தர முடியுமா .நான் என் resume அனுப்புறேன் கொஞ்சம் பாக்குறீங்களா .சரி ரஞ்சனி கண்டிப்பா ஹெல்ப் பண்றேன் .குழந்தையோடு ராகவ் விளையாடிக்கொண்டிருந்தான் .96 படத்தில் வரும் ஜானு போலத்தான் ரஞ்சனி .பாட்டு பாடுவதில் expert கோல்ட் மெடலிஸ்ட் சரி நாங்க கிளம்பட்டுமா அப்பு ஒரு நிமிஷம் என்றவாறே அறைக்குள் அழைத்தாள்.விபத்து நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை .விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறியவும் இல்லை .டிரங்க் அண்ட் டிரைவ் என்று கேஸ் முடித்திருக்கிறார்கள். ஆள் NRI என்றதும் அழுத்தம் கொடுக்கவே அவசரம் அவசரமா கேஸ் ஐ மூடியிருக்கிறார்கள் 

சே அந்த குழந்தை முகத்தை பாக்கவே கஷ்டமாயிடுச்சி .ரஞ்சனி புருஷன் ஷியாம் முகத்தை கூட காட்ட முடியலியாம்.நம்ம பசங்க கிட்டே இதெல்லாம் டிஸ்கஸ் பண்ண வேணாம்னு சொன்னா.ஏதோ ஒரு மர்மம் இருக்கு எவனோ வேண்டாதவன்தான் இந்த வேலைய பாத்திருக்கணும் என்றான் அப்பு

 அன்று இரவு அப்புவும் இவனும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் .எப்படியாவது ரஞ்சனிக்கு ஒரு வேலை வாங்கித்தந்து விடும்படி ராகவ் அவனிடம் கேட்டுக்கொண்டான் .ராகவா நீ நினைக்கிறது போல அது அவ்ளோ ஈஸி இல்லை அவ ஸ்டேட்ஸ்க்கு தகுந்த வேலை தேடணும் நான் ட்ரை பண்றேன் என்றான் அப்பு .ஷியாம் எப்படியாம் ?தங்கமான டைப்புனு சொன்னா ரஞ்சனி. லவ் அண்ட் arrange marriage .கல்யாணமாகி 5 வருஷம்தான் ஆகுது .ம்ம் கஷ்டம்தான்

மறுநாள் அப்பு போன் பண்ணினான் .நான் சொல்றத கவனமா கேளு.இனி ரஞ்சனி விஷயத்துல தலையிடாத.இப்போதான் என் மனைவிக்கு எவனோ கால் பண்ணி மெரட்டிருக்கான் .இனிமேல் நாம இத பத்தி பேச வேண்டாம். என் மனைவி ரொம்ப பயந்து போயிருக்கா.நான் இன்னைக்கி நயிட்டே சிங்கப்பூர் போறேன் டேக் கேர் டா மச்சான் என்றான்

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை யாரை யார்ரா மெரட்டுறது என நினைத்தான். குழம்பி போயிருந்தான் .ஆனால் இந்த விஷயத்தில் இப்போதைக்கு மௌனம் காப்பதென முடிவெடுத்தான் 

இரண்டு நாட்கள் கழித்து unknown நம்பர் இல் இருந்து கால் வந்தது .ஹலோ நான் ரஞ்சனி பேசறேன் ப்ளீஸ் போனை வெச்சுடாதீங்க அவசரம் எங்க வீட்டுக்கு வர முடியுமா ?இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன் நீங்க பயப்படாதீங்க ...என்னவாயிருக்கும் என பலவாறு யோசித்தபடி சென்றான் .போலீஸ் நின்றிருந்தது .நீங்கதான் ராகவா ஆமா சார் சரி வாங்க நேத்து நயிட் ரஞ்சனி அப்பா suicide பண்ணிகிட்டாரு ஓ god நீங்களும் அப்புவும்தான் கடைசியா இங்க வந்தீங்களா ஆமா சார் சரி வாங்க ஸ்டேஷன் போய் பேசுவோம் .இருங்க சார் ஒரு நிமிஷம் ரஞ்சனியை பார்த்துட்டு போயிடுறேன் .அவங்க body வாங்க GH போயிருக்காங்க. போனை பிடுங்கி கொண்டார்கள். 

 இவனை ஒரு பெஞ்சில் உட்காரச்சொன்னார்கள் .கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ரஞ்சனி வந்து விட்டாள் கூடவே வக்கிலும் வந்திருந்தார் .சாரி ராகவ் எனக்கு ஹெல்ப் பண்ண போய் பரவாயில்ல ரஞ்சனி .இன்ஸ்பெக்டர் இல்லமா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க .அடிச்சாங்களா இல்லே போன் என்னாச்சு அவங்ககிட்டேதான் இருக்கு 

மை god .வக்கீல் ராஜு அமைதியாக இருப்பதை பார்த்து ரஞ்சனி ஏதாவது செய்யுங்களேன் என்றாள்.அங்கிருந்த constable கையில் காசை திணித்ததும் திரும்பவும் ராகவுடைய போன் கிடைத்தது . நீங்க போகலாம் இன்ஸ்பெக்டர் உங்களை போக சொல்லிட்டாரு என்றார் பணம் வாங்கிய போலீஸ்காரர் .

வாங்க போலாம் என்றவாறே நகர்ந்த போது ராகவின் போன் ஒலித்தது.என்னை யாரோ பொல்லொவ் பன்றாங்கடா ரொம்ப பயமா இருக்குடா ரஞ்சனிகிட்டே சொல்லி என்னை காப்பாத்துடா போன் cut ஆகிவிட்டது அப்புவின் குரல்தான் அது 

ரஞ்சனியின் முகம் பேயறைந்தாற்போல் ஆயிற்று .விடமாட்டான் அவன் என்னை வாழ விடமாட்டான் என்று அழ தொடங்கி விட்டாள்.அழாதீங்க மேடம் ப்ளீஸ் ப்ளீஸ் என்றவாறு அவளை சமாதானப்படுத்தினான் ராகவ். ரஞ்சனி அப்பாவை நல்ல முறையில் அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் ராகவ் .அப்புவுக்கு உதவுவதற்கு clue எதுவும் கிடைக்கவில்லை மறுபடி அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

வாட்ஸாப்பில் இருந்த குரூப்க்கு அப்பு பற்றி தகவல் தெரிந்தால் உனடியாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தான் .அவனுக்கு தெரிந்த கால் சென்டர் நண்பரிடமும் அப்புவின் நம்பரை trace செய்ய சொல்லி இருந்தான் .இன்னும் தகவல் வரவில்லை .

ரஞ்சனி வீட்டு மாடியிலேயே தங்கி விட்டான் ராகவ் .ரஞ்சனியும் குழந்தையும் கீழே ஒரு ரூமில் உறங்கி கொண்டிருந்தார்கள் .எதற்காக ரஞ்சனி அப்பா தீடிரென தற்கொலை செய்து கொண்டார் .அப்புவுக்கு என்ன ஆயிற்று என்று பல கேள்விகள் அவன் மண்டைக்குள் ஓடின .போலீஸ் விசாரணையில் அவருடைய போன் காணாமல் போனதாக பதிவாயிருந்தது .

மணி 2 ஆகி விட்டிருந்தது .தூக்கம் வரவில்லை.இவனுடைய போனை இரவில் on செய்ய வேண்டாம் என ரஞ்சனி கேட்டுக்கொண்டிருந்தாள் .

சிரமப்பட்டு கண் மூடி தூங்க முயற்சிதான் . என்னை காப்பாத்துடா என்ற அப்புவின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் .போனை ஆன் செய்தான் 

அப்புதான் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருந்தான் .தேங்க்ஸ் மச்சான் என்று 

இவன் எதுக்கு தேங்க்ஸ் சொல்றான் கால் பண்ணி பார்ப்போமா இது அப்பு குரல்தானா என்று குழம்பியவாறு போனை அணைத்தான் .காலையில் இவன் மட்டும் கோவிலுக்கு சென்றுவிட்டு எல்லா பிரச்னைகளும் சீக்கிரம் தீரவேண்டும் என வேண்டிக்கொண்டான் .எப்படியாவது ரஞ்சனிக்கு வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் 

திரும்ப வீட்டுக்கு வந்த போது வக்கீல் இருந்தார் .இனிமே நீங்க இங்க இருக்க வேண்டாம் நான் இருக்கேன் பாத்துக்க என்றார் .ஆமா ராகவ் இவர் என் அப்பாவோட நண்பர்தான் .உங்களை வீனா தொந்தரவு பண்னிட்டேன்.சரி அப்போ நான் கிளம்பட்டுமா அவள் பார்வை இருக்குமாறு கெஞ்சியது ஆனால் வக்கீல் ஒரு முடிவுக்கு வந்தவராக இருந்தார் 

ராகவ் மறுபடி அப்புவை தொடர்பு கொண்டான் .இம்முறை அவன் cut செய்தான் .கால் சென்டர் நண்பரை தொடர்பு கொண்டபோது கடைசி போன் லொகேஷன் தஞ்சாவூரை காட்டுவதாக சொன்னார் .இவனுக்கு சந்தேகம் வலுத்துக்கொண்டே போனது .எதற்கும் அப்பு வீட்டுக்கு போய் பாப்போம் என்று கிளம்பினான் .வீடு பூட்டியிருந்தது அக்கம்பக்கம் விசாரித்த போது அவர்கள் வீட்டை விற்று காலி செய்து விட்டு போனதாக சொன்னார்கள் .

கொல்லைப்புறம் போய் சுற்றி வந்தான் .அங்கிருந்தபடி அப்புவுக்கு போனை போட்டான் .போன் மணி அடித்தது போன் மணி ஒலி வீட்டுக்குள் இருந்து கேட்டது .இன்ஸ்பெக்டரை கெஞ்சி வரவழைத்தான் .வீட்டின் பூட்டை உடைத்தனர் .ஒவ்வொரு அறையாக சோதித்தனர்.அதிக பொருட்கள் இல்லை காகிதங்கள் சிதறிக்கிடந்தன .மாடி அறைக்கு போனார்கள் .அங்கேயும் யாரும் இல்லை. போனை இன்ஸ்பெக்டர் பத்திரமாக எடுத்து வைத்தார் .மொட்டை மாடி பயமுறுத்துவதாக இருந்தது .எதுக்கு சார் வீணா டைம் வேஸ்ட் பண்றீங்க .அப்பு இங்க இல்ல சார் என்றார் இன்ஸ்பெக்டர் .வாட்டர் டேங்க் அருகே சென்ற போது துர்நாற்றம் வீசியது .இவனுக்கு கை காதல் உதறல் எடுத்து அது அப்புவாக இருக்க கூடாதென வேண்டிக்கொண்டான். அது அப்புவேதான். ராஸ்கல் நீயே கொன்னுப்புட்டு நடிக்கிறியா என்று இவனை நோக்கி பாய்ந்தார்கள் .