webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part24

இந்த மூணு பேரும் அதே அபார்ட்மென்ட்லதான் இருக்காங்களான்னு கண்டுபிடிக்கணும் . பத்திரிக்கையாளர்கள் பரந்தாமனிடத்தில் கேள்விகளை எழுப்பினார்கள் . உண்மை குற்றவாளிகளை அரெஸ்ட் செய்த போலீசுக்கு நன்றி என்று சொன்னார். ஒரிஜினல் போல ஒரு fake வீடியோ வை தயார் செய்து வெளியிட்டிருக்கிறார்கள் . நந்தா,ரமீஸ் இரண்டு பேரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை . ஆனந்த் agency பூட்டி கிடந்தது .யார் இந்த எங்கே விடியோவை தயார் செய்திருப்பார்கள் . இதனால் யாரை தப்பிக்க வைக்க பார்க்கிறார்கள் என்ற உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் 

 தீபு நானும் தீபக்கும் அந்த அபார்ட்மெண்ட்கு போகிறோம். அரெஸ்ட் ஆன 3 பேரும் அப்பாவிகளா இல்லை கிரிமினல் லிஸ்ட் இல் உள்ளவர்களா என விசாரி . சரி சார். தீபக் லிப்ட்டில் வீடியோ எடுத்த நபர்களை காட்டி விசாரித்தபோது அவர்கள் 2nd floor இல் இருப்பதாக சொன்னார்கள் கார்த்திக் , நரேஷ், தீபன் . அவர்கள் ரொம்ப நல்ல மாதிரி என்று சொன்னார்கள் . முன்பு அவர்கள் fourth floor இல் இருந்ததாகவும் ஏனோ திடீரென்று மாறி விட்டார்கள் . அவர்களில் நரேஷ் மட்டும் வேலைக்கு போவதாகவும் ,மற்றவர்கள் ரூமில் இருப்பார்கள் போனால் பார்க்கலாம் .அபார்ட்மெண்ட் b6 காலிங் பெல் அமுக்கினான் . நரேஷ் இருக்காரா என்று குரல் கொடுத்தான் . நரேஷ் வேலைக்கு போயிருக்கான் நாங்கதான் இருக்கோம் , ஒரு கேம்ப் நடத்துறோம் ஜாப் சர்ச் பண்றவங்களுக்காக அவர்தான் முன்னாடி உங்களை refer பண்ணியிருந்தாரு . உங்க resume கிடைக்குமா . தரேன் சார் . என் பேரு கார்த்திக். அவர் பேரு தீபன் . சரி சார் உங்க பேரு சொல்லவே இல்லையே என்றான் தீபன். நரேஷ் வந்தா ராம் வந்தேன்னு சொல்லுங்க . ஓகே சார் . அந்த வீடியோவில் இருந்தவர்கள் இவர்கள்தான் சார். ஒரு வேலை போதையை போட்டால் ஆளே மாறி விடுவார்களோ என்னவோ . 

இவர்கள் resume பார்த்த போது எளிமையான பின்னணியில் இருந்து வந்திருந்தார்கள் . தீபு என்னாச்சு விசாரிச்சியா என்றான் , மூணு பேரும் பக்கா கிரிமினல்ஸ் கொஞ்ச நாள்ல encounter ல போட போறாங்க . அதனால மக்கள் இந்த பிரச்னையை இதோட மறந்துடுவாங்க . nurse ருக்குமணி மறுபடி போன் பண்ணலியே இல்ல சார். இங்க அந்த மூணு பேரும் safe ஆ இருக்காங்க . அவங்களை அரெஸ்ட் பண்ண ஏதாவது எவிடென்ஸ் வேணும் . இந்த வீடியோ எவிடென்ஸ் போதாது . லிப்ட் ஆபரேட்டர் மணிக்கு ஒரு தடவை ட்ரை பண்ணி பாரேன் . இல்லேன்னா அவர் வீட்டுக்கு போய் பாரேன் . அவர் இப்போ இப்ப டூட்டில இருப்பார் தடவை சாயங்காலம் போறேன் சார், அதுவும் சரிதான் .

ஒரு விஷயம் கவனிச்சியா தீபக் அன்னிக்கி தீபனோட பர்த்டே .அவனோட பிறந்த தேதிலதான் இந்த சம்பவம் நடந்து இருக்கு . அப்போ டைம் என்ன இருக்கும் கரெக்ட்டா மதியம் 3 மணி . நரேஷ்தான் ரொம்ப அடாவடியா நடத்துகிறான் விடியோவுல . அவன்தான் மெயின் ஆளா இருப்பானோ ? அவன் நெஜமாவே வேலைக்கு போறானோ என்னவோ .இல்ல எங்கேயாவது தலைமறைவா இருக்கானா ? சரி எல்லோருக்கும் வீடியோ என்கிட்டே இருக்குனு மெசேஜ் அனுப்ப சொன்னேனே ஏதாவது ரிப்ளை வந்ததா. இருங்க சார் அந்த போன் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்கேன் ஆன் பண்ணி பார்க்கிறேன் . எவ்ளோ பணம் வேணும் என பிரவீனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது .

ஆபீஸ் வந்தவுடன் அந்த விடியோவை மறுபடி ஓட்டி பார்த்தார்கள் .தீபிகா வின் கையிலிருந்த செல்போனை பிடுங்குவது நரேஷ் என்று தெரிந்தது .

 அவர்களுடைய உதட்டசைவை வைத்து இருபது லட்சம் பணம் கொடு இல்லேயின்னா உன்னோட வீடியோ உன் புருஷன் கைக்கு போயிடும் . அப்போ தீபிகாவும் ஏதோ சம்பந்தப்பட்டு இருப்பாங்க போல . இவனுக மொட்டை மாடியில கேமரா ஏதாவது fix பண்ணி அதுல தீபிகாவும் ப்ரவீனும் மாட்டி இருப்பாங்களோ . நல்லா இருக்கு உன் கற்பனை . பின்ன எதுக்காக 20 லட்சம் கேட்டிருப்பாங்க . பேசாம வீடியோ வை ரிப்போர்ட் பண்ணா என்ன சார் . இப்போ நம்மகிட்ட இருக்குற ஒரே ஆதாரம் இதுதான் . போலீஸ் இது போலின்னு சொன்னுடுச்சுன்னா. எதுவும் நடக்கலாம் . 

பிரவீன்க்கிட்டேயிருந்து கால் வந்தது . யாரடா நீங்க என்ன வீடியோ டா அது எவ்ளோ பணம் வேணும் நான் தரேன் . அண்ணியை விட்டுடுங்கடா என ஆவேசமாய் பேசினான் . தீபக் நான் உங்களை மீட் பண்ண முடியுமா என்று கேட்டான் . நாளைக்கு சாயங்காலம் 5 மணிக்கு நேரு பார்க்குக்கு வாங்க என்றான். 

பிரவீனிடம் விடியோவை காண்பித்தார்கள் . இது fake வீடியோ நான் அப்போதானே இவங்க கிட்டே பேசிட்டு போனேன் . இவங்க என் திக் friends .இவங்க போய் சே சே இருக்காது . எதுக்காக டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு . சரி பிரவீன் அப்படியே இருக்கட்டும் . நரேஷ் எதுக்காக உங்க அண்ணி செல்போனை பிடுங்கனும் . யோசிச்சு பாருங்க . உங்களுக்கு video வாட்ஸாப்ப் பண்ணியிருக்கேன் .பிரவீன் நரேஷுக்கு போன் செய்தான் . மச்சான் நீ உடனே கெளம்பி நீலாங்கரைல இருக்குற வீட்டுக்கு வா என்றான், அவனுக ரெண்டு பேரையும் வேணா கூப்பிட்டுக்க செம பார்ட்டி இருக்கு மச்சான் ஒரிஜினல் வீடியோ கெடைச்சிடுச்சி என்றான். நிஜமாவா என்றான் நரேஷ்?. ஆமா மச்சான் .

தீபிகாவுக்கு நினைவு இன்னும் திரும்பவில்லை . இப்போ ப்ரவீனும் அவங்க கூட கூட்டாளியா இருந்தா என்ன ஆகும் ராம் சார் .இருக்காது என நம்புவோம் . ஏன் நரேஷ் இப்படியா மாட்டிக்கிறது மாதிரி பண்ணுவே என்றான் . நீ சொல்லித்தானே பண்ணோம் . நானும் அண்ணியும் தப்பு பண்ணி வீடியோ எடுத்தது உண்மை . நான் உங்ககிட்டே சொல்லி பணம் கேக்க சொன்னதும் உண்மை . அண்ணி பேருல அப்பா எல்லா சொத்தும் எழுத போறார்ங்கிற உண்மை தெரிஞ்சதோ அன்னைக்கே எனக்கு வெறுத்து போச்சு .ஆனா கேமரா இருக்குற இடத்துல இதை செய்ய சொல்லி சொன்னேனா ? சாரி பிரவீன் . இப்போ அவன்கிட்டேயிருந்து வீடியோ வாங்கியாகணும் . அந்த ரிஸ்க்கை நானே எடுக்கிறேன் .கார்த்திக்கும் ,தீபனும் இதை கேட்டதும் அதிர்ந்தார்கள்.பேசாம வெளிநாடு போங்கடானு சொன்னா அதையும் கேக்க மாடீங்க .

 என் அண்ணி மேல எனக்கு இப்போ ஆசை இல்லை . ஆனா தவறுதலான தொடர்பு இருந்ததுன்னு தெரிஞ்சா எங்க அண்ணன் அமர் என்னையும் அண்ணியையும் கொன்னுடுவான் . அடுத்து என்ன செய்யப்போறோம் சார் . பிரவீன் அவங்களோட கிளோஸ் friends னு தெரிஞ்சப்புறம் இனிமே அவன்கிட்ட பேசுறது வேஸ்ட். நாம மணியை தேடுறதும் வேஸ்ட் . தீபு அந்த மணியை காண்டாக்ட் பண்ணியா . இல்லை சார் வேண்டாம் காண்டாக்ட் பண்ண வேண்டாம் வந்துடு என்றான் ராம் . என்னாச்சு சார். இங்கே பிரவீன் இதுல involve ஆயிருக்கிற மாதிரி தெரியுது . அதனால கொஞ்சம் வெயிட் பண்ணி பாப்போம் . 

ஏற்கனவே 3 பேர் நமக்கு பதிலா உள்ளே போயிட்டாங்களே அப்புறம் ஏன் மச்சான் கவலை படுறே . அவங்களை விட நீங்கதான்டா danger . இந்த கேஸ் இப்போ ராம்னு ஒருத்தன் handle பன்றேன். அதான் அண்ணியோட அப்பா இந்த கேஸ் ஐ போலீஸ் நம்பாம இவன்கிட்டே குடுத்தார். நீங்க மாட்டுனா நானும் மாட்டுவேன். அதனாலே எல்லாம் கொஞ்ச நாள் ஊருக்கு போய் இருங்க . நிலமையை சரி பண்ணிட்டு நானே உங்கள கூப்பிடுகுறேன் . உன்னைத்தாண்டா நம்பி இருக்கோம் அண்ணி போனை என்னடா செஞ்ச அத வெச்சு நான் என்ன பண்ண முடியும் அத ஓபன் பண்ண முடில அப்படியே வெச்சுருக்கேன் . மொதல்ல அத என்கிட்டேகொண்டு வந்து குடு .

அடுத்த வாரத்தில் மூவரும் ஊருக்கு போவதென முடிவெடுத்தார்கள் .பரஸ்பரம் போன் கூட செய்துகொள்ள வேண்டாம் என பிரவீன் சொல்லியிருந்தான். தீபு இப்போ நாம செய்ய வேண்டியது என்ன என்றான் ராம். அந்த விடியோவோட ஒரிஜினல் தன்மையை டெஸ்ட் பண்ணி பார்க்க சொல்லி கோர்ட்ல சப்மிட் பண்ணலாம் . அது உண்மைன்னா போலீஸ் அரெஸ்ட் பண்ணட்டும் . இதை வெச்சு மட்டும் அரெஸ்ட் பண்ண முடியுமா . ரெண்டு நாளிலே வெளி வந்துடுவாங்க . அதுவும் சரிதான். போலீஸ் அடலீஸ்ட் விசாரிக்கவாவது செய்வாங்கள்ல . 

கோர்ட்டில் வீடியோ ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது . இது உண்மைதானா என விசாரிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. நரேஷ், கார்த்திக், தீபன் மூவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது . இதை பிரவீன் எதிர்பாக்கவில்லை. போலீஸ் விசாரணையில் மூவரும் எதையும் சொல்லவில்லை. வீடியோ ஆவணம் உண்மைதானா என கண்டறிய இரண்டு வார அவகாசம் கோரியிருந்தது போலீஸ்.

பிரவீன் அதற்குள்ளாக ஒரு முடிவெடுத்துவிட வேண்டும் என நினைத்தான், மூவரையும் சென்னைக்கு அழைத்து பேசலாமா இல்லை தீர்த்து விடுவோமா என யோசித்தான். 

ஏன் தீபு இதுல பரந்தாமன் தலையிடலே . அவர்தான் மொதல்லேயே அமர் மிலிட்ரி வேலைக்கு போறது பிடிக்கல அதனால சொத்து குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரே . ஆனா அவர் லாஸ்ட் வீக் கூட தீபிகாவை பார்த்துட்டு போயிருக்கார் .மொட்டை மாடி இருள் பூச துவங்கியிருந்தது . குழந்தைகள் அம்மாவுக்கு பயந்து அவசர அவசரமா படிகளில் இறங்கி கொண்டிருந்தார்கள். ப்ரவீனுடைய கை,கால் கட்டப்பட்டிருந்தது . நீ எனக்கு செஞ்ச துரோகத்தை என்னைக்கும் மறக்க மாட்டேன். யார் நீ என கேட்டான். பேசுனா நீ உயிர் வாழுற நேரம் அடுத்த செகண்ட் கூட இருக்காது . மாடியிலேந்து குதிச்சு நரகத்துக்கு போ .அந்த போன் எங்க எந்த போன் தீபிகாவோட போன் . என் பைக்ல இருக்கு . ரொம்ப நன்றி. அடுத்த நிமிடம் இல்லை அதற்கு அடுத்த நிமிடம் மாடியிலிருந்து வீசப்பட்டான் பிரவீன் .