webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part23

தீபு திரும்ப டூட்டிக்கு வந்துவிட்டாள்.ஒரு வருஷத்துக்கு பிறகு திரும்ப வந்து விட்டாள். குழந்தையை மாமியார் வீட்டில் விட்டிருந்தாள் . தீபு லதாவுடன் தங்குவதாக ஏற்பாடு செய்து இருந்தான் ராம். வாரம் ஒரு தடவை திருத்தணி போய் பார்த்துக்கொள்ளலாம். தீபு சுறுசுறுப்பாக பெண்டிங் கேஸ் ஏதாவது இருக்கிறதா என்றாள். பெண்டிங் payment தான் இருக்கிறது என்றான் தீபக். தீபுவுக்கு ஒரு பிரத்யேக கேபினை உருவாக்கி குடுத்திருந்தான் ராம் . ரொம்ப தேங்க்ஸ் சார் என நெகிழ்ந்தாள். பெண்டிங் கேஸ் ஒன்னு இருக்கு அத இப்போ பாக்குறதா வேண்டாமா தெரியலியே . சும்மா சொல்லுங்க.. சார் அந்த தீபிகா கேஸ் . வேண்டாம்மா அத நானே பாக்குறேன் . இல்ல சொல்லுங்க லதா என்றாள் .

தீபிகா வயசு 24 . கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆச்சு .மாடிலேயிருந்து குதிச்சு இப்போ கோமா ல இருக்காங்க . husband மிலிட்டரில இருக்கார் . விசாரிச்சதுல வரதட்சணை கொடுமை அப்டின்னு சொன்னாங்க . அவங்க மாமனார் தொந்தரவு கொடுத்ததாகவும் சொல்றாங்க . அவங்க மாமனார் ex எம் எல் ஏ பரந்தாமன் . அவருக்கு இன்னொரு பையன் இருக்கான் praveen மெடிக்கல் காலேஜ் படிக்கிறான் . அவன்தான் இப்போ அவளை கவனிச்சுக்குறான். தீபிகா அப்பா, அம்மா ? அம்மா மட்டும் இருக்காங்க .அவங்களும் கொஞ்சம் வயசானவங்கதான் . தீபிகாவை மாடிலேயிருந்து யாரோ தள்ளி விட்டதாகவும் பேச்சு அடிபடுது . போலீஸ் தீபிகா கண் முழிக்கட்டும்னு வெயிட் பண்றாங்க . அவங்க husband இப்போ வர முடியாத சூழ்நிலைல இருக்கார்.கடைசியா அவர் வந்துட்டு போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் சம்பவம் நடந்துருக்கு . டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க . தானா சரியானாதான் உண்டுன்னு சொல்றாங்க .ம்ம் இவ்ளோ சிக்கல் இருக்கா . அப்போ தீபிகா அப்பா உயிரோட இருந்தார் . என் பொண்ணை காப்பாத்துங்க சார் அப்டினு சொன்னார் . கேஸ் விசாரணை நடக்கும் போதே இப்டி ஆயிடிச்சு . அதுக்கப்புறம் அவர் சோர்ந்து போய்ட்டார் . மூணு மாசம் முன்னாடி எறந்துட்டார் . தீபிகா husband பேரென்ன அமரன் . சார் என்ன பண்ணலாம் . இப்போ எந்த எவிடென்சும் இல்ல . திரும்ப மொதல்லேருந்துதான் ஆரம்பிக்கணும் . ஓகே பரந்தாமன் இருக்குற கட்சிதான் இப்போ ஆட்சில இருக்கு அதுவும் இந்த கேஸ் ல போலீஸ் மெத்தனமா இருக்க காரணம் . 

இந்த கேஸ் re ஓபன் பண்ணுவோம் சார் ப்ளீஸ் . ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்துன மாதிரி இருக்கும் . ஆல் ரைட் ஆனா பாதியிலே ஓட கூடாது . பல சம்பவங்களை சந்திக்க வேண்டியிருக்கும் . இந்த கேஸ் நாமதான் நடத்தறோம்னு வெளியே தெரியவே கூடாது . ஒரு பக்கம் பத்திரிக்கைகாரங்களும் இந்த கேஸ் பத்தி நியூஸ் கெடைக்காதான்னு அலையுறாங்க . அப்புறம் அந்த பொண்ணு உயிருக்கே ஆபத்தாயிடலாம் . தீபிகாவை முதலில் பார்த்து விடலாம் என்று ஹொஸ்பிடலுக்கு போனார்கள் . நேத்துதான் அவங்க வீட்லேயே இருந்து பாத்துக்கலாம்னு சொல்லி டிஸ்சார்ஜ் பண்ணாங்க . nurse ருக்மணியை ஹோம் நர்சா அப்பொய்ண்ட் பண்ணி இருக்காங்க . சரி நாங்க வீட்ல போய் பார்க்கிறோம் . ஆழ்வார்பேட்டையில்தான் தீபிகாவின் அம்மா வீடு இருந்தது .

தீபிகாவின் அமமாவுக்கு ராமை தெரியும் . போன் பண்ணி விட்டு போனால்தான் அந்த அபார்ட்மெண்ட் உள்ளேயே நுழைய முடியும் . ஏற்கனவே ராம் லதாவும் தீபுவும் வருவார்கள் என அவரிடம் சொல்லி இருந்தான் . அவர்கள் போன நேரம் ப்ரவீனும் இருந்தான் . நாங்க தீபிகாவுக்கு தெரிஞ்சவங்க இப்போதான் கேள்விப்பட்டோம் அதான் பாக்கலாம்னு வந்தோம் . ரொம்ப நேரம் லாம் இருக்க வேண்டாம் . பார்த்துட்டு உடனே கிளம்புங்க என்று சிடுசிடுத்தான் . 

இவர்கள் தீபிகா அம்மாவிடம் பேச்சு கொடுத்தார்கள் . நல்லாத்தான் சந்தோசமா இருந்தாங்க . அமரனுக்கு கொஞ்சம் குடி பழக்கம் உண்டு . மிலிட்டரி நா கொஞ்சம் அப்டி இப்படித்தானே அதான் கண்டுக்காம விட்டாச்சு . அமரன் பரந்தாமனுக்கு ரெண்டாவது மனைவிக்கு பொறந்தவர். அவருக்கு அமரன் மிலிட்டரி போறது பிடிக்கல . சொல்லி பார்த்தார் அமரன் கேக்கல . அதே சமயம் மருமகண்ணா ரொம்ப பாசமா இருப்பாரு . அமரனுக்கு சொத்துல பங்கு கிடையாதுன்னு சொல்லிட்டாரு . அமர்னாட அம்மா அப்பத்தான் என் பொண்ண கொடுமை படுத்த ஆரம்பிச்சது . இதை பரந்தாமன் கண்டிச்சாலும் ரொம்ப எல்லை மீறி போயிடுச்சி 

நாங்க போய் அழைச்சிட்டு வந்துட்டோம் . எங்களுக்கு ஒரே பொண்ணு .அமரன் வந்து சமாதானப்படுத்தி கூப்பிட்டு போனார். அவர் போக போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி மாடிலேயிருந்து குதிச்சிடிச்சி . ம்ம் சரிம்மா நாங்க வரோம் . சரி பிரவீன் ? என இழுத்தாள் லதா.பிரவீன் ரொம்ப நல்ல பையன் ஆனா கோவக்காரன் என சொன்னாள். அவங்க போன் டைரி ஏதாவது கிடைச்சுதா இல்லாம அன்னிக்கி என்ன நடந்ததுன்னு யாருக்குமே தெரியல . துணி காய போட போறேன்னு பிரவீன் கிட்டே சொல்லிட்டு போயிருக்கா . நானும் வந்து ஹெல்ப் பண்ணவா அண்ணி அப்டின்னுருக்கான் . வேண்டாம்னு சொல்லி இருக்கா. 

சரிம்மா நாங்க வரோம் . ஏதாவது urgent னா எங்களை கூப்பிடுங்க. தீபிகா விழுந்த வீடு குரோம்பேட்டையில் இருந்தது . அங்கே போய் பாப்போமா அங்கே என்ன இருக்கு மாடி. மொட்டை மாடி வேறென்ன இருக்கு ? நம்ம சாதாரணமா போய் விசாரிப்போம் . தீபிகா விழுந்ததை பாத்தவங்க யாராவது இருப்பாங்க . ராம் போன் செய்தான். ஏதாவது அப்டேட் என்றான் . ஒண்ணுமில்லை சார் எங்களுக்கு அந்த பிரவீன் மேலயும் சந்தேகம் இருந்துச்சு .இப்போ அவன் கவனிச்சிக்கிறத பாக்கிறப்போ அவன் மேல எந்த சந்தேகமும் இல்லை . இப்போ நாங்க குரோம்பேட்டை போய்கிட்டு இருக்கோம். சரி பார்த்துட்டு வாங்க. அங்கு இருக்கும் இஸ்திரிகாரரிடம் விசாரித்த போது ரொம்ப நல்ல பொண்ணும்மா அது .நாந்தான் கீழே விழுந்தப்ப அம்புலன்ஸ்க்கு போன் பண்ணினேன் .இப்போ எப்படிம்மா இருக்காங்க என்றான் . இன்னும் கோமா ஸ்டேஜ் லதான் இருக்காங்க . யாரும் தள்ளிவிட்டது சொல்றாங்களே அப்படியெல்லாம் இல்ல அவங்களா தவறி விழுந்திருக்கணும் இல்ல குதிச்சிருக்கணும் . நீ என்ன பார்த்தே அவங்க கீழே விழற வேகத்தையும் அடி பட்ட விதத்தையும் பார்த்தா அவங்க குதிச்ச மாதிரிதான் இருந்தது .ரொம்ப தேங்க்ஸ் பா. 

செக்யூரிட்டி ஐ அழைத்துக்கொண்டு மேலே போய் பார்த்தார்கள் . செக்யூரிட்டி போலீஸ் எல்லாம் வந்து செக் பண்ணிட்டு போயிட்டாங்கம்மா என்றார். மாடிக்கு வர்றதுக்கு லிப்ட் இருக்கே. அன்னிக்கி தீபிகா லிப்ட் ல வந்தங்களா .லிப்ட் ல கேமரா பொருத்தி இருக்கே அத செக் பண்ணினாங்களா .தெரியலேம்மா . அந்த agency பேரு ஆனந்த் agency . ரமீஸ் தான் அதுக்கெல்லாம் பொறுப்பு .கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஒரு விபத்துல அடிபட்டு இப்போ வீட்டுல இருக்கான் .ஆனந்த் agency ஐ தொடர்பு கொண்ட போது ரமீஸ் விலாசம் கொடுத்தார்கள் . ரமீஸ் வீடு ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்தது. லிஃப்டுக்குள்ளேதான் ஏதோ நடந்திருக்கு தீபு என்றாள் லதா. வேற யாரும் மத்த floor லேயிருந்து மொட்டை மாடிக்கு வந்தங்களான்னு பாக்கணும் . ரமீஸ் தூங்கிக்கொண்டிருந்தான் . இடது காலில் பெரிதாக bandage சுற்றப்பட்டிருந்தது . அவனுடைய அம்மா அவனை எழுப்பினாள். யார் நீங்க அதெல்லாம் அஸோஸியேஷன் கேக்காம எந்த விடியோவும் பாக்க முடியாது . நாங்க உங்களுக்கு எல்லா ஹெல்பும் பன்றோம் . எல்லாத்துக்கும் அந்த 4th floor பசங்கதான் காரணம் அவனுங்கதான் கஞ்சா அடிச்சிட்டு அந்த பொண்ண மிரட்டி இருக்கானுங்க . யார் அவங்க எல்லாருமே படிச்சிட்டு வேலை இல்லாம இருக்குறவனுக பேரு குமாரு,ஜோஸ்,ஹமீது .இப்போ அவனுக அங்க இல்லே எல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டானுக .எங்களுக்கு அந்த வீடியோ வேணுமே . நான் நந்தா கிட்ட சொல்றேன் நாளைக்கு இங்கே வந்து வாங்கிக்கங்க . ராம் பரவாயில்லையே அந்த buliding லிப்ட் மேன் யாருமில்லையா . அதையும் விசாரிச்சுட்டு வாங்க. யாரு மணியா அவரு வேலைய விட்டு நின்னுட்டாரு . போன் நம்பர் வாங்கிக்கொண்டார்கள் . 

ஜோஸ்,ஹமீது ,குமாரு மூணு பேரும் தான் தீபிகாவோட தற்போதைய நிலைக்கு காரணமா. போலீஸ் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னு பாக்கணும் நான் ஏரியா இன்ஸ்பெக்டர் கம்லேஷ்க்கிட்டே பேசுறேன் . தீபக் நாளைக்கு அந்த விடியோவை மறக்காம கலெக்ட் பண்ணிடு.மணி போன் சுவிட்ச் ஆப் ல இருக்கு . மணி மேல ஏதாவது ஏற்கனவே காம்ப்லின்ட் இருக்கான்னு செக் பண்ணனும் . அந்த மூணு பேரும் இப்போ வெளிநாட்டுல இருக்கறதா சொன்னான் ரமீஸ். அது உண்மையா இல்லையானு கண்டுபிடிக்கணும் தீபு நீ பாஸ்போர்ட் ஆபீஸ்ல காண்டாக்ட் பண்ணி விசாரி .ப்ரவீனுக்கு ஏதோ ஒரு நம்பர்லேயிருந்து எங்ககிட்ட அந்த வீடியோ இருக்குனு மெசேஜ் பண்ணு.பரந்தாமனுக்கு ,அமரனுக்கு எல்லோருக்கும் மெசேஜ் பண்ணு . அவங்க ரியாக்ஷன் பாக்கலாம் . தீபக் ஆயிரம் விளக்கு பகுதிக்கு போனான் . நந்தா இப்போ வந்துடுவான் இருங்க சார் என்று உக்கார சொன்னான் . நந்தாவுக்கு போன் செய்தான் . நந்தா இப்போதுதான் குரோம்பேட்டைக்கு வந்திருப்பாகாகவும் நீங்க அங்கேயே போய் வாங்கிக்குங்க சார் என்றான்.தீபக் குரோம்பேட்டை வீட்டுக்கு போனான் . தேதி தெரியுமா சார் . 13 12 2016 . கிடைச்சிடிச்சி சார் பார்த்து எதுனா பண்ணு சார் என்றான் . 1000 ரூபாய் கொடுத்தான் . nurse ருக்மணியிடம் இருந்து தீபுக்கு அழைப்பு வந்தது . பிரவீன் பிரவீன் சொல்லிட்டு மயக்கமாயிட்டாங்க என்றாள் .தீபக் டேப்பை பத்திரமாக எடுத்துக்கொண்டு ஆபீஸ் விரைந்தான் . பிரேக்கிங் நியூஸ் ஓடி கொண்டிருந்தது மூன்று இளைஞர்கள் போதையில் அட்டகாசம் கோமா நிலைக்கு போன எம் எல் ஏ மருமகள் . வீடியோ எப்படி லீக் ஆச்சுன்னு தெரியலையே . உன்கிட்ட இருக்க விடியோவை போடு . அதை பார்த்ததும் அதிர்ந்தார்கள் அதில் இருந்த இருந்த வாலிபர்கள் வேறு இதில் இருந்த வாலிபர்கள் வேறு. தொடர்ந்து அந்த மூவரும் கைது என்ற பிரேக்கிங் நியூசும் வெளியானது .