webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part19

ஸ்ரீக்கு வந்த மெசேஜ் எவனோ அனுப்பியதில்லை சௌம்யாவின் கணவர் அனுப்பியது, இது பற்றி அவரிடமே கேட்க போன் போட்ட போது என்னுடைய போனை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் மன்னிக்கவும் என்ற தொனியில் பேசினார். ஸ்ரீ நீ கொஞ்சம் அமைதியா இரு எப்படியும் புடிச்சிடுவோம் . மொதல்ல பத்ரி இப்போ ரமேஷ் அடுத்து நீன்னு ஒரு மெசேஜ் . எனக்கு பயமா இருக்கு . இட்ஸ் ஓகே என்று விடை பெற்றான் .

ஒரு சேஞ்சுக்கு நாளைக்கு உன் ஆபீஸ் போயேன் ஏன் வீட்டுக்குள்ளே அடைஞ்சு கெடக்குறே . சரி நாளைக்கு போறேன். 

ராம் அந்த டிஜேவை அரெஸ்ட் செய்து விசாரிக்க சொல்லலாம் என நினைத்தான். தீபக் அதற்குள்ளாக அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைதான் தோணுது . இந்த சவுரி முடியை பார்த்தீங்களா நிச்சயமா ஒரு பொண்ணோடதுதான். இதையும் ஏற்கனவே எடுத்த சாம்பிள் கம்பர் பண்ணா தெரிஞ்சுடும் . வெரி குட் தீபக் . என்னால எதையும் யோசிக்க முடில நீ கொஞ்சம் ட்ரை பண்ணி இந்த கேஸ் சொல்லவே பண்ணு. இது ஒன்னும் சீரியல் கொலை எல்லாம் இல்லை சார் .பத்ரியை கொன்ன பட்டேர்ன் வேற இந்த பட்டேர்ன் வேற .பத்ரியை கொன்னவங்க ஒருத்தர்தான். ரமேஷ் உருவத்தை வீச்சும் அவர் போராட முயற்சி பண்னுனதை வெச்சி பாக்கும்போது ரெண்டு பேர் சேர்ந்துதான் கொன்னிருக்கணும் .

 

உங்க friends லிஸ்ட்டை அனலிஸ் பண்ணதுல ஸ்ரீ மேல ஆசை பட்டது யாரு அவங்களைத்தான் அவனை தேடி பிடிச்சு கொல்றான் . தீபக் அப்படினா மொதல்ல நடந்தது ஆத்திரத்துலேயும் இப்போ நடந்தது பிளான் பண்ணியும் பண்ணி இருகாங்க. அவங்க ரமேஷோட கிளோஸ் friend ஆ கூட இருக்கலாம் . வேற யாரு அந்த லிஸ்ட் ல இருக்கா ? கோபி அவளை ப்ரொபோஸ் பண்ணி அவனுக்கும் பத்ரிக்கும் பெரிய பிரச்னையே நடந்தது . கோபி இங்கே எங்கே கோவை ல . சரி வாங்க கோவை போவோம் . மொதல்ல அவன்கிட்டே பேசி பாப்போம் . கோபி நான் ராம் பேசுறேன் எங்கே இருக்க சென்னை வந்துருக்கேண்டா சென்னை ல எங்க இருக்க . wife க்கு முடியலன்னு ஹாஸ்பிடல் வந்திருக்கோம் நைட் கோவை போயிடுவோம் . நீ அங்கேயே இரு எனக்கு லொகேஷன் அனுப்பு நான் வந்து நேருல விஷயத்தை சொல்றேன் .

கோபி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிரித்தான் . எப்பவோ நடந்ததுக்கு இப்போ போய் கொல்லுவாங்களா . டேய் நீ டிடெக்ட்டிவ் ஆ இல்லே சும்மா ஊரை ஏமாத்துறியா சரி வா ஏதாவது சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் . வேண்டாம்டா எதுக்கும் நீ எச்சரிக்கையா இரு . நீயும் உன்னோட ப்ரெடிக்ஷனும் . சரி விடுங்க சார் அவருக்கு நல்லது சொல்ல போய் நம்மளையே கிண்டல் பன்றாரு . நம்ம போலாம் .ராம் அப்டின்னு கூப்பிட்டான் . எதுக்கும் பவன் கிட்டேயும் சொல்லி வை . அவன்தான் அன்னிக்கி போதைல உளறிக்கிட்டு இருந்தான் .பவனுக்கு போனை போட்டான் .பவன் cut செய்தான்.நெஸ்ட் என்ன தீபக் .

மீனா அவங்க மேல எனக்கு சந்தேகமா இருக்கு ,எதனால தீபக் அவங்க சாவுக்கு வரலேங்கிறதுனாலயா இல்லே அவங்க இப்போ எங்க இருக்காங்க சென்னை ல தான் அசோக் நகர் ல இருக்கா. சரி போய் விசாரிச்சு பாப்போம் . மீனாவுக்கு போன் செய்து விட்டு போனால் உஷாராகிவிடுவாள் என தோன்றியது . மீனா வீட்டில் இல்லை அவ ஊருக்கு போய் ஒரு வாரம் ஆச்சே . எந்த ஊரு பாட்டி கொடைக்கானல் .சரி பாட்டி நாங்க வந்தோம்னு சொல்லுங்க ராம் வந்தேன்னு சொல்லுங்க. அவ நாளைக்கு வந்துடுவா நான் போன் பண்ண சொல்றேன் . 

பவன் போன் செய்தான் என்னடா இன்னும் உன் தொல்லை தாங்க முடியல . என்ன விஷயம் . அது வந்து டேய் நான் உன் தொல்லை தாங்கமுடியாம கொடைக்கானல் வந்துருக்கேண்டா. கோபி போன் பண்ணான். யாருதாண்டா ஸ்ரீ யை விருமபலை.ஓகே நீ போனை வை என்றான் ராம் . இவன் எதுக்குடா கொடைக்கானல் போனான் . ஜஸ்ட் எ coincidence . மீனா அவ புருஷன் ரெண்டு பேரு மேலையும்தான் டௌட். எப்படியும் திரும்பி வந்துதானே ஆகணும் .

டி ஜே முருகன் போன் பண்ணியிருந்தான் . சார் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். சொல்லுப்பா அன்னிக்கி பத்ரியை அட்டாக் பண்ணவனை நாங்க பார்த்தோம் . கத்தியால் குத்திட்டு ஓடுனவன் இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்கிறான். சரி நீ எப்போ எங்கே இருக்கிறே . வீட்லதான் நீ அங்கேயே இரு அரைமணி நேரத்துல வரேன் . வீட்டுக்கு போய் பார்த்த போது கூட்டம் கூடி இருந்தது . டி ஜே முருகன் தூக்கில் தொங்கியிருந்தான் . அவனுடைய அசிஸ்டன்ட் கிட்டே விசாரித்தான் . அந்த பொண்ணு suicide பண்ண அதே நாள்ல செத்துருக்காப்லயே .

அசிஸ்டன்ட் கிட்டே செல் போனை வாங்கி பார்த்தார்கள் . அது ஒரு சாதாரண போன். பத்ரி கொலை செய்யப்பட்ட அன்று எடுத்த போட்டோ ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார்கள். பார்த்தவுடன் அதில் எல்லாம் பெண்கள் போட்டோவாக இருந்தது .சரி தீபக் வா போகலாம் . இனிமே அலைஞ்சு பிரயோஜனமில்லை . அவன் அவன் விதிப்படி நடக்கட்டும் .

பவன் கொடைக்கானல் ட்ரிப் போட்டோக்களை வாட்ஸாப்ப் குரூப்பில் ஷேர் செய்திருந்தான் . அவன் வந்துவிட்டான் என்பதே நிம்மதியை இருந்தது ராமுக்கு . ராம் மீனாவுக்கு போன் செய்தான் நான் இன்னும் கோடைகாணல்லதான் இருக்குறோம் வந்து கால் பண்றேன் என்றாள்.

இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு கால் செய்து விசாரித்தான் . ரமேஷை பல இடங்களில் கத்தியால் குத்தியிருந்தார்கள் எனவும் இது ஏதோ ரவுடிகள் revenge போல இருப்பதாக சொன்னான். சீக்கிரம் கண்டுபுடி ரமேஷ் . ஆங் சமீபத்துல அந்த லீலா ஹோட்டல் ல பாலியல் தொழிலுக்காக ரூம் போட்டிருந்த ஒரு பொண்ணை அரெஸ்ட் பண்ணோம் . அவ கிட்டே ரமேஷ் போட்டோவை காட்டி கேட்டப்போ அவரை தெரியும்னு சொன்னா. நீ வேணா விசாரிச்சு பாக்கறியா அவ நம்பர் வாட்ஸாப்ப் பண்றேன் .

என்ன நடந்துச்சும்மா எப்பவும் நானும் அவரும் அதே ஹோட்டல் ல தான் ரூம் போடுவோம் . அன்னிக்கி அவர் எனக்கு என்னவோ போலருக்கு நீ போய் காருல உக்காருன்னு சொன்னாரு . அந்த சமயத்துல என் purse கீழ விழுந்தது .அதை எடுக்க back சீட்டுக்கு போனேன் அப்போதான் அவரு கூட வந்த ரெண்டு பேரும் ஒருத்தரு பின்பக்கமா கைய மடக்க இன்னொருத்தர் கத்தியால் குத்தினார் . அது இவங்க ரெண்டு பேருமா பார்த்து சொல்லும்மா என்றனர். அவள் சரியாய் அடையாளம் காட்டினாள்.

ரமேஷை கொன்றவர்கள் யாரென்று தெரிந்து விட்டது . பத்ரியை கொன்றவர்கள் கண்டுபிடிப்பதற்கு இன்னும் நாள் எடுக்கும் என தோன்றியது . இன்ஸ்பெக்டர் ரமேஷிடம் சொல்லி ரமேஷை கொன்றவர்களை அரெஸ்ட் செய்தான் .

 பத்ரிக்கும் பர்சனல் ஆக தெரிந்த கைலாசமிடமே கேட்டான். நான் திரும்ப கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க . பத்ரி உங்ககிட்டே மயக்க நிலைல ஏதாவது சொன்னாரா . சின்ன வயசு நினைவுகள் , காதல் நினைவுகள் . ஆஹங் சொன்னாரு அப்போ கோபின்னு ஒருத்தரு அவரை அடிச்சதாகவும் அதை இன்னும் மறக்க முடியல்லேனு சொன்னாரு . வேற ஏதாவது சொன்னாரா . என் சாவுக்கு காரணமா ஏதோ ஒரு நடிகை பேரை சொல்லி அவங்கதான் இருப்பாங்க ன்னு சொன்னாரு .மதுவந்தின்னுன்னு சொன்னாரா ஆமா அதே பேருதான் . தேங்க்ஸ் டாக்டர் .

மதுவந்திக்கு போனை போட்டான் . மதுவந்தி மீட் பண்ண முடியுமா கொஞ்சம் urgent . சரி வரேன் .மதுவந்தியின் முடியும் சாம்பிள் டெஸ்டுக்கு அனுப்பப்பட்டது ஆனால் அது மேட்ச் ஆகாதது குழப்பத்தை ஏற்படுத்தியது . தீபக் அவளுடைய முடியையே பார்த்துக்கொண்டிருந்தான் . என்ன இது ஒரிஜினல் ஆ னு தெரியனுமா இல்ல டூப்ளிகேட்தான் . எனக்கு கான்செர் வந்தப்போ முடி எடுத்துட்டாங்க .அதான் உனக்கு தெரியுமே ராம் . என்ன விஷயம் . உனக்கு இன்னும் ஸ்ரீ மேல கோவம் அப்படித்தானே அதெல்லாம் ஒண்ணுமில்லே எப்போ அவ பத்ரியை இழந்தாலோ அப்பயே அது போயிடுச்சு . நீ பத்ரியை லவ் பண்ணியா ஆமா பண்ணேன் . அவன் என்னை ரிஜெக்ட் பண்ணிட்டே இருந்தான். 

ஆனா நீ என்ன கேக்க வரேன்னு நேரடியா கேளு ராம் நான் பத்ரியை கொலை பண்ற அளவுக்கு எல்லாம் போகல . சௌமியா மேலதான் எனக்கு சந்தேகம் இருக்கு. வேணும்னே பத்ரியை அந்த டாக்டர்கிட்டே அனுப்பி அவனை குழப்பி கடைசில அவனை குடிகாரனா மாத்தி கொன்னுட்டா . சரி மது நீ போ நான் பாத்துக்கிறேன். மதுவந்தி சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது . நல்ல இருக்குறவன கூட மாத்தி இருக்கலாம் . அது சௌமியாவா இல்ல ஸ்ரீ யா என்ற சந்தேகம் திடீரென எழுந்தது . 

சௌம்யா ,ஸ்ரீ, டாக்டர் கைலாசம், மதுவந்தி எல்லோருமே பத்ரிக்கு எதிராக வேலை செய்து வந்துள்ளார்களென்பதை கண்டுபிடித்தான். ஸ்ரீ அப்போதே ஊருக்கு போவேன் முடிவெடுத்ததை தப்பு கணக்கு போட்டதாக உணர்ந்தான் . அன்று என்ன நடந்தது என்பதை விசாரிக்க மறுபடி அந்த பார்க்கிங் ஏரியா சிசி டிவி க்களை ஆராய்ந்தான் . ஒரு பகுதியில் ஸ்ரீயும் பத்ரியும் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது ,ஸ்ரீ கையில் அந்த கத்தி இருந்தது . அந்த பக்கம் போய்க்கொண்டிருந்த பவனை இங்கே வா என அழைத்தாள் ஸ்ரீ. அவன் தோளில் கை போட்டபடி ஏதோ ஸ்ரீ சொல்ல கத்தியை வாங்கி பத்ரி சொருகி கொள்வது அப்பட்டமாக தெரிந்தது . பத்ரியை கோபியும் ,பவனும் ரமேஷுடைய காருக்குள் திணிப்பதும் பதிவாகியிருந்தது . ராம் கண்ணீர் விட்டு அழுதான் .கோபியும் , பவனும் ஏற்கனவே ரமேஷை கொன்ற குற்றத்திற்காக அரெஸ்ட் செய்யப்பட்டார்கள் . தன்னையே ஸ்ரீ ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறாள் எனும்போது ராமுக்கு துக்கமாக இருந்தது .