webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part18

போலீஸ் வந்து பத்ரியின் உடலை கைப்பற்றினார்கள் . எல்லோருடைய விலாசங்களையும் குறித்து கொண்டார்கள். எப்ப கூப்பிட்டாலும் வரணும் என எச்சரித்தார்கள். பத்ரி உடல் எதற்காக ரமேஷ் காரில் வைக்கப்பட்டிருந்தது . யாரேனும் ரமேஷை மாட்டிவிட வேண்டுமென்றே செய்திருப்பார்களோ . ஸ்ரீ இன்னும் அழுதவாறே இருந்தாள். அவன் அப்போவே வேண்டாம் நான் வரலைன்னு சொன்னான் நான்தான் கம்பெல் பண்ணி கூட்டி வந்தேன் .ராம் எதுவும் சொல்லாமல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறிக்கொண்டான் . சிறிது தயங்கியவாறு நின்ற ஸ்ரீயும் ஏறிக்கொண்டாள் . மணி விடிகாலை 3 காட்டியது. மறுநாள் நிறைய பத்ரி கூட படித்த ,வேலை பார்த்த நண்பர்கள் வந்திருந்தனர் . போலீஸ் உன்னிப்பாக ஒவ்வொருவரையும் கவனித்தது. ஸ்ரீ க்கு ஆறுதல் கூற முடியாமல் தவித்தனர் . மீனா வரவில்லை . மதுவந்தி வந்திருந்தாள். பவன் சொல்லமுடியாத துயரத்தில் இருந்தான். பத்ரியின் உடல் அவன் குடும்ப வழக்கப்படி எரிக்கப்பட்டது .

ராம் யாரையும் சந்தேகப்படவில்லை . இன்ஸ்பெக்டர் ரமேஷ்தான் இந்த கேஸையும் விசாரித்தான் . கொஞ்ச நாளாவே பத்ரிக்கு மிரட்டல் கால்ஸ் வந்துகிட்டு இருந்தது போல . கத்தி அங்கே buffet ல வெச்சிருந்த கத்திதான் . அதுல பிங்கர் ப்ரிண்ட்ஸ் எதுவும் இல்ல . ஸ்ரீ ராமிடம் வந்து எனக்கு இந்த ஊர் வேண்டாம் என்று சொன்னாள். கேஸ் முடியற வரை பொறு ஸ்ரீ அப்புறம் எங்கே வேணா போ என்றான். பத்ரி உயிர் இந்த மண்ணுலதான் போயிருக்கு அதுக்கு பதில் வேணும் .தீபக்குக்கு போன் செய்தான் . விஷயத்தை சொன்னான் . கொஞ்சம் ஆபீஸ் பாத்துக்கோ . லதாகிட்டேயும் விஷயத்தை சொல்லு .நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்னு . ஒவ்வொருவரும் அவரவருடைய வாக்குமூலங்களை அளித்தார்கள் . எல்லோருடைய பொது கருத்தும் ரமேஷ் சம்பவத்தன்று நல்ல போதையில் இருந்தான் என்றும் அவனை விசாரித்தால் தெரியுமென்றும் சொன்னார்கள். 

கொலை ராமை drop செய்து விட்டு திரும்பிய அரைமணி நேரத்தில் நடந்திருக்கிறது . அந்த நேரத்தில் ஹரியும் ,ரமேஷ், மணி, மீனா, மதுவந்தி ,தீபன் ஆகியோர் தான் இருந்திருக்கின்றனர் . பார்க்கிங் ஏரியா வில் உள்ள சிசிடிவி செக் செய்த போது பத்ரியின் கார் உள்ளேயே இல்லை . எங்கோ கொல்லப்பட்டு இருக்க வேண்டும் .கார் எங்கே என்பதும் தெரியவில்லை .

பத்ரியுடைய தொழில் எதிரிகள் யாரவது இதை செய்திருப்பார்களா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்தார்கள். பத்ரியுடைய அறையை முழுக்க சோதனை செய்து பார்த்தார்கள்.பத்ரியின் போனை ஆராய்ந்ததில் கடைசி கால் சந்தோஷ் என்பவரிடம் இருந்து வந்திருந்தது . சந்தோஷை விசாரித்ததில் நான் சும்மா கேசுவலா கால் பண்ணேன் . நான் இப்போ ஒரு function ல இருக்கேன்னு அவசரமா சொன்னான் பத்ரி . பத்ரியின் கார் கூவம் ஆற்றில் மிதப்பதாக தகவல் போலீசாருக்கு கிடைத்தது. காரை கைப்பற்றியது போலீஸ்.

தெரிஞ்சோ தெரியாமலோ கடைசியாக பத்ரியை பார்த்தது ராம்தான் . ராமையும் ரமேஷையும் துருவி துருவி விசாரித்தனர். ரமேஷ் நீங்கதான் போதைல கொன்னீங்களா .நான் ஏன் சார் கொல்லணும். நானும் ஸ்ரீ யை விரும்புனவன்தான் ஆனா பத்ரியை கொல்ல எனக்கு எந்த காரணமும் இல்ல சார் . நீங்க கார் சாவியை யார்கிட்டயாவது குடுத்தீங்களா ? சந்தேகப்படுற மாதிரி யாராவது வந்தார்களா ?இல்லே சார். பவன் நீங்க invite பண்ண எல்லோரும் வந்தாங்கலா உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா ?ராம் மேலதான் சார் .invite பண்ண எல்லோரும் வரல. 

மீனாவையும் ,மதுவந்தியையும் விசாரித்த போது ராம் நம்பரை ஸ்ரீ வாங்கியதாகவும் ,பத்ரியை ராம்தான் அழைத்து போனதாகவும் சொன்னார்கள் .மேற்கொண்டு போலீஸ் இந்த கேஸை எப்படி எடுத்துக்கொண்டு போவதென்று புரியாமல் தவித்தார்கள் . பத்ரிக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்ததில் அதிக முறை சௌம்யாவிடம் பேசி இருக்கிறான் சௌமியா அவனுடைய பிசினெஸ் பார்ட்னர் .என்னவோ அவருக்கு பயம் இருந்தது சார் அவருக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு . அவர் சமீப டாக்டர் கைலாசம்க்கிட்டே treatment எடுத்துகிட்டார் . நீங்க அவர்கிட்டேயும் கேளுங்க. டாக்டர் கைலாசம் உளவியல் நிபுணர் . பத்ரி டிரீட்மெண்ட்க்கு வந்தது உண்மைதான் . அவருக்கு சந்தேகம் அதிகமா வர்றதாகவும் பல சமயம் எல்லோரும் அவரை ஏமாத்துறதா தோன்றதாகவும் சொன்னார் . குறிப்பிட்டு யாரையும் சொல்லலை . ஆங் அன்னிக்கி போன் பண்ணியிருந்தார் என் friends எல்லோரையும் பாக்க போறேன் அதனால அடுத்த வாரம் வரேன்னு சொல்லி இருந்தார் . 

ராம் லதாவிடமும் ,தீபக்கிடமும் இதை நாம்தான் solve பண்ணனும் என்றான் .சௌமியா பற்றிய விவரங்களை சேகரிக்க சொல்லி தீபக்கிடம் சொன்னான் .பத்ரி போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டில் அவருடைய கையில் முடி கற்றை இருந்ததாகவும் அதை வைத்து பார்த்ததில் அது ஒரு பெண்ணுக்கு சொந்தமானது எனவும் கண்டறியப்பட்டது .ஒப்பீட்டுக்காக விழாவில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரது சாம்பிள் முடியும் சோதிக்கப்பட்டது . சௌமியாவுடையதும் சோதிக்கப்பட்டது .லதா அந்த ஈவென்ட் வீடியோ ல கலந்துக்கிட்ட டி ஜெ பத்தியும் விசாரியேன் .டி ஜெ பத்தி எதுக்கு சார் விசாரிக்கணும்.இது ஒரு வித்தியாசமான கொலை . யாராவது பொறாமைல கூட இதை செய்திருக்கலாம் . சரி சார் நான் விசாரிக்கிறேன் . இது ஒரு வேலை ஏதாவது சைக்கோ கொலையாக இருக்கோமோ என்ற கோணத்தில் சில கேஸ் மாதிரிகளை ஆராய்ந்தான் .

அந்த டி ஜெ மேல கோடம்பாக்கம் ஸ்டேஷன் ல ஒரு கேஸ் இருக்கு சார் . என்ன கேஸ் eve டீசிங் கேஸ் . ஸ்கூல் பொண்ண follow பண்ணி கலாட்டா பண்ண கேஸ் .அவனை போலீஸ் விசாரிச்சாங்களா.. ஓ விசாரிச்சாங்களே. அவன் அட்ரஸ் இருக்கா இருக்கு சார் .டி ஜெ பத்தி எதுக்கு சார் விசாரிக்கணும்.இது ஒரு வித்தியாசமான கொலை . யாராவது பொறாமைல கூட இதை செய்திருக்கலாம் . சரி சார் நான் விசாரிக்கிறேன் . இது ஒரு வேலை ஏதாவது சைக்கோ கொலையாக இருக்கோமோ என்ற கோணத்தில் சில கேஸ் மாதிரிகளை ஆராய்ந்தான் .

அந்த டி ஜெ மேல கோடம்பாக்கம் ஸ்டேஷன் ல ஒரு கேஸ் இருக்கு சார் . என்ன கேஸ் eve டீசிங் கேஸ் . ஸ்கூல் பொண்ண follow பண்ணி கலாட்டா பண்ண கேஸ் .அவனை போலீஸ் விசாரிச்சாங்களா.. ஓ விசாரிச்சாங்களே. அவன் அட்ரஸ் இருக்கா இருக்கு சார் . கோடம்பாக்கத்துல சூளைமேட்டுல இருக்கான் சார் . சரி நீ இரு லதா .. தீபக் வா போலாம் என்று விரைந்தான் .லதா வேற யார் மேலயாவது இதே மாதிரி கேஸ் including பத்ரி இருக்கான்னு விசாரி ஓகே இங்கே டி ஜெ முருகன் வீடு எதுங்க . முருகன் வீடா அந்த ரெண்டாவது வீடுதான். 

என்ன சார் சொல்லி அனுப்பிருந்தா நானே வந்திருப்பேனே. என்ன விஷயம் சார் ஏதாவது பார்ட்டி யா ?அன்னிக்கி நடந்தது எனக்கும் ரொம்ப வருத்தம்தான் சார் . ஒண்ணுமில்லப்பா உனக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லு . உன் கூட வந்த பையன் பக்கத்துக்கு வீடுதான் . சரிப்பா நாங்க வரோம் . தீபக் இவனை follow பண்ணு..ஏதாவது clue கிடைக்கும் .லதா ஏதாவது தெரிஞ்சுதா யார் மேலயும் எந்த கேஸ் ம் இல்ல சார் . அப்போ அந்த ஈவ் டீசிங் கேஸ் ஸ்டேட்டஸ் என்னனு கண்டுபிடி அந்த பொண்ணோட அட்ரஸும் வேணும் . டி ஜே முருகன் கால் ஹிஸ்டரியும் வேணும் . நான் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கிட்ட பேசுறேன் .

டி ஜே முருகன் சரி அவன் நம்பர் குடு . நான் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண சொல்றேன் . ஸ்ரீ போன் செய்திருந்தாள். என்ன ஆச்சு ராம் ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகணும் . ஒன்னும் பிரச்னை இல்லை ஸ்ரீ கண்டுபிடிச்சிடலாம் .எப்படியும் பத்ரியை கொன்னவன கண்டுபிடிச்சிடலாம் .நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ .ஓகே பை என்றான் . பவனுக்கு போன் செய்தான் . பவன் அந்த டி ஜே புக் பண்ணது யாரு யாராவது reccomand பண்ணுனாங்களா ? எதுக்கு கேக்குற சொல்லு ..ரமேஷ்தான் சொல்லி விட்டான் . 

தீபக் murugan அப்பப்போ கஞ்சா, கஞ்சா சேல்ஸும் உண்டு ஆனா எப்படியோ போலீஸ் கண்ல மண்ணை தூவி விட்டு எஸ்கேப் ஆயிடுவானாம் .லதா அந்த பொண்ணு அட்ரஸ் கெடைச்சுதா கிடைச்சுது சார் ஆனா லாஸ்ட் இயர் அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சு சார் . ஓ அது இவன் பண்ண tortureலதானு சொல்லிக்கிட்டாங்க . எந்த ஏரியா நுங்கம்பாக்கம் . கால் ஹிஸ்டரி கெடைச்சதா ரமேஷ் . கெடச்சுது கஞ்சா டீலர் கருப்பு அப்டிங்கிறவனோடதான் அதிகம் பேசி இருக்கான். சரி ரமேஷ் தேங்க்ஸ் என்று போனை வைத்தான்.

சௌமியா பத்தி ஏதும் தெரிஞ்சுதா . சௌமியா பேசிக் பெங்களூரு . அவங்களுக்கு போன வருஷம்தான் டிவோர்ஸ் ஆச்சு .அவங்கதான் டாக்டர் கைலாசத்தை பத்ரிக்கு introduce பண்ணி இருக்காங்க . அவங்க husband அவரும் business தான் . என்ன ரீசன் டிவோர்ஸ்க்கு . அவருக்கு வேற ஒன்னு பொண்ணோட affair இருக்குனு சொல்லி இருக்காங்க . 

பார்ட்டி நடந்து கொண்டிருந்தது .ரமேஷ் வழக்கம் போல் அல்லாமல் நிதானமாக இருந்தான் .பார்ட்டி நடந்து கொண்டிருந்தது .ரமேஷ் வழக்கம் போல் அல்லாமல் நிதானமாக இருந்தான் . டி ஜே முருகன் தான் இந்த பார்ட்டிக்கும் டி ஜே .முருகா கொஞ்சம் பேசணும் வெளியே வா என்றான் . அன்னிக்கி பத்ரி னு ஒருத்தன் வந்தானே தெரியுமா என்னக்கி சார் அதான் என் classmates எல்லாம் வந்தாங்களே ஓ மீட்டப் . அவனை யாரோ குத்திட்டாங்க .போலீஸ் உங்கள பத்தி என்கிட்டே விசாரிச்சாங்க .நான் எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டேன் . 

 ராமுக்கு போன் வந்தது .ஹோட்டல் லீலால ரமேஷ் செத்துட்டானாம் யாரோ கத்தியால குத்திட்டாங்களாம் .தீபக்கை அழைத்துக்கொண்டு விரைந்தான் ராம்.போலீஸ் வந்திருந்தார்கள் .ரமேஷுடைய மனைவி அழுதவாறே இவனை பார்த்து பார்த்தியா ராம் எப்படி பண்ணி இருக்காங்க என்று கதறினாள் . ரமேஷ் ரத்த வெள்ளத்தில் மிதந்தான் , ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றினார்கள். என்ன காரணத்துக்காக கொலை செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை . ரமேஷுடைய வண்டியில் அடுத்து நீ தான் என எழுதி இருந்தது .ரெண்டு பேர் இல்லாமல் இந்த கொலை சாத்தியமில்லை . இது என்ன சீரியல் கொலை செய்பவர்கள் வேலையா என கூட தெரியவில்லை . ஸ்ரீ போன் செய்தாள் வாட்ஸாப்ப் மெசேஜ் வந்திருக்கிறது.உன்னை அடையாமல் விட மாட்டேன் என்று மெசேஜ் வந்திருப்பதாக சொன்னாள் . தீபக் அந்த ஏரியாவை சுற்றி வந்தான் . பெண்கள் அணியும் சவுரி போல (விக்)போன்ற ஒன்று கிடைத்தது .