webnovel

முதல் பாகத்தின் சிறு துளிகள்

( முதல் பாகத்தை படித்து விட்டு இதை படிக்கவும்) .

ராஜன் இந்திய நாட்டின் மந்திரியாக இருந்தார். ராஜனின் மகனாக இனியன் வளர்ந்து வந்தான் பின் ஒரு நாள் ராஜனை கொள்ள ஒரு கும்பல் வந்தது அவர்களிடம் இருந்து இனியன் தப்பித்து விட்டான் பின் 22 வருடங்கள் கழித்து அவன் தன் நண்பர்களுடன் வாழ்ந்து வந்தான் பின் அவன் இருக்கும் பகுதியில் ஒரு வெடிகுண்டு வெடித்தது அந்த சம்பவத்தை யார் செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள காவல் துறைக்கு உதவி செய்தார் பின் அந்த சம்பவத்தை தன் நண்பன் விக்ரமும் தேவாவும் தான் செய்தார்கள் என்று கூறி அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி தந்தார் . சில நாட்கள் கழித்து மீண்டும் குண்டு வெடிப்பு நடந்தது அப்போது தான் மூன்றாவதாக ஒருவன் இருக்கிறான் அவன் பெயர் மாறன் என்று இனியன் தெரிந்து கொண்டான் அதனால் மாறனை பிடிக்க முயன்றான் பின் சில நாட்கள் கழித்து மாறன் பிடி பட்டான். அதன்பின் தான் தெரிய வந்தது இனியன் தான் அந்த சம்பவத்தை நடத்தியவன் என்று மாறன் தான் காவல் அதிகாரி என்றும் இனியனை பிடிக்க தான் தீவிரவாதி போல் வேடமிட்டு வந்தார் என்று தெரிய வந்தது.

மாறன் இனியனை விசாரிக்க தொடங்கினான் அப்போது தான் இனியன் சொன்னான் எனக்கு மேல் ஒரு தலைவன் இருக்கிறான் அவரை பிடிக்க முடியாது என்று கூறினார். அப்போது திடீரென ஒரு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது அப்போது ஒரு துப்பாக்கி குண்டு இனியன் தலையில் பாய்ந்தது. மாறன் அதிர்ந்து போனான்.

இனியனை கொன்றது யார் என்ற கேள்விக்கு பதில் தேட ஆரம்பித்தான் மாறன்.

அதன்பின்....

மகா யாகம் II ஆரம்பம்...