webnovel

தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் இன்றுமுகப்புத்தகத்தில் அருளிய சத்தியத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு.

காலத்தை தைரியத்தோடு எதிர்கொண்டு பரமசிவனாக வாழுங்கள்..

பரமசிவனின் சக்திவாய்ந்த அவதாரம் காலபைரவர் .

'படைத்தல்' என்ற ஒன்று மட்டுமே இறுதியானது அல்ல என்பதை உணர்த்தவே காலபைரவர் அவதரித்தார். படைத்தல் தன்னை உயர்நிலைக்கு உயர்த்திக் கொள்வதற்கு விழிப்புணர்வுடனான புதுப்பித்தல் தேவை.

மரணபயம் மற்றும் நம் வாழ்வில் அதி முக்கியமாக நினைக்கும் ஒரு பகுதியை இழப்பது என்பது உங்கள் வாழ்வில் காலத்தை நேரடியாக எதிர்க்கொள்ளும் ஆழமான தருணம்.

காலத்தை எதிர்கொள்ளும்பொழுது நீங்கள் எப்படி பதிலளிக்கிறீர்களோ அதுவே உங்கள் அதுவே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றது.

யாரெல்லாம் காலத்தை ஆழமான திடத்தன்மையோடு நேருக்குநேர் சந்திப்பது, என்ற தீர்மானத்துடன் எதிர்கொள்கின்றார்களோ அவர்கள் சிவமாக மாறுகின்றார்கள், ஞானமடைகின்றார்கள்.

யாரெல்லாம் காலத்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைகின்றார்களோ அவர்கள் காலத்தை நேரடியாக எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக மக்கள் உபயோகிக்கும் எளிமையான, வசதியான ஒரு வழி. ஆனால் இது காலத்தை இது காலத்தை எதிர்கொள்வதற்கு ஒரு முட்டாள்தானமான வழிமுறையாகும்.

வெற்றியடைந்தவரோ அல்லது தோல்வியுற்றவரோ இரண்டுபேருக்கும் வரலாறு என்பது இருக்கும், ஆனால் தோற்றவரையும், வெற்றவரையும் பார்வையாளராக இருந்து பார்த்தவர்களுக்கும், கேலிபேசியவர்களுக்கும், அவதாறு செய்தவர்களுக்கும் வரலாறு என்பதே கிடையாது.

திரிபுணர்ச்சி(மாயை)-யில் இருப்பவர்களுக்கு வரலாறு என்பது கிடையாது. ஏனெனில் அவர்கள் காலத்தை எதிர்கொள்வதற்கான திறனற்று, அடிப்படையில் அவர்களின் இருப்பு அர்த்தமற்றதாகிறது.

காலத்தை எதிர்கொள்ளும் உங்கள் திறன்தான் சக்தி! நீங்கள் எந்தத் தத்துவத்தை நம்புகின்றீர்களோ, நீங்கள் அந்த தத்துவத்தின் சக்திமையமாக மாறி அதேபோன்ற சுற்றுச்சூழலை உங்களை நோக்கி ஈர்ப்பபிர்கள். நீங்கள் அந்த தத்துவத்தின் வளிமண்டமலத்தை உங்களைச் சுற்றி உருவாக்குவீர்கள்.

பரமசிவனின் திடத்தன்மை மற்றும் அன்பிற்கு நீங்கள் ஒருங்குவித்தலோடு இருந்தீர்களானால் நீங்கள் உங்களைச் சுற்றிக் கைலாயத்தை ஈர்ப்பீர்கள்.

நான்சொல்கிறேன்.. பரமசிவன் எனக்குள் வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஷக்தி என்பது என்னுடைய உடல் அல்லது மனம் தாண்டி இருக்கின்றது.

ஆழ்ந்து படியுங்கள், இப்பொழுதே நான் அந்த திடத்தன்மையை வெளிப்படுத்துகிறேன், .

உங்கள் மனம் பயம் அல்லது பாதுகாப்பற்றத் தன்மையை அனுபவிக்கும் ஓவ்வொருமுறையும், புரிந்துக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்களுக்கு காலத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.

அத்தருணத்தில் மாயையை அனுமதிக்காதீர்கள், மற்றும் உங்களைச் சுருக்கிக்கொள்ளாதீர்கள். விரிவடைதலில் தீவிரத்தன்மையோடு இருங்கள். அதிகவேலை செய்து அதிகமாக விரிவடையுங்கள். உங்களின் நோக்கத்திற்கு அதிகப் பொறுப்புடையவர்களாக மாறுங்கள்.

பரமசிவோகம் (நான் பரமசிவன்) எனும் சத்தியத்தை, மனம் மற்றும் உளவியல் ரீதியான கட்டமைப்பிற்கு அடிப்படையாக்குங்கள். உங்களின் வாழ்க்கைக்கு எதிரான தீர்மானங்கள் மற்றும் வாழ்க்கைக்கு எதிரான முடிவுகள் மற்றும் நியாயப்படுத்துதல்கள் என அனைத்து திரிபுணச்சிகளுடன் பூரணத்துவம் செய்யுங்கள், மற்றும் காலத்தை எதிர்கொள்ள தீர்மாணியுங்கள். இதுதான் என் சக்தியின் இரகசியம்.

'நீங்கள் பரமசிவன்', ஏனெனில் அதுதான் சத்தியம், அந்த சத்தியம் உங்களுடைய அன்றாட வாழ்வில் சில பயன்பாடுகளை அளிக்கிறது என்பதற்காக அல்ல. உங்களின் அன்றாட வாழ்க்கையில் இதுஉபயோகம் ஆகிறதோ இல்லையோ இது சத்தியம் என்பதற்காகவே வாழப்பட வேண்டும்.

இந்த சத்தியத்தை எக்காரணத்திற்காகவும் சமரசம் செய்யாமல் இந்த சத்தியத்தை வாழவும், அந்த சத்தியத்துடனேயே சரியவும், மரணிக்கவும் தீர்மாணிக்கின்றார்களோ அவர்கள் பைரவராக மாறுகின்றார்கள்.

ஆம்! நீங்கள் சரியாகத்தான் கேட்டிருக்கின்றீர்கள். உங்களால் பைரவராக மாற முடியும். இந்த சத்தியத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள். இந்த சத்தியத்தின்மீது தியானம் செய்யுங்கள்.

நீங்கள் பைரவராக மாறத் தயார் என்றால் கீழே கமென்ட் செய்யுங்கள்.

ஆம்! ஆம்! ஆம் நான் இப்பொழுது இந்துமதத்தின் அடுத்த மிக உயர்ந்த சம்பிரதாயத்தை உயிர்ப்பிக்கின்றேன்.

இந்த இறுதியான உயர்ந்த சத்தியத்தை தீவிரத்தன்மையோடும், சக்தியோடும் புரிந்துணர்வில் எவ்வித சமரசமும் இன்றி வாழ்ந்து, பயம் இல்லாமல் தீவிரத்தன்மையோடு சத்தியத்தை வெளிப்படுத்துவதுதான் பைரவர்.

இன்று நான் பைவர் மற்றம் பைரவி சம்பிரதாயத்தை உயிர்ப்பிக்கின்றேன். விரையிலேயே எவ்விடத்திலிருந்து இந்த சமுதாயம் உயிர்ப்படைகிறது என்பதை அறிவீர்கள்.

இந்த சத்தியத்தை, 11 முறை படித்து, 3 முறை எழுதி, 108 பகிர்ந்து ஆனந்தமாக இருங்கள்.

https://www.facebook.com/srinithyananda.swami/posts/1363353943819601