1 ஆரம்பம்

ஓர் வித அமைதியும் பலவித எண்ணங்கள் மனதோரம் காயம் செய்ய ஓர் வித தெளிவு பெறாத கண்களுடன் தன் முன் நின்று காயப்பட்ட தன் மனதை மேலும் மேலும் காயம் செய்பவனை பெண்ணவள் பார்த்து நிற்க.

அவனோ வெறிப்பிடித்தவன் போல் கத்திக் கொண்டிருந்தான். சற்றும் எதிர்பாராமல் தன் முன் கல்லுடன் இனைத்து கட்டியிருந்தவள் பின்னிருந்து தன் கையை வைத்து அவள் மூச்சு விட முடியாது அழுத்தி பிடித்தவன். அவள் காதில் " வக்கீல் பெண்சாதி இல்ல அது தான் டீ உனக்கு இந்த திமிரு. நீ கவலை படாத உன் பின்னாடியே உன் புருசனையும் அனுப்பு வைக்கிறன் " என கத்திய படி மேலும் கையை வைத்து அவள் சுவாசத்தை நிறுத்தும் முயற்சியில் இறங்கினான்.

கண்கள் செருகி மூளையில் ஓர் வித விறைப்பு தன்மை உணர்ந்தவள். சுவாசிக்க சிரமப்படும் நொடியில் தன் முன் " நந்திரா..... " என கத்திக் கொண்டு உடம்பில் காயங்களுடன் ஆறடி உயரத்தில் ஓடி வந்தவனை கண்டதும் அவள் புலன்கள் தன் செயலை நிறுத்தும் தருவாயில் இருக்க.

தீடீர் என சந்தண வாசம் நாசியில் உணர காதில் ஓர் குரல் " இப்ப நீங்க எழும்பி வாறிங்களா? இல்ல உங்கள இங்க கழட்டி விட்டிட்டு நா களம்பவா " என்று குரல் கேட்க சோர்வோடு கண்களை திறந்தாள் பல்லவி.

இடுப்பில் கை வைத்து கீழ் கண்களால் தன்னை பார்த்து நின்ற தன் மூத்த தமக்கையின் மகளை பார்த்தவள். " ஈ... ரொம்ப தாமதமா எழும்பிட்டனா?... " என்ற படி தன் கடிகாரத்தை பார்த்தவள் மறுபடியும் அவளை பார்த்து " சித்தி இரண்டு நிமிடத்தில ரெடி ஆகிடுவன் ஓகே... " என தன் கட்டை விரலை காட்டினாள்.

" நீ என்ன மகி நூடில்ஸ்சா? இரண்டு நிமிசத்துல ரெடி ஆக " என பல்லவியை நக்கல் செய்த படி வந்த பல்லவியின் இரட்டையன் பர்வதன் தன் தமக்கையின் கண்கள் சிவந்திருப்பதை பார்த்து " என்னாச்சு இப்ப நீ எதுக்கு அழுற?... " என கேட்ட படி தமக்கையின் கண்ணீரை துடைத்தவன் கேள்வியாய் தன் மூத்த தமக்கையின் மகள் நைநிதாவை பார்த்து நின்றான். தன் மாமன் தன்னை பார்ப்பதை பார்த்தவள் பல்லவியை பாவமாய் பார்த்த படி " உங்கள நாங்க இங்க விட்டு போகல அழதீங்க " என அந்த 5 வயது சிறுமி பிஞ்சு மொழி பேச " டேய் ஏன்டா என் செல்லத்த மிரட்டுற? உனக்கு என்ன பத்த அழுதுட்டு இருக்குற மாதிரியா கிடக்கு " என்ற படி தன் கன்னத்தை தொட்டவளுக்கு அப்போதுதான் தான் அழுது இருப்பது புரிந்து அதிர்ச்சியானாள்.

குழப்பமாய் தன்னை பார்த்து நின்ற பர்வதனை பார்த்தவள் என்ன சொல்லி அவனை சமாளிப்பது என புரியாது முழித்துக் கொண்டிருக்க. " அட மூவரனி சங்கமே எல்லாரும் பஸ்சில போய் இருந்துட்டாங்க. நீங்க இங்க என வேட்டி கதை பேசிட்டு இருக்கீங்க! இப்ப நீங்க வாரிங்களா? இல்ல நாங்க களம்பவா?... " என கேட்ட படி அங்கு வந்தாள் பல்லவியின் அத்தை மகள் சாகித்தியா. கோபமாய் கடிந்து கொண்டவளை என்ன சொல்லி சமாளிப்பது என புரியாது " இதோ நாங்க ரெடி சாகித்தி.... ஆனா பல்லவி தான் " என இழுத்த படி பர்வதன் கட்டிலை பாத்தான். பல்லவி அங்கு இல்லாததை அறிந்ததும் சுற்றி அறையை நோட்டமிட்டான்.

பல்லவியோ அறை வாசலில் நின்ற படி " அட என்னத்த தேடுற பவன் நீ எப்பவும் சீக்கிரமா ரெடி ஆக மாட்டியா? " என பர்வதனை கடிந்த படி சாகித்தியவை வெளியே செல்ல. அதிர்ந்த பார்வை வீசிய படி " இதே உனக்கு வேலையா போச்சு " என முறைத்த படி நைநிதாவை தூக்கிக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான் பர்வதன்.

பல்லவி ஓடிச் சென்று சாகித்தியா அருகே அமர்ந்து கொள்ள பின் வந்த பர்வதன் " சாகித்தி இவ இருக்கும் வரை நீ சிங்கிள் தான் " என பெரும் மூச்சு விட்ட படி சகித்தியாவின் தம்பி மல்வீரன் அருகே அமர்ந்து கொண்டான். பர்வதன் கூறியது புரியாமல் சாகிதியை பார்த்தாள். பல்லவி " ஏய் நமக்கு ஒரே வயசா இருந்தாலும் நாங்க உன்னை விட பத்துமாசம் லேட்டு தெரியுமில்ல " என சந்தேகமாய் இருவரையும் பார்த்தாள்.

" புத்தி போகுது பாத்தியா நீ எனக்கு எப்பிடியோ அப்பிடி தான் சாகித்தியும் எனக்கு " என பர்வதன் பல்லவியிடம் எரிந்து விழ எலியும் பூனையும் போல் இருவரும் சண்டைக்கு ஆயத்தம் செய்வதை பார்த்த சாகித்தியா " பவன் அவ வேணுமின்னு கண்ண காட்டிட்டு தான்டா உன்னை வம்பு பன்றா நீ அமைதியா இரு " என இருவரையும் அடக்கி வைத்தாள்.

அடர்ந்த காடுகளின் நடுவே பஸ் சென்று கொண்டிருக்க. சாகித்தியா மீது அழகாய் சாயந்து கொண்டு தொப்பியுடன் கூடிய சேட்டினால் தன் முகம் முழுவதையும் மறைத்தவாள் வீட்டில் இடையில் குழம்பிய உறக்கத்தை தொடர்ந்தாள் பல்லவி.

நிமிர்ந்த நடையும் முறுக்கு மீசையுடன் ஒருவன் உள்ளே நுழைய அவனை கண்டதும் முகம் முழுதும் செம்மையை தத்து எடுத்த படி எழுந்து நின்றாள் சாகித்தியா. எழுந்து நின்றவளை தன் நெஞ்சோடு அனைத்து மென்மையாய் அவளது தலையை வருடி விட்டான். இதை எல்லாம் ஓர் ஓராமாய் இருந்து பார்த்த பல்லவி " வெளிய எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் அங்கிட்டு போறன் " என கத்திய படி ஓட முயன்றவளை ஒரு கரம் கெட்டியாய் பிடித்துக் கொண்டது.

" நீ சூசைட் பன்ற தா இருந்த இந்த ரூர் நல்ல படியா போய் வந்ததுக்கு அம்புறம் பன்னு இப்ப எங்கள கொஞ்சம் நிம்மதியாய் இருக்க விடு பல்லவி.... " என பர்வதன் அவளை உழுக்க உறக்கத்தில் இருந்து விழித்தவள். " நான் எதுவும் பாக்கல " என படபடக்க ஆரம்பித்தாள். பைத்தியம் போல் கதைத்தவளை " நீ எதுவும் பார்க்கல என்னு நல்லாவே தெரியுது கொஞ்சம் விட்டிருந்தா ஓடுற பஸ்சில இருந்து கீழ குதிச்சிருப்பா! என்னடி அச்சு உனக்கு " என பர்வதன் பதற்ற பட ஆரம்பித்தான்.

அவன் பதற்றத்தை பார்த்தவள் சுற்றி பார்த்தாள். அப்போது தான் பஸ்சில் இருந்து இறங்க முயச்சி செய்தது புரிய தலையில் கை வைத்தபடி " எனக்கு எப்போல இருந்து தூக்கத்தில நடக்கிற வருத்தம் வந்திச்சு " என தலையை உழுக்கி கொண்டாள் பல்லவி. பர்வதன் தன்னை கவலையுடன் பார்ப்பதை பார்த்தவள் சிரித்த படி " லைட்டா ஒரு கனவு அது தான் " என அசடு வழிந்தாள். தன் முன் அசடு வழிந்து நின்றவளை " சரி வா வந்து உட்காரு " என அழைத்து சென்றான். சாகித்தி அருகே வந்தவள் சாகித்திக்கு மறுபுறம் இருந்த புதியவனை கண்டதும் தன் தலையில் நன்றாக கொட்டியவள். பர்வதனை ஒரு கையால் இருக்க பிடித்த படி " சாகித்தியா உன் பக்கத்துல கருப்பு கலர் ரீசேட் போட்டுகிட்டு யாரவது இருக்கங்கலா? இல்ல இதுவும் என் கனவு தானா?... " என கண்களை கசக்கிய படி கேட்டவள்.

சந்தேகம் தாங்க முடியாமல் ஆல் காட்டி விரலால் அவன் நெற்றியில் தொட்டவள் அவனை அவள் கை உணர்ந்ததும் " ஆ... " என நடக்க கூடாத ஒன்று நடந்தது போல் கத்தினாள். " சாகித்தியா யாருடி இது என் கனவுல வார ஒருத்தர் மாதிரி இருக்காரு! " என்றதுடன் அவன் முகத்தை நாலு பக்கமும் திரும்பும் படி கூடி உறுதி படுத்திக் கொண்டள். அவளின் செய்கையில் பஸ்சில் இருந்த அனைவரும் " பல்லவி " என ஓரே நேரத்தில் கூப்பிடனர். அவளும் பயத்தில் அமைதியானாள்.

ஆனால் பல்லவி அவ்வாறு கூறியது சாகித்திக்கு சிறிது பயத்தை எற்படுத்த " என்னடி சொல்லுறா...! " என ஒரு வித வருந்தும் தொனியில் கேட்க. சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள் தன்னிலை விளக்க முடிவு எடுத்தவளாய் " யாரும் தப்ப நினைக்கதங்க நான் சொன்னது விளையாட்டுக்கு இல்ல என்னை நம்பல எல்லா இதப் பாரு சகி நீ " என தன் பையில் இருந்து ஒரு கொப்பியை எடுத்து அவளிடம் நீட்டினாள். சாகித்தியாவும் சற்று பயத்துடன் அதை வாங்க செல்ல சட்டென தன் புறம் கொப்பியை இழுத்தவள்.

சற்று தயங்கிய படி சாகித்தியாவை பார்த்து " இத நான் உனக்கு காட்ட கூடாதுன்னு நினைச்சன். இத பாத்து நீ என் மேல கோபப்படக் கூடாது. எனக்கு எப்பிடி கனவு வருதோ அப்பிடி தான் வரைஞ்சு வைச்சிருக்கன் " என்றபடி அவள் கையில் அந்த புத்தகத்தை கொடுத்தவள் நான்கடி தள்ளி நின்று கொண்டாள். சற்று மனதில் பயம் தோற்ற அதை விரித்து பார்த்தவள் சற்று அதிர்ந்து தான் போனாள். சாகித்தியாவின் அதிர்ந்த பார்வையில் அந்த புதியவனும் பர்வதனும் அந்த புத்தகத்தை எட்டி பார்க்க. அதில் சாகித்தியா நிலை கண்ணாடி முன் அமர்ந்திருக்க அருகே நின்ற அந்த புதியவன் சாகித்தியாவின் வகிட்டில் குங்குமம் வைப்பது போல் வரைந்து இருந்தாள் பல்லவி.

இதை பார்த்த அனைவரும் பல்லவியை நம்ப முடியாமல் பார்க்க. அவர்களை பார்த்து முழித்தவள் " நான் இப்ப என்ன செய்துட்டன்னு மொத்த குடும்பமும் என்ன இப்பிடி பாக்குறிங்க" என கேட்டவாள். அந்த கதையாய் மற்றும் விதமாக " ஆமா யார் இவங்க புதுசா இருக்காங்க " என புதிதாய் இருந்த நால்வரை விசாரித்தாள் பல்லவி. " அட உனக்கு நாங்க இன்னும் விசயத்தை சொல்லல எல்லா இது சச்சின் சகித்தியாக்கு பாத்த மாப்பிள்ளை " என அப்புதியவனை அறிமுகம் செய்தான் பர்வதன்.

பர்வதன் சொன்னதில் சற்று அதிர்ந்தவள் மனதுள் " அது சரி, கனவுல கூட இவர் எனக்கு அண்ணா என்னு தான் சொல்லிட்டு திரிஞ்சன். ஓ.. மை ... காட் அப்போ நான் நியமா ஓரு வக்கீலை கட்டிக்கனும் " என எண்ணமிட அவளை பிடித்து உழுக்கிய பர்வதன் தொடர்ந்து, " அப்புறம் இது சச்சு அண்ணாவோட மாமா மாமி அவங்க பையன் விக்ரம் என மற்ற மூவரையும் அறிமுகம் செய்ய அவர்களுக்கு வணக்கம் சொன்னவள் என்ன நினைத்தாலோ தன் தந்தை அருகே சென்று " அப்பா நான் உங்களுக்கு சொன்ன லிஸ்ட்டில இன்னும் ஒன்னு சேர்கனும் எனக்கு பார்க்குற மாப்பிள்ளை சத்தியமா வக்கீலா மட்டும் இருக்க கூடாது ஓகே " என கூறிவிட்டு மீண்டும் வந்து சாகித்தியா அருகே அமர்ந்து கொண்டாள்.

பைத்தியம் போல் கதைத்து சென்றவளை குழப்பமாய் பார்த்தார் பர்வதனை பார்க்க அவனும் தன் தந்தை நிலையை புரிந்து கொண்டான். " அப்பா நீங்க பல்லவிக்கு வரன் பாக்குறிங்க எல்லா அப்பிடி பாக்குற வரன் வக்கீலா இருக்க கூடாதுன்னு சொல்லிட்டு போறா " என கூற சற்று புரிந்தவராய் மீண்டும் தன் மனைவி ஜானகியுடன் கதைக்க ஆரம்பித்தார் கிருஸ்னராஜா.

பல்லவி சகித்தியா அருகே இருந்து இருவரையும் மாறி மாறி பார்க்க அதை பார்த்த சகித்தியா " ஓய் என்ன தான் பிரச்சனை உனக்கு கண் வெட்டமா அப்பிடி பாக்குறா? " என உணர்ச்சி அற்ற குரலில் கேட்க. பெரும் மூச்சு ஒன்றை இழுத்து விட்டபடி. " அது... நீ என் கனவுல வாரா அது ஓகே. ஆனா சச்சு அண்ணா ஏன் கனவுல வந்தாருன்னு புரியலையா! அது தான் உங்க ரெண்டு பேரையும் எங்கயாவது சேர்த்து வைச்சு பாத்தேனா என்னு? ஒரு டவுட்டு " என கூறியவள் மீண்டும் கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தாள். அவள் சொன்னதில் சகித்தியாவும் சச்சுவும் திரு திருவென முழித்து கொண்டனர்.

சில நிமிடங்கள் அமைதியில் கழிய திடீரென ஏதோ கண்டு பிடித்தவனாய் சகித்தியாவின் பக்கம் திரும்பியவன் " எனக்கும் அதே சந்தேகம் தான் சகித்தியா உன்னை நான் முதல் தடவ பார்த்தப்ப உன் கூட பல வருடம் இருந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு இருந்திச்சு! ஆனா பல்லவி கனவுல நாம வாறது கொஞ்சம் விசித்திரமா இல்ல? அதோட அவ வரைஞ்ச படம் பார்த்தியா! அதுல நம்ம ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் பழங்காலத்து ஆளுங்க மாதிரி இருந்துச்சு " என சச்சு தன் மனதில் தோன்றியதை ஒரே மூச்சில் கூறி முடித்தான்.

அவன் கூறுவதை அமைதியாய் கேட்டு கொண்டு இருந்தவள் திடீர் என பல்லவி மடியில் இருந்த புத்தகத்தை எடுத்து விரித்து " இங்க பார்த்தீங்களா? சச்சு உங்கள வரைஞ்ச பக்கம் அவ வீரா என்னு எழுதி இருக்கா என்னோட பக்கம் சரஸ்வதி என்னு எழுதி அடைப்பு குறிக்க சாகித்தின்னு குறிச்சிருக்கா இது உண்மையில ரொம்ப வித்தியாசமா தான் இருக்கு " என சகித்தியாவும் சில விடயங்கள் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பர்வதனுக்கு சிறிதாய் கோபம் எட்டி பார்க்க " ஓய் அவ தான் லூசு மாதிரி ஏதோ உளறிட்டு திரியுறான்ன! நீ ஏன் டீ அத பெருசாக்குறா? " என சலித்த படி அவள் கையில் இருந்த பல்லவியின் படம் வரையும் புத்தக்தை பறித்துக் கொண்டான்.

புத்தகத்தை அவசரமாய் மூடி தன் பையில் வைக்க சென்றவனுக்கு சிறிதாய் மின்னல் வெட்ட புத்தகத்தின் கடைசி பக்கத்தை திறந்தவன் கண்கள் முழு குழப்பத்தை தத்தெடுத்தது. இடையை தாண்டி வளந்திருந்த கூந்தலுடன் முகத்தில் தீராத வலியும் கண்களில் கண்ணீர் உடனும் பாவாடை தாவணியில் பல்லவியின் சாயலில் இருந்த பெண்ணின் உருவம் அவன் மனதில் வலியை உருவாக்க " இவ எதுக்கு இப்பிடியெல்லாம் வரைஞ்சிருக்கா? " என புலம்பிய படியே அதை தன் பையில் மூடி வைத்தான்.

தொடரும்.

avataravatar
Next chapter