webnovel

இரு உயிர்

Iniyan_Siva · Action
Not enough ratings
12 Chs

الفصل الثاني

ரோஷனியின் வாழ்க்கை....

பசுமை நிறைந்த இடத்தில் அழகான சிறிய வீட்டில் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள் ரோஷனி. இவள் மிகவும் எதார்த்தமாகவும் எளிமையான முறையில் மற்றவர்களிடம் பழகக் கூடியவள்.‌ ஜாதி மதம் என வேறுபாடுகள் இல்லாமல் அனைவருடனும் நெருங்கி பழகக் கூடியவள். சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் இவளுக்கு அதிகம் ஆர்வம் உண்டு. இவள் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்.

பிரபஞ்சனின் வாழ்க்கை....

பிரபஞ்சன் ஒரு சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர், இவன் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் , படிப்பில் மிகவும் கவனம் செலுத்துவார். பிரபஞ்சன், தர்ஷினி, ரோஷ்னி ஆகிய மூவரும் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். இவனுக்கு ஏற்பட்ட முதல் காதல் தோல்வியாலும் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளும் இவனின் வாழ்க்கையை திருப்பி போட்டது. பிரபஞ்சன் தான் கையில் கட்டியிருக்கும் கயிற்றின் மீது மிகுந்த அக்கறையோடு இருப்பான், யாராவது அதை தொட்டாலே கோபமடைந்து திட்டுவது வழக்கம். சமீபத்தில் அவனின் தந்தை இறந்து விட்டார்.

ஃபரினா-வின் (Farina) வாழ்க்கை....

ஃபரினா பிறந்தது மும்பையில் ஆனால் வளர்ந்தது மதுரையில், சில காரணங்களுக்காக அடிக்கடி தன் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். இவளுக்கும் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ளது, யாராவது உதவி கேட்டு வந்தால் முகம் சுளிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வாள். சமீபத்தில் இவளின் தம்பி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார், அதனால் ஒவ்வொரு வாரமும் தன் தம்பிக்காக மசூதியில் சிறப்பு தொழுகை நடத்திவருவாள்.