webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part6

ராம் திரும்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவலை சொன்னாள் தீபு. இன்னும் ஒரு வாரமா அப்போ நான் ஊருக்கு போய்ட்டு வரேன் .நீங்களும் போயிட்டா எனக்கு போர் அடிக்குமே அதெல்லாம் அடிக்காது நான் போய்ட்டு ராம் சார் வந்த உடனே வந்து விடுகிறேன் என்றான் ராகவ்

திவ்யாவும் ரஞ்சனியும் இவன் வருகைக்காக காத்திருந்ததாக சொன்னார்கள் .ஒரு மினி ட்ரிப் போகலாம் என்று பிளான் பண்ணியும் வைத்திருந்தார்கள் . இவனுக்கும் மகிழ்ச்சி தான் .கொடைக்கானல் போவதற்கான எல்லா ஏற்பாட்டையும் ரஞ்சனி செய்திருந்தாள்.மீரா இறந்த கேசில் இழப்பீடு வழங்கவும் சிங்காரத்தை அரெஸ்ட் பண்ணவும் நாளுக்கு நாள் போலீசுக்கு பிரஷர் போடப்பட்டது .சிறப்பு அதிகாரி சஞ்சய் நியமிக்கப்பட்டான் . இது வரைக்கும் ஒரு ஆக்ஷனும் எடுக்கலேயே ஏன் சார் ? மக்கள் போராட்டம் நடத்துனாதான் action எடுப்பீங்களா ? போன்ற பத்திரிக்கியாளர் கேள்விகளை நாசுக்காக தவிர்த்தான் . சிங்காரத்தை நான் பாக்கணும் அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க என்று சக ஆஃபீஸ்ர்களுக்கு உத்தரவிட்டான் 

சஞ்சய் முழுக்க நேர்மையானவன் கிடையாது . எதிரிக்கு குறுக்கு வழி என்றால் இவனுக்கும் குறுக்கு வழி எதிரிக்கு நேர் வழி என்றால் இவனுக்கு அப்பவும் குறுக்கு வழி .இதுதான் அவனுடைய போர்முலா.

சஞ்சய் பல முறை transfer செய்யப்பட்டவன் என்பதால் அவனுக்கு பயம் கிடையாது .மீரா வீட்டுக்கு சாதாரண உடையில் போய் ஆறுதல் சொன்னான். அவர்கள் மீராவின் உடலை வாங்கி கொள்ள சம்மதம் தெரிவித்தனர் . என்னவோ சார் ஏற்கனவே ரெண்டு குரூப் எங்களை ஏமாத்தி மீராவோட லேப்டாப் கொண்டு போயிட்டானுங்க . நீங்கதான் சார் எங்களுக்கு பாதுகாப்பு குடுக்கணும் .ரெண்டு பேரை நியமித்தான்.

சிங்காரத்துடைய அலுவலகத்துக்கு யாரோ வந்து போகிறார்கள் என்ற தகவலும் கிடைத்ததால் அங்கும் சென்றான் .இங்கே என்ன புடுங்கறதுக்காக போலீஸ் நிக்குதா இனி ஒரு பயலும் என்ன கேக்காம உள்ளே போகக்கூடாது என எச்சரித்தான்.புதியதாக சிசி டிவி க்களை பொருத்தும்படியும் உத்தரவிட்டான் .

கொடைக்கானல் ரம்மியமாக இருந்தது .சைக்கிள் சவாரி, குதிரை சவாரி என வெகு நாட்களுக்கு பிறகு அவர்கள் ஒன்றாய் பொழுதை கழித்தார்கள்.

சிங்காரத்துடன் பேசுவதற்கு சஞ்சய் தயாரானான் . சிங்காரமும் அதற்கு சம்மதித்தான் . ஒரு பொது வெளியில் சந்தித்தார்கள் .சிங்காரத்துக்கு துணையாக R2 போலீஸ் ஸ்டேஷன் ரவி இருந்தான் . என்ன சிங்காரம் கொள்ளை அடிச்சிக்கிட்டு இருந்த நீ இப்போ கொலையும் பண்ண ஆரம்பிச்சிட்டே போல என்றான். சார் நீங்களே இப்டி சட்டத்தை கையிலெடுக்க கூடாது. மீரா என் ஸ்டாப் தான் ஆனா நான் கொலை பண்ணல .நான் உனக்கு அவகாசம் தரேன் மரியாதையா நீ கொள்ளை அடிச்ச மக்கள் பணம் 25 கோடி அதை குடுத்துட்டு எங்கேயாவது ஓடிடு .இல்லேனு சொன்னா encounter லிஸ்ட்ல மோத பேரு ஷியாம் அடுத்த பேரு உன்னதுதான் என்ன சார் பேசணும்னு சொல்லிட்டு இப்போ மெரட்டுறீங்களே நான் இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் .உங்களுக்கு ஷ்யாமை புடிக்க முடியலை அதுக்காக எல்லா கேஸையும் என் பேரிலேயே எழுதுவீங்களா . நீ போகலாம் சிங்காரம் .மறுபடி சந்திப்போம் .ரவி இன்னும் ஒன் ஹௌர்ல மீரா லேப்டாப் என் டேபிளுக்கு வந்தாகணும் .

ராம் வெவ்வேறு இடங்களுக்கு அலைந்தான் .ஷியாம் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை .ஆனால் அவனால் ஏமாற்றப்பட்டவர்கள் ராமுடன் சேர்ந்து கொண்டார்கள் .மொத்தமாக ஒரு வாட்ஸாப்ப் குரூப் உருவாக்கி ஷ்யாமை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள் . அவனுடைய வளர்ப்பு தந்தையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவன் என் மகன் என்று சொல்லி கொள்ளவே வெட்கமாயிருக்கிறது தவிர அவன் ஒரு கொலைகாரனாக இருக்க வாய்ப்பு அதிகம் என்று சொன்னார் .

எதிர்பார்த்தபடி யாரும் மீராவின் வீட்டுக்கு வரவில்லை . எதிர்பாராமல் ரவியிடம் இருந்து அழைப்பு வந்தது ராமுக்கு . என்ன சார் அமெரிக்கா போயிருக்கீங்களா வந்த உடனே உங்கள அரெஸ்ட் பண்ண சொல்லி ஆர்டர் வெச்சிருக்கேன் வாங்க .இவன் போனை துண்டித்தான் . தீபு இனி நாம போன்ல பேசிக்க வேண்டாம் . நீ ஆபீஸ் பூட்டிட்டு வீட்ல இருந்து ஒர்க் பண்னு கொஞ்ச நாளைக்கு நான் தலைமறைவா இருக்க வேண்டி வரலாம் .தீபு ராகவுக்கு தகவல் சொன்னாள். பிரச்னை ஒன்னும் பெருசா இல்லையே நீ வேணா இங்க வந்து கொஞ்ச நாள் இரேன் தீபு . இல்ல சார் நான் இங்கே இருந்து செய்ய வேண்டிய வேலை நெறைய இருக்கு .ஓகே தீபு பை சார் . என்னவாம் என்றாள் ரஞ்சனி ஒண்ணுமில்லை நம்ம ராம் மேல போலீஸ் வாரண்ட் போட்டிருப்பாங்க போல .டிடெக்ட்டிவ் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணம்னு போன தடவ பார்த்தப்ப சொன்னாரு .

 கொடைக்கானல் ட்ரிப்பில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்திருந்தது .சீக்கிரம் என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்று காதோரம் ரஞ்சனி சொன்னது ராகவை வேறோர் உலகத்துக்கு கொண்டு சென்றது.

என்ன திமிரா பேசுறான் பாருங்க சிங்காரம் போலீஸ் எல்லாம் கையாலாகாதவன்னு நெனைச்சுட்டான் போல .அந்த ஷியாம் பைலை கொண்டு வாங்க . ரஞ்சனி என்ன பண்றாங்க? அவங்க கூட காலேஜ் ல படிச்ச ஆளோட செட்டில் ஆயிட்டாங்க . ம்ம் எதுக்கும் ரஞ்சனியை வர சொன்னேன்னு சொல்லுங்க .சிங்காரமும் சும்மா இல்லை சீக்கிரம் ஷ்யாமை கண்டுபிடிக்கணும் அவன்கிட்ட இருந்து பணத்தை வாங்கணும் .ரொம்ப நாளைக்கு தாக்குப்பிடிக்க முடியாது . ஷ்யாமோட அக்கௌன்ட் யு எஸ் ல இருக்கு பாஸ் அவனே நெனச்சாலும் போக முடியாது .நமக்கு வேண்டிய ஆள் யாராவது யு எஸ் ல இருந்தா காண்டாக்ட் பண்ணி பாக்கலாம் .அதுவும் நல்ல யோசனைதான் .

ராம் யு எஸ் ட்ரிப் முடித்துக்கொண்டு வந்துவிட்டான் . ஏர்போர்ட்டில் வைத்தே அவனை அரெஸ்ட் செய்வார்கள் என எதிர்பார்த்தான் .ஆனால் ரவி ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தான் .இவனை பார்த்தும் இந்த முறை வெறும் வார்னிங்கோட விடறேன். அடுத்த தடவ சொல்லிட்டெல்லாம் இருக்க மாட்டேன் என்றான் . தேங்க்ஸ் ரவி என்று சொல்லிவிட்டு விருட்டென டாக்ஸியில் ஏறி மறைந்தான் ராம் .சஞ்சயிடம் பொறுப்புகள் போன பின்பு ரவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை .தீபுவை பார்க்க வேண்டும் போல் இருந்தது . இப்போதைக்கு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது என நினைத்தான் . 

தூத்துக்குடியிலிருந்து போன் பண்ணியிருந்தார்கள் .முத்து இரவு பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக தகவல் வந்தது .உடனே கிளம்ப தயாரானான் .ரஞ்சனி தடுத்துவிட்டாள். மறுபடி ஆபத்தை தேடி போக வேண்டாம் என்றாள்.அவன் திட்டம் போட்டு எல்லோரையும் காலி பண்றான் . ராமுக்கு சேதி சொன்னான் . அவனும் அதையே சொன்னான் கொஞ்சம் பொறுங்க .சஞ்சய் கூடிய சீக்கிரம் ஷ்யாமை கண்டுபிடிச்சுவோம்னு சொல்லி இருக்காரு.சஞ்சய் ரஞ்சனியை துருவி துருவி விசாரித்தான் . மீராவை பற்றி தன்னிடம் சொன்னதே இல்லை எனவும் ரஞ்சனி சொன்னாள். anyway தேங்க்ஸ் நீங்க இவ்ளோ தூரம் வந்ததுக்கு .

ரஞ்சனியும் ராகவும் தீபு வீட்டில் தங்கினர். தீபுவுக்கு ரஞ்சனியை ரொம்ப பிடித்துவிட்டது. ரஞ்சனியை மட்டும் ஊருக்கு அனுப்பி வைத்தான் .ஏதாவது அப்டேட் தீபு என விசாரித்தான் . சார் வந்தும் என்னை காண்டாக்ட் பண்ணல . அதனால எதுவும் பண்ணல இப்போதைக்கு .ராம் அவசரம் ஸ்பென்சர் பிளாசாவிற்கு நேரில் வருமாறு தீபுவுக்கும் இவனுக்கும் மெசேஜ் அனுப்பியிருந்தான் .நாளைக்கு சிங்காரத்தை encounter செய்ய போகிறார்களாம் அதனாலே ஜாக்கிரதையா இருங்க இன்னிக்கி நைட்டு அவனை அரெஸ்ட் பண்ண பிளான் பண்ணியிருக்காங்க . சரி பாப்போம் என சொல்லிவிட்டு மறைந்தான் ராம் .

தீபூவையும் ,ராமையும் கட்டி வைத்திருந்தார்கள் . எங்களையே follow பண்றீங்களா உங்களுக்கு வேற கேஸ் கிடைக்கலையா ? தீபுவை விட்டுடு ப்ளீஸ் நான்தான் எல்லாம் பண்ணேன் .உன்னை விட சொல்லு விட்டுட்டுடறேன் .தீபுவை விட சொல்லாதே .அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிப்பதற்குள் சிங்காரமே வந்தான் .ஷியாம் பத்தி என்ன கண்டுபுடிச்சேன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கலாம் .இல்லேன்னா இங்கேயே கெடந்து சாக வேண்டியதுதான் . எந்த இன்போர்மஷனும் கிடைக்கலைங்கிறதுதான் நிஜம் . அப்போ மீரா வீட்டுக்கு 10000 குடுத்தியே என்ன எடுத்த அங்கிருந்து . சொல்றியா இல்ல தீபுவோட விளையாடட்டுமா ? வேண்டாம். பென் டிரைவ் தான் எடுத்தேன் 

அதா குடுத்துட்டு இவளை கூடி போ அது என் பேங்க் லோக்கர்லதான் இருக்கு .அப்போ இவனோட போங்க அந்த பென் drive குடுத்தான்னா பாருங்க இல்லேன்னா ..தீபூவையும் ,ராமையும் கட்டி வைத்திருந்தார்கள் . எங்களையே follow பண்றீங்களா உங்களுக்கு வேற கேஸ் கிடைக்கலையா ? தீபுவை விட்டுடு ப்ளீஸ் நான்தான் எல்லாம் பண்ணேன் .உன்னை விட சொல்லு விட்டுட்டுடறேன் .தீபுவை விட சொல்லாதே .அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிப்பதற்குள் சிங்காரமே வந்தான் .ஷியாம் பத்தி என்ன கண்டுபுடிச்சேன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கலாம் .இல்லேன்னா இங்கேயே கெடந்து சாக வேண்டியதுதான் . எந்த இன்போர்மஷனும் கிடைக்கலைங்கிறதுதான் நிஜம் . அப்போ மீரா வீட்டுக்கு 10000 குடுத்தியே என்ன எடுத்த அங்கிருந்து . சொல்றியா இல்ல தீபுவோட விளையாடட்டுமா ? வேண்டாம். பென் டிரைவ் தான் எடுத்தேன் 

அதா குடுத்துட்டு இவளை கூடி போ அது என் பேங்க் லோக்கர்லதான் இருக்கு .அப்போ இவனோட போங்க அந்த பென் drive குடுத்தான்னா பாருங்க இல்லேன்னா ..

பேங்க் லாக்கரில் இருந்த பென் டிரைவ் ரகசிய கேமரா கொண்டது .அதை கொடுத்தான் .திரும்ப ராமை இழுத்து கொண்டு வந்தனர் .தீபா ஆர் யு ஓகே என்றான் ராம் .தீபாவின் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டது . இந்த information போதுமே இதை மொதல்லேயே செஞ்சிருக்கலாமே .அப்போ என் ஷேர் ரெடி பண்ணு சிங்காரம் என்றபடியே வந்தான் சஞ்சய் . நிச்சயமா. அவங்களை போக விடு.அவங்கள காட்டி குடுத்ததுக்கு என் பீஸ் குடு .தீபுவும் ராமும் அங்கிருந்து ஓடினர் .

கொஞ்ச தூரம் போனதும் மொபைல் on செய்து பென் டிரைவ் கேமரா மூலமாக அங்கு என்ன நடக்கிறதென்பதை பார்த்தனர் .உன் பீஸ்தானே சஞ்சய் இந்தா வாங்கிக்கோ என சுட்டான் சிங்காரம் .சுருண்டு விழுந்து செத்தான் சஞ்சய் .அதிர்ச்சி விலகாமல் தீபுவும் ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் .