webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part34

தீப்தி ஜெகநாதனை சந்திக்க விரும்புவதாக சொன்னாள்.கொஞ்ச நாள் பொறு தீப்தி . நாம இப்போதான் குருஜிக்கிட்டே இதை பத்தி பேசி இருக்கோம் என்றான் ராம் . அப்போ என்னை திரும்ப ஆசிரமத்துக்கு அனுப்பிடுவீங்களா ராம் ? அப்படியெல்லாம் இல்லை . உன் விருப்பமென்ன தீப்தி. நான் அப்பா கூடவே போறேன் . சரி கண்டிப்பா இதை நிறைவேத்துவேன். குருஜி கேட்டா என்ன சொல்லுறது . அதை நான் பாத்துக்குறேன் . நீ ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காரு . ஓகே ராம். ராம் ஆசிரமத்துக்கு போனான் . குருஜியிடம் பேச வேண்டும் என சொன்னான் . இப்போ யோக நிலைல இருக்கறதுனால இன்னைக்கி யார்கூடவும் பேசமாட்டார் . நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க என்றார் தலைமை சீடர் .

 

ராம் ஏமாற்றத்துடன் திரும்பினான் . மறுநாள் குருஜி அவனை நேரில் வந்து சந்திக்கும்படி அழைத்தார் . ஜெகநாதன் கேஸ் வாபஸ் வாங்கிட்டான். நீ தீப்தியை கொண்டு வந்து விட்டுவிடு . அந்த பெண் என் கூட இருக்குற வரை எனக்கு பாதுகாப்பு . சரி குருஜி . ஆனால் தீப்தி அவள் அப்பாவோடு போக விரும்புகிறாள் . அதெல்லாம் கனவிலும் நடக்காது . சரி குருஜி நான் அவளை கொண்டு வந்து விட்டு விடுகிறேன். இதை எப்படி சரி செய்வது என ராம் திகைத்தான்.

நீ போ தீப்தி . அடுத்த வாரம் நடக்கும் பூஜை முடிந்தவுடன் நானே உன்னை அழைத்துக்கொள்கிறேன் .பெங்களூரில் இன்னொரு கேஸ் இருக்கிறது அதை முடித்துவிட்டு வருகிறேன் .தீப்தி பிரிய மனமில்லாமல் விடை கொடுத்தாள். சிறிய பேனா ஒன்றையும் லதா பரிசளித்தாள். இதை குருஜி அறையில் வைத்து விடு என்று சொன்னாள்.

ஏற்கனவே அதே மாதிரி complaint கொடுத்திருந்த விநாயகம் என்பவரை சந்தித்தான். என் மனைவியையும் மகளையும் வசிய படுத்தி இதே போலத்தான் வைத்திருந்தார்கள் . கோர்ட் உத்தரவு பெற்றுத்தான் அவர்களை மீட்க முடிந்தது . அதிலும் என் மகளைத்தான் மீட்க முடிந்தது . மனைவி மறுத்துவிட்டார். நீங்கள் கோர்ட் மூலமாக செல்வதே நல்லது . யாருமே குருஜிக்கு எதிராக வாதாட வரவில்லை . கடைசியில் வக்கீல் வெற்றிவேலன் தான் ஆஜரானார். அவர் கொஞ்ச நாளில் ஒரு விபத்தில் காலமாகிவிட்டார் . விபத்தா ? அது விபத்து மாதிரி குருஜி செட்டப் செய்ததாக சொல்கிறார்கள் . 

வெற்றிவேலனின் குடும்பத்தை சந்தித்தான் . அவருடைய மகள் ஷர்மிளா வக்கீல் தான் எனும்போது ஆச்சர்யம் அடைந்தான் . அப்பாவோட மரணம்தான் என்னோட இப்போதைய வக்கீல் தொழிலுக்கு காரணம் . அவரை கொன்னவங்க யாருனு கண்டுபிடிச்சிட்டோம். ஆனா குருஜி மேல வாரண்ட் குடுக்க அரசு தயங்குது . கோர்ட் மூலமா முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கோம் . அப்பாவோட accident திட்டமிட்ட கொலைன்னு prove பண்ண எங்க கிட்ட குருஜி கிட்ட அவர் பேசுன வீடியோ இருக்குது . ஆனா அது வெறும் மிரட்டல் விடியோதான் . இன்னொரு ஒரிஜினல் வீடியோ இருக்கு . குருஜி கஞ்சா மயக்கத்துல தான்தான் அந்த கொலையை செய்ததா ஒத்துகிற வீடியோ. இதை அடுத்ததா அந்த பதவிக்கு வர போற தலைமை சீடர் குடுக்கறதா சொன்னார். இன்னைக்கோ நாளைக்கோ அந்த வீடியோ வந்துடும். அப்புறம் நிச்சயம் குருஜிக்கு எதிரா வாரண்ட் வாங்கிடலாம் . நான் அதுவரை இங்கேயே ஹோட்டல் பிளாசா ல தங்கி இருக்கேன் . இது எனக்கும் ரொம்ப முக்கியமான கேஸ் . தேவைப்பட்டா நானே ஆஜர் ஆயிடுறேன் சென்னை கோர்ட் ல. நான் பேசிக் ஆஹ் ஒரு வக்கீல்தான் என்றான் ராம்.தீப்தி திட்டமிட்டபடி கேமரா பொருத்திய பேனாவை குருஜி ரூமில் வைத்தாள். அதில் கேமரா இருப்பதை லதா சொல்லவில்லை . தலைமை சீடர் வெற்றிவேலன் கொலை வழக்கு சம்பந்தமான விடியோவை ஷர்மிளா வுக்கு அனுப்பினார் . 

 ஷர்மிளா அந்த வீடியோ வை ராமுக்கு வாட்ஸாப்ப் செய்தாள்.என் உயிருக்கும் ஆபத்து இருப்பதால் இதை உங்களுக்கு அனுப்புகிறேன் என வாட்ஸாப்ப்பில் மெசேஜ் அனுப்பியிருந்தாள் .தீப்தியிடம் இருந்து போன் வந்தது தலைமை சீடர் இறந்து விட்டதாக . இது எப்படி நடந்தது குருஜியுடன் பேசிக்கொண்டிருந்த போது ஹார்ட் அட்டாக் வந்ததாக சொல்கிறார்கள் . நீ ஜாக்கிரதையாக இரு தீப்தி . கோர்ட்டில் அந்த விடியோவை பார்த்த ஜட்ஜ் குருஜிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தார் . அடுத்த நாளே ஆசிரமத்தில் ரெய்டு செய்து குருஜியை காவலில் எடுத்தார்கள்.தீப்தியுடன் பேசிய லதா அந்த பென் காமெராவை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விடும்படி சொன்னாள் . அதை போட்டு பார்த்த போது குருஜி தீப்தியை மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ இருந்தது. அப்பா கூட போறேன்னு சொன்னியா?நீ என் சொத்து . நீ இங்கேயிருந்து போனா அப்புறம் கர்பமாதான் போகமுடியும் ஜாக்கிரதை . ராமுக்கு வாட்ஸாப்ப் செய்தாள் லதா . 

இரண்டாவது விடியோவும் வெளியாகி பரபரப்பானது கோர்ட். குருஜி க்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால் தீப்தி தன் அப்பாவோடு போக விரும்பினால் போகலாம் என தீர்ப்பு சொன்னார்கள் . ராம் ஷர்மிளாவுக்கு நன்றி சொன்னான். இது நடந்து ஒரு வாரத்தில் குருஜி ஜாமீனில் வெளி வந்தார். மக்கள் எப்பவும் போல அவர் நடத்திய பூஜையில் கலந்து கொண்டனர். கடைசி தீர்ப்பு வருவதற்குள் சாட்சிகள் அனைத்தையும் கலைத்து விட தீர்மானித்தார். ஒரு சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். ராம், ஷர்மிளா, ஜெகநாதன் ஆகியோரை அழைத்து பேசினார். இப்போது நிதானமாக பேசினார். நீங்கள் கேஸ் வாபஸ் வாங்கினால் நான் தமிழ்நாட்டை விட்டே போய் விடுகிறேன் என்றார். ஆனால் ஷர்மிளா விஷம் எங்கிருந்தாலும் ஆபத்துதான் என்றாள். திட்டவட்டமாக மறுத்துவிட்டாள் . நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் எழுதி தாருங்கள் atleast உங்கள் சொத்து மட்டுமாவது கிடைக்கும் என ஷர்மிளா சொன்னாள் .

குருஜி நீங்கள் போகலாம் என்றார். போலீஸ் துணையோடு தீப்தி மீட்கப்பட்டாள். ராம் கொஞ்சம் யோசனை செய்தான். தீப்தியை கொஞ்ச நாள் பெங்களூருவுக்கு அனுப்பினால் என்ன என யோசித்தான். இங்கு அவளுக்கு பாதுகாப்பு இருக்காது. ஷர்மிளாவிடம் பேசினான் . நீங்க அனுப்பி விடுங்க நான் பாத்துக்கிறேன் என்றாள். சட்டத்தில் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படியோ ஜாமீனை நீடித்து கொண்டு வந்தார் குருஜி. ஷர்மிளா அந்த ஆசிரமத்தை சோதனையிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தாள். மேலும் பல பெண்கள் உள்ளே சிக்கி கொண்டிருப்பதால் உளவியல் கலந்தாய்வு நடத்தவேண்டும் என கேட்டு கொண்டிருந்தாள் . அதன் படி நடக்க கோர்ட் உத்தரவு போட்டது. குருஜி ஆத்திரத்தின் உச்சிக்கே போனார். ஷர்மிளாவிடம் போனில் பேசினார் அதான் தீப்தியை விட்டாச்சே அப்புறமும் ஏன் குடைச்சல் குடுக்கிறே? அப்பா சாவுக்கு நியாயம் கிடைக்கிற வரை நான் ஓய மாட்டேன். உன் அப்பா செத்தது ஒரு விபத்து . நீ செஞ்ச பிளான்ல தான் அவர் செத்தாரு.நீ ஜெயிலுக்கு போற வரை ஏன் போராட்டம் ஓயாது என்றாள் ஷர்மிளா.இனிமேல்தான் நீ ஒரிஜினல் குருஜியை பார்ப்பே என்று சொன்னார் குருஜி .

ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பலரும் வீட்டுக்கு போக தயாராயினர் . உளவியல் கலந்தாய்வில் அவர்களில் சிலர் முதலில் பிடிவாதமாக வர மறுத்தாலும் பிறகு வீட்டுக்கு போக சம்மதித்தனர். வெளிநாட்டு நிறுவனங்கள் குருஜிக்கு குடுத்த நன்கொடையை நிறுத்தின . இது குருஜிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது . ராம் நீ ஒரு தடவை என்னை வந்து பார்த்துட்டு போ என்றார். என்ன நெனைச்சிகிட்டு இருக்கா ஷர்மிளா . அவ கதையை முடிச்சிடுவேன்னு சொல்லு . இப்போதைக்கு நான் சும்மா இருக்கேன்னு நெனைச்சிட்டா போல என்னோட செல்வாக்கு தெரிஞ்சா அவ பார் கவுன்சில் மெம்பெர் ஆ கூட இருக்க முடியாது .சரி குருஜி நான் அவங்ககிட்ட பேசறேன் . 

ஷர்மிளா பிடிவாதமாக இருந்தாள். ஏன் உயிரே போனாலும் சரி குருஜிகு தண்டனை வாங்கி குடுக்காம போக மாட்டேன் என்றாள் . தீப்தி எப்படி இருக்கிறாள் என்றான் எப்போதும் உங்களை பத்தின பேச்சு . சீக்கிரம் காலேஜ் போனும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாள் . ஷர்மிளாவுக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த ராம் குருஜியை நேரடியாய் எதிர்ப்பதை தவிர்த்து வந்தான் . கஞ்சா போதையில் குருஜி பேசியது சட்டப்படி செல்லாது என அறிவித்தது கோர்ட். குருஜிக்கு treatment கொடுத்து நல்ல நிலைக்கு வந்த பிறகே வாக்குமூலம் பெற வேண்டும் என அறிவித்தது . அதற்காக சிறப்பு மருத்துவர்களையும் நியமித்தது .இது ஷர்மிளாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இப்போதைக்கு குருஜியை வாக்குமூலம் குடுத்தாலும் டாக்டர்கள் சான்றிதழ் வழங்கினால் மட்டுமே அது செல்லுபடியாகும். மறுபடி ஒரு சமரச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் குருஜி . இந்த முறை மிகுந்த எச்சரிக்கையோடு வந்திருந்தான் ராம் . ஷர்மிளா ,ராம் இருவர் மட்டுமே பங்கேற்றனர். என்ன ஷர்மிளா எல்லாம் முடிஞ்சு போச்சே அப்புறம் என்ன குருஜி பவர் என்னனு இப்போ உனக்கு தெரியுமே . குருஜி இப்போ எதுக்கு எங்களை வர சொன்னீங்க . ஆஹ் உன்னை பார் கவுன்சில்லிருந்து நீக்கியாச்சு . இந்தா அதோட ஆர்டர் copy .இனிமே நீ வக்கீல் தொழில் பண்ண முடியாது டீச்சர் தொழில் தான் பண்ண முடியும் . அமைதியாக இருந்தாள் ஷர்மிளா . நீ இதை செய்வேன்னு எனக்கு தெரியும் அதனாலதான் நான் ஒரு முடிவோட வந்திருக்கேன் கையிலிருந்த பிஸ்டல் திடீரென வெடித்தது . அந்த குண்டு குருஜியின் நெஞ்சு பகுதியில் பாய்ந்தது . என்ன ஷர்மிளா இப்படி பண்ணிடீங்களே வாங்க போகலாம். சுற்றி நின்று பெண்கள், ஆண்கள், வெளிநாட்டவர் எல்லாம் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் அழவும் செய்தனர். அது ராமுடைய பிஸ்டல் தான். எப்படியோ ஷர்மிளாவுக்கு தெரிந்து விட்டிருக்கிறது .போலீசார் ஷர்மிளாவை கைது செய்தனர் . எனக்கு வேற வழி தெரியல ராம் இந்த மாதிரி போலி சாமியார்களை விட்டு வைக்க கூடாது என்றாள் . நேரில் பார்த்த ஒரே சாட்சியான ராமும் சட்டத்தை கையிலெடுக்க முடிவெடுத்தான் . இந்த முறை ஷர்மிளாவை காப்பாற்ற அவனே ஆஜர் ஆவது என முடிவெடுத்தான்.