webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part28

குமரேஷ் லாக்கரை ஓபன் செய்தால் போதும் . அதிலுள்ள பண நோட்டுகளை காணாமல் போன நோட்டுகளுடன் ஒப்பிட்டால் எளிதில் ஏழுமலை மீதுள்ள பழி காணாமல் போய்விடும். இரண்டு நாளில் சௌம்யாவிடம் சொல்லி ஒரு லாக்கர் அக்கௌன்ட் ஓபன் பண்ணினான். பழைய படங்களில் வருவது போல சாவியை குமரேஷ் மாற்றி குடுத்தால் போதுமானது . எல்லாம் கூடி வருகையில் வெங்கட்டின் மனைவி மட்டும் வராமல் இருக்க வேண்டும் . . 

குமரேஷ் போன் செய்திருந்தான் 10 missed கால்ஸ் என்றிருந்தது. இன்று காலை வெங்கட் மனைவி வந்ததாகவும் லாக்கரை திறந்து ஏதோ எடுத்து சென்றதாகவும் கூறினான். பரவாயில்லை குமரேஷ் நீ ஒரு டூப்ளிகேட் key மட்டும் ரெடி பண்ணு என்றான். key ரெடி ஆ இருக்கு வீட்டுக்கு இப்போ வரீங்களா அட்ரஸ் மெசேஜ் உடனே வரேன் . போய் பார்த்த பொது குமரேஷ் அங்கு இல்லை . வெங்கட் என்பவரும் போலீஸ் ஒருத்தரும் வந்து அழைத்து போய்விட்டதை சொன்னார் அவர் மனைவி . எப்போ போனாங்க இப்போதான் 10 நிமிஷம் இருக்கும் . ஏதாவது சாவி கொடுத்தாரா இல்லையே . வண்டி கெடக்கே venkat வண்டி ல தான் போனாங்க . இப்போ வந்துடறேன்னு சொல்லிட்டு போனாங்க . வண்டியில் சாவி இருந்தது . வண்டி சாவியோடு லாக்கர் கீயும் இருந்தது .

மறுநாள் குமரேஷ் பேங்க் பக்கம் வரவில்லை . போன் பண்ணியும் எடுக்கவில்லை . வெங்கட்டின் மனைவியுடைய லாக்கரில் பணம் இருந்தது . சரியாக ரெண்டு லட்சம் ரூபாய் . எடுத்து வைத்து கொண்டான். துணிந்து இந்த திருட்டு வேலையை ராம் செய்தான் . குமரேஷ் அடுத்த நாள் வந்து விட்டான். அவனுடைய முகம் பேயறைந்ததை போல் இருந்தது. காணாமல் போன நோட்டுகளின் வரிசை எண்களை எழுதி ராமின் லாக்கர் இல் வைத்து விட்டான். மறுபடி ராமுக்கு போன் செய்த போது ராம் போனை எடுக்கவில்லை . அதற்குள் போலீஸ் திடீரென வந்து குமரேஷ் கொஞ்சம் ஸ்டேஷன் வரை வரணும் என்று அழைத்து போனது .

குமரேஷை ஏழுமலை கேஸ் விஷயமா விசாரித்தார்கள் . அவர் எதுக்காக திருடனும் என்றெல்லாம் விசாரித்தார்கள் . உங்களை ஒரு சாட்சியா இதுல சேர்க்கிறோம் . உங்க வாக்குமூலத்தை எழுதி குடுத்துட்டு போங்க என்றார்கள் . ராம் தன்னிடமிருந்த ரெண்டு லட்சம் பணத்துடைய வரிசை எண்களை எழுதி கொண்டான் . உங்க போன குடுங்க என்று குமரேஷ் போனை வாங்கி பார்த்தார்கள் . வேற யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் அப்புறம் ஏழுமலை கதிதான் உங்களுக்கும் என்றார்கள் . போனை டேப் செய்யலாம் என்பதால் நேரில் சந்திக்கலாம் என ராம் ஆபீஸ் க்கு போயிருந்தான் குமரேஷ் . அங்கு தீபுதான் இருந்தாள். லாக்கர் ல சீரியல் நம்பர்ஸ் எழுதுன சீட்டு இருக்கு அதையும் இதையும் compare பண்ண சொல்லுங்க என்றான். சரி நான் சார் வந்தா சொல்றேன் என்றான், எனக்கு போன் பண்ண வேண்டாம் போலீஸ் என்னை follow பண்றாங்க எனவும் சொன்னான். 

இவனுடைய பேங்க் லாக்கர் ஐ ஓபன் செய்து ஒப்பிட்டு பார்த்தான். சரியாய் இருந்தது . இந்த பணத்தையும் சீட்டையும் கமிஷனர் ஆபீஸ் புகார் பெட்டியில் போடுவதென முடிவெடுத்தான் . குமரேஷ் காணாமல் போய் விட்டதாக அவன் மனைவி ஸ்டேஷனில் complaint அளித்தாள். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்துட்றேன்னு சொல்லிட்டு போனார் சார் அதுக்கப்புறம் வரவே இல்லை என்றாள் . ராமுக்கு போன் செய்து எப்புடியாவது கண்டுபிடிங்க சார் என்றாள்.குமரேஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது . எதுவும் சிக்கவில்லை. குமரேஷ் எங்கு போயிருப்பான் எனவும் புரியவில்லை . சௌம்யா, ரங்கராஜனிடம் விசாரித்ததில் கொஞ்ச நாளா அவன் டென்ஷன் ஜாஸ்தியாவே இருந்தான் சார் . ஏழுமலை மாறி அவனுக்கும் நடந்துடுமோங்கிற பயம் இருந்துச்சு . பணம் கோர்ட்டில் சப்மிட் செய்யப்பட்டது . ஏழுமலை மீது இருந்த கேஸ் வாபஸ் பெறப்பட்டது . அநியாயமாய் ஏழுமலையை கொன்ற போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது .இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு போன் செய்த போது நான் மொதல்லேயே சொன்னேன் இதுல தலையிடாதேன்னு .இப்போ இன்னொரு உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு என்றான், ரமேஷ் தயவு செஞ்சு ஏதாவது செய் குமரேஷ் ரொம்ப அப்பாவி. நாங்களும் தேடிகிட்டுதான் இருக்கோம் . நிச்சயமா கிடப்பான்னு நம்பறோம் . தேங்க்ஸ் ரமேஷ் என்று போனை வைத்தான் . 

ராம் இருக்காங்களா? நான் ராம் தான் பேசுறேன் .இப்போதான் குமரேஷை R2 ஸ்டேஷன் லேயிருந்து ஹாஸ்பிடல் கொண்டு போறாங்க. எந்த ஹாஸ்பிடல் . மல்லிகா நர்சிங் ஹோம் னு நெனைக்கிறேன். சீக்கிரம் போய் காப்பாத்துங்க சார் . குரல் துண்டிக்கப்பட்டது . இவனும் தீபக்கும் விரைந்தார்கள் . ரெண்டு போலீஸ் காவலுக்கு இருந்தார்கள் அது குமரேஷ்தானா என்பதை உறுதிப்படுத்த தீபக்கை அனுப்பினான் . குமரேஷை நல்லா அடிச்சிருக்காங்க . டிரீட்மென்ட் போயிட்டிருக்கு . நான் இங்கேயே இருக்கேன் . நீங்க பிரெஸ்ஸுக்கு இன்போர்ம் பண்ணுங்க . நீ ஒன்னு செய் குமரேஷ் விடியோவை வாட்ஸாப்ப் பண்ணு. 10 நிமிடத்தில் மீடியா மொத்தமும் குவிந்தனர் . குமரேஷ் காணோம்னு சொன்னீங்க ஆனா உங்க custody லதான் இருக்காரு . போலீஸ் திகைத்து போய்விட்டது. அவரை இப்போதான் கண்டுபிடிச்சோம் ரொம்ப மோசமான நிலமைல இருந்தாரு . அதனாலே டிரீட்மென்ட் கொண்டு வந்தோம் . நீங்க இதை புரிஞ்சிக்காம எதையோ எழுதாதீங்க . சரிங்க சார் எதுக்காக இவரை அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கீங்க அது வந்து ஏழுமலை கேஸ் ல இவர் மேலயும் சந்தேகம் இருக்கு. அதனால . இவரை எப்போ கோர்ட் ல ஆஜர் படுத்துவீங்க . கூடிய சீக்கிரம் . ரெண்டு நாளில் குமரேஷ் வெளியில் வந்து விட்டான். நீங்க எப்படியும் என்னை காப்பாத்த வருவீங்கன்னு தெரியும் சார். அதனால்தான் அந்த லேடி பிசி கிட்டே உங்க நம்பரை குடுத்துட்டு வந்தேன் . எல்லா பிரச்னையும் முடிஞ்சிடிச்சினு நெனைக்கிறேன் . இல்ல சார் வெங்கட்டும் பவித்ரனும் இந்த பிரச்னைக்கெல்லாம் மூல காரணம் . அவங்க அரெஸ்ட் ஆனாதான் எல்லாம் normal ஆகும் அதுவரை பேங்கை ஏமாத்திகிட்டு இருப்பானுக. உடம்ப பார்த்துக்கோங்க நான் வரேன் என்றான் ராம் .

எப்படியாவது வெங்கட், பவித்ரன் இருவரையும் கையும் களவுமாக பிடிக்க வேண்டும் . அதற்கு ஏதாவது ஐடியா இருந்தா குடேன் தீபு . நாம வெங்கட் கிட்டே பேசி பாப்போம் . நீங்க பணத்தை எடுத்த சிசிடிவி காட்சிகள் நம்ம கிட்ட இருக்குனு சொல்லி பார்ப்போம் . அவன் அதை பத்தியெல்லாம் கவலை படமாட்டான். சும்மா சொல்லுங்க நெஜமாவே அப்டி ஒரு வீடியோ இருந்தா நாம மறுபடி அந்த சிசிடிவி காட்சிகளை செக் பண்ணுவோமா . அதுக்கு நாம ஒன்னும் பேங்க் ஸ்டாப் இல்லையே . சௌமியாகிட்டே கேப்போம் . சௌமியா பார்த்து சொன்னா போதும் . அது என்ன தேதி எனக்கொரு சந்தேகம் அத இந்நேரம் அழிக்காம இருப்பாங்களா ? ஜஸ்ட் ட்ரை பண்ணி பாப்போம் . வெங்கட்டுக்கு போலீஸ் சப்போர்ட் இருக்கு. 

நாளைக்கு சௌமியா கிட்டே பேசுறேன். தீபு நீ அந்த மேடம்கிட்டே உன்னோட purse தொலைஞ்சு போச்சு . அது ஏ டி எம் ல தான் தொலைஞ்சதுன்னு complaint request குடு . அவங்க செக் பண்ணுவாங்க .தீபு complaint லெட்டரை மேனேஜர் பரமசிவத்திடம் கொடுத்தாள். சௌமியா இவங்களை அழைச்சுட்டு போய் செக் பண்ணும்மா என்றார். சிசிடிவி காட்சிகள் ஒழுங்கு படுத்தப்பட்டு இருந்தது . குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணத்தை எடுத்து அருகிலுள்ள குப்பை தொட்டியில் போடுவது தெரிந்தது . ஓ இதுதான் விஷயமா . அந்த காட்சியை ஜூம் செய்து பார்த்த போதுதான் இது தெரிந்தது . அந்த பைலை ஒரு pen டிரைவ் இல் பதிந்து கொடுத்தால் சௌம்யா. ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்றால் தீபு. வெங்கட் மறுபடி போய் அதை எடுத்திருப்பான் என சொன்னான் ராம் . இப்போ என்ன சார் . இப்போ நாம அந்த விடியோவை வெங்கட் நம்பருக்கு வாட்ஸாப்ப் பண்ணலாம் .

அவன் நம்மகிட்டே பேசும்போது ரெகார்ட் பண்ணிடலாம். வேண்டாம் சார் அவன் உஷாராகிடுவான். என்னதான் செய்றான்னு பார்ப்போமே . வெங்கட் போன் செய்தான். எவ்ளோ பணம் வேணும் ராம். நான் எனக்காக இதை செய்யல பவித்ரனுக்காக செஞ்சேன்.அவர் என்னை மிரட்டி செய்ய வச்சாரு. மத்தபடி எனக்கும் ஏழுமலைக்கும் எந்த பகையுமில்லை . இதை ஏன் மொதல்லேயே சொல்லல . அது வந்து.. சரி உங்க நெலமை புரியுது . நான் பவித்ரன் கிட்ட பேசிக்குறேன் . ரொம்ப தேங்க்ஸ் ராம்.பவித்ரன் கிட்ட பேசி பிரயோஜனமில்லை . நாம வெங்கட் கிட்ட பேசுன ஆடியோவை நியூஸ் சேனல் மூலமா பரப்ப வேண்டியதுதான். இது சரியாய் வருமா ராம் நாம வெங்கட் பேரை மறைச்சுதான் இதை பண்ணனும் . வேற வாய்ஸ் ல பண்ணி அனுப்பனும் . இந்நேரம் வெங்கட்டே பவித்ரன் கிட்டே சொல்லி இருப்பான். நிச்சயம் சொல்லி இருக்கமாட்டான். பவித்ரன் ஏழுமலையை நடத்துனவிதம் எல்லோருக்கும் தெரியும் . பவித்ரன் பற்றிய ஆடியோ தீயாய் பரவியது. ஏழுமலை கொலை விவகாரத்தில் பவித்ரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. பவித்ரனை உடனடியாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது . வெங்கட்டும் அரெஸ்ட் செய்யப்பட்டான்.ராம் இந்த கேஸில் உயிரை பணயம் வைத்த குமரேஷை நினைத்துக்கொண்டான் சௌம்யாவையும் பாராட்டினான். இறந்த ஏழுமலைக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தினான் .என்னதான் இருந்தாலும் அந்த லாக்கர் விஷயம் குழப்பத்தை உண்டுபண்ணும் னு நெனச்சேன் என்றாள் தீபு . நான் வெங்கட் மனைவிகிட்டே பேசிட்டுதான் அந்த பணத்தை எடுத்தேன் . அவங்களும் ஒத்துக்கிட்டாங்க . எப்படி? ஒரு டூப்ளிகேட் நகையை குடுத்தேன். அட போங்க சார் இது ராஜா காலத்து technic .ஆனா இன்னும் அதுக்கு மதிப்பு இருக்கே என்றான் ராம். குமரேஷையும் ,சௌம்யாவையும் பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள் . ஏழுமலை மறைவை இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை இன்னொரு முறை பார்க்கலாம் என்றார்கள் . இவனும் சரி என்றான் . பார்ட்டி வேண்டாமென்று முடிவெடுத்தான்.