webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part26

அது ஒரு பழைய கேஸ் என்பதால் காசிநாதன் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை . போலீஸ் காசியை மிரட்டி விட்டு விட்டார்கள் என்று சொன்னார் தீபிகா அம்மா. நந்தா ஊரிலிருந்து வந்தவுடன் ராமை தொடர்பு கொண்டான். ஆனந்த் agency என்ன ஆச்சு ? அது எங்க சித்தப்பா காசியோடது தான். ஆனா அவருக்கும் இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை . ஆனா அடுத்தவனை கொலை பண்ற அளவுக்கு அவருக்கு துணிச்சல் கிடையாது. அந்த பிரச்னைக்கப்புறம் காசி சித்தப்பா அந்த தொழிலையே விட்டுட்டார். இப்போ எங்கே அவர் . அவர் செத்து மூணு மாசம் ஆச்சு . குடி பழக்கத்துக்கு அடிமை ஆகிட்டார். சரி நந்தா இந்த வீடியோ விஷயம் வேற யாருக்காவது தெரியுமா. நல்லா யோசிச்சு சொல்லு லிப்ட் ஆபரேட்டர் மணிக்கு தெரியும் .அவர் பொண்ணு கல்யாணத்துக்கு தீபிகா அக்கா பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க .அவரும் அமரனும் நல்ல காண்டாக்ட் ல இருப்பாங்க .அவங்ககிட்டே சொல்லி தீபிகா அக்கா அழுததா வருத்தப்பட்டாரு. 

தீபு மணியை நாம மிஸ் பண்ணிட்டோம் . மறுபடி அவரை காண்டாக்ட் பண்ணி பாப்போம் . சரி சார். அவர் நம்பர் மறுபடி ட்ரை பண்ணி பாரு . அவர் சம்சாரம்தான் போனை எடுத்தார் . அவர் போனை வெச்சிட்டு டூட்டிக்கு போயிட்டாரு . நான் வந்தா இந்த நம்பருக்கு கூப்புட சொல்றேன் . வேணாம் அவர் எத்தனை மணிக்கு வருவாரு . அவர் இப்போவெல்லாம் ரொம்ப லேட்டாதான் வராரு . எதுக்கும் 8 மணி போல வந்து பாருங்க . ரொம்ப நன்றிங்கம்மா . 

தீபு எட்டு மணிக்கு நீயும், லதாவும் போங்க. நான் அமரன பார்த்து பேசிட்டு வரேன். அமரனையா எதுக்கு . விஷயம் இருக்கு வந்து சொல்றேன் . என்ன அமரன் மீட் பண்ணலாமா சரி சார் . அந்த கட்டிடத்துக்கே போவோமா . என்ன சார் நீங்க சொல்றீங்க . அந்த வாய்ஸ் எங்கிருந்து வருதுன்னு கண்டுபிடிக்க . அப்படியா சொல்றீங்க . நீங்க ப்ளூடூத் பயன்படுத்துவீங்களா . அது வந்து ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும் .அது மூலமாத்தான் உங்களை பயமுறுத்துறாங்க .நீங்க அங்க வாங்க நானும் வரேன் . வேணும்னா கார்த்திக், நரேஷ் ரெண்டு பேரையும் கூப்ட்டுட்டு வாங்க . சரி சார் வரேன் எப்படியாவது அந்த குரல் கிட்டேயிருந்து விடுதலை கிடைச்சா போதும் .

எத்தனை மணிக்கு வரணும் சார் ஆறு மணிக்கு. சொன்ன மாதிரியே அமரனும் , நரேஷும் வந்திருந்தனர் . கார்த்திக் வரவில்லை . போலீஸ் கிட்டே நான் பேசிட்டேன் போலாமா என்றான் .மேலே மாடிக்கு போனபோது அதே குரல் திருமபாவும் கேட்டது . எதுக்குடா திரும்ப திரும்ப வரீங்க சாவு பயம் போயிடுச்சுல்ல என்றவுடன் கரண்ட் சுற்றிலும் துண்டிக்கப்பட்டது .மூவரும் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்து கொண்டனர். மொபைல் வெளிச்சத்தில் கீழே போயிடுவோம் சார் என்றான் நரேஷ் . நீதாண்டா மேல போக போறே என்ற வாறு ஒரு உருவம் அவன் மீது பாய்ந்தது . மொபைல் எகிறி விழுந்தது .

அமரனும் ,ராமும் கண்விழித்த போது நரேஷ் கீழே விழுந்து 10 நிமிடங்கள் ஆயிருந்தது . நரேஷும் போய் சேர்ந்து விட்டான். கார்த்திக் மட்டுமே பாக்கி . தீபுவும் , லதாவும் மணி வீட்டுக்கு போன போது மணி வாசலில் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்தார் . இவர்கள் தீபிகாவை பற்றி சொன்னதும், அவனுக 3 பேரும் என்னை பிடிச்சி தள்ளிவிட்டு ஒரே கலாட்டா பண்ணிட்டானுக. தீபிகா ஏதாவது முக்கியமான தகவல் சொன்னார்களா .அவங்க புருஷன் மிலிட்டரில இருந்து வந்ததும் ஒரு டைரிய குடுக்க சொன்னாங்க நாந்தான் வேலையை விட்டு நின்னதும் அத மறந்தே போயிட்டேன் . உள்ளே பெட்டிக்குள்ளிருந்து அதை எடுத்தார். இது நான் அமரன் சார்கிட்ட குடுத்துடறேன் . சரிங்கம்மா என்றார் மணி . ஒவ்வொரு தடவையும் உங்ககூட வர ஆளுங்க சாகுறாங்களே உண்மையை சொல்லுங்க அமரன் . யாரை வெச்சு இந்த வாய்ஸ் create பண்றீங்க .சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார். வேறு வழி இல்லாமல் அமரனை அரெஸ்ட் செய்தார்கள்.ராம் செய்வதறியாது திகைத்தான். தீபு அந்த டைரியை ராமிடம் ஒப்படைத்தாள். அன்புள்ள அமரனுக்கு நான் இறந்த பிறகுதான் இந்த டைரி உங்களுக்கு கிடைக்கும் . நீங்கள் இல்லாத போது எனக்கும் ப்ரவீனுக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டுவிட்டது . அதற்காக மன்னிப்பு கேட்கப்போவதில்லை . காலம் எனக்கு ஏதோ தண்டனை கொடுக்க போவதாய் உணர்கிறேன் .அதையே ஏற்று கொள்ள தயாராயும் இருக்கிறேன் . நீங்கள் யாரையும் பழி வாங்க வேண்டாம் . என் வாழ்க்கையை சீரழித்தவர்கள் அவர்களாகவே சாவார்கள் .தீபு, லதா, தீபக், எல்லோருமே எப்படி சார் இது சாத்தியம் எதிர் குரல் எப்படி சாத்தியம் என்றார்கள் . அங்கே reciever இருந்தால் எல்லாமே சாத்தியம் தான் ஆனால் எங்கிருந்து ஹேக் செய்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை 

நான் அதற்கான ஏற்பாட்டை செய்து விட்டே சாகுவேன். அது வரை என் உயிர் போகாது . ருக்மணி அக்காவிடம் கூட இதை பற்றி பேசினேன் அவர்கள் பயப்படுகிறார்கள் . நான் பிரவீனை நேசித்தது உண்மை . அவன் என்னை நேசித்ததும் உண்மை . ஆனால் வீடியோ எடுக்க நான் அனுமதித்திருக்க கூடாது. அது எத்தனை பேரை பழி வாங்குமோ எனக்கு தெரியாது . இருந்தாலும் ருக்மணி அக்கா சம்மதித்து விட்டார்கள் . எப்படியாவது நான் துடிதுடித்து கொண்டிருப்பதை போல அவர்களும் ஒவ்வொரு நொடியும் துடிப்பார்கள் .அமரன் நல்லா யோசிச்சு சொல்லுங்க ஒவ்வொரு தடவையும் நீங்க அங்க போகும்போது யார்கிட்ட சொல்லிட்டு வருவீங்க . யார்கிட்டயும் இல்ல . google மேப் மூலமா வருவீர்களா . இல்ல உங்களுக்கே வழி தெரியுமா . google மேப் மூலமாத்தான் வருவேன். உங்களை எப்பவாவது யாராவது follow பண்றமாரி பீல் இருந்ததா . இல்லை சார். 

ருக்மணி அக்காவுக்கு நீங்கள் நான் சொன்னபடி எல்லாம் செய்து முடித்து விட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் . முடியாவிட்டாலும் பிரச்னை இல்லை. அடுத்த ஏற்பாட்டையும் நான் செய்திருக்கிறேன் . நீங்கள் கவலை பட வேண்டாம் . நீங்கள் எனக்காக செய்த உதவிக்கும் செய்யப்போகும் உதவிக்கும் நன்றி .ராம் அந்த டைரியை எடுத்துக்கொண்டு ஸ்டேஷன் விரைந்தான். அமரனை ஜாமீனில் விட்டார்கள் . ருக்மணி அக்கா இருந்த இடம் தெரியவில்லை . வேறொரு nurse மாறியிருந்தார்கள். பரந்தாமன்தான் ருக்மணியை மாற்றியதாக சொன்னார்கள் . தீபிகா ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். தீபிகா அம்மாவிடமும் போலீஸ் விசாரித்த போது ருக்மணி பற்றி ஏதும் தெரியவில்லை. கார்த்திக் அடுத்து என்ன நடக்குமோ என பயந்தபடி இருந்தான். ராம் அமரனை வீட்டில் விட்டான். நீங்க அந்த காரை பயன்படுத்த வேண்டாம் சார். யாரோ நீங்கள் போவதற்கு முன்.. ஆனால் அந்த குரல் எப்படி சாத்தியம் ? அதுதான் எனக்கும் புரியாத புதிராக இருக்கிறது . தீபிகா இப்படி செய்வாள் என்று கனவிலும் நினைத்ததில்லை . கார்த்திகை நினைத்தாலும் கவலையாய் இருக்கிறது தீபு, லதா, தீபக், எல்லோருமே எப்படி சார் இது சாத்தியம் எதிர் குரல் எப்படி சாத்தியம் என்றார்கள் . அங்கே receiver இருந்தால் எல்லாமே சாத்தியம் தான் ஆனால் எங்கிருந்து ஹேக் செய்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை .அருகிலுள்ள இடங்களை கண்காணிக்க வேண்டும் . யாரோ இந்த வேலையை துல்லியமாக செய்கிறார்கள் . ப்ளூடூத் reciever எந்த இடத்தில மறைத்து வைத்துள்ளார்கள் என்பதும் தெரியவில்லை. நாளைக்கு தீபக்கும் நானும், மறுபடியும் போகிறோம் . எப்படியாவது அந்த ப்ளூடூத் கருவியை கண்டு பிடிக்கிறோம் என்றான்.இரவு முழுக்க மழை பெய்து அந்த இடம் நச நச வென்று இருந்தது . இவர்கள் ஸ்கேன்னேர்கள் கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்த போது காலடி தடம் படும் போதே சென்சார்கள் வேலை செய்வதை கண்டுபிடித்தார்கள் . அதன்படி ஏற்கனவே கொண்டு வந்திருந்த அமரனின் ஷூ வை வைத்தனர்.மறுபடி வந்திட்டியா என்ற குரல் கேட்டது . மழை மறுபடி பெய்ய துவங்கியவுடன் குரல் கம்மலாக கேட்டது . அருகிலிருந்த டேங்க் இல் இருந்து அந்த குரல் ஒலிப்பதை கண்டுபிடித்தனர் .அதை செக் பண்ணியபோது பதிவு செய்யப்பட்ட காஸ்ட் இருப்பதையும் அதை சிறிய ரக ப்ளூடூத் ஸ்பீக்கர்களுடன் இணைத்திருப்பதும் தெரிய வந்தது . 

அமரனுக்கு இப்போதுதான் மூச்சே வந்தது . அன்னைக்கு நம்மள தள்ளி விட்டு மயக்க மருந்து அடிச்சவன கண்டுபிடிக்க முடியாதா சார் . முடியும் அமரன். உங்க கார் மேப் எவன் ஹேக் பண்ணனோ அவன்தான் அன்னிக்கு பவர் cut பண்ணியிருக்கணும் . google மூலமாவே இதை கண்டுபிடிக்க request கொடுத்திருக்கோம் . அவங்க அந்த ஈமெயில் id கண்டு பிடிச்சி சொல்லிடுவாங்க .நல்ல வேளை கார்த்திக் தப்பித்தான் . சொல்ல முடியாது சார் அவன் போற google மேப்பையும் அவர்கள் ஹேக் செய்து இருக்கலாம் . சரி இப்போ அவனை காப்பாத்தணுமே. அவனை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம் சார். இந்நேரம் அவன் பாஸ்போர்ட் ஆபீஸ் ல இருப்பான் . வெளிநாடு போனா அவன் செஞ்ச தப்புக்கு தண்டனை கிடையாதா சார். நிச்சயம் உண்டு . உயிரோட இருந்தா தானே கொடுக்க முடியும் . அதுக்காக அவன் நிச்சயம் உயிரோட இருக்கணும் .google இடமிருந்து மெயில் வந்து விட்டது . அது தீப்தி என்ற பெண்ணுடையது அவள் போன் நம்பரை இணைத்திருந்தார்கள் . யார் இந்த தீப்தி என குழப்பமாய் இருந்தது . கார்த்திக் போன் சுவிட்ச் ஆப் இல் இருந்தது . எப்படியும் அந்த கட்டிடத்தில்தான் இருப்பான் என நினைத்தார்கள். தீப்தியும் கார்த்திக்கும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அமைதி அடைந்தனர். என்ன கார்த்திக் போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்ட என்றான் ராம் . சரி இங்கே இருக்க வேண்டாம் . என் friends எல்லாம் என்னை விட்டு பிரிஞ்சு போனா இடம் அத கடைசியா பார்த்துட்டு போக வந்தேன் . நீ கடைசியா பார்த்த இடமும் இதுதான் என சுட்டாள் தீப்தி. சாவுடா என்றாள்.அந்த நேர அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர் அமரனும்,ராமும் . தீப்தியை விசாரித்ததில் ருக்மணி அக்கா சொன்னதாகவும் அதை முடித்த திருப்தி தனக்கு இருப்பதாகவும் சொன்னாள். வீட்டுக்கு வந்து பார்த்தபோது தீபிகா கண்விழித்திருந்தாள்.