webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part12

செல்வியின் உடல் அப்புவின் உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது . தீபுவும் வந்திருந்தாள். ராகவ் கொஞ்ச நாளுக்கு இங்கேயே இருங்க ராம் என்றான் . இந்த கொலையையும் ஷ்யாம்தான் செய்தான் என கைரேகை நிபுணர்கள் உறுதிப்படுத்தினார்கள் . செல்வியுடைய உடமைகைளை ராம் ஆராய்ந்தான், அதில் விசேஷமாக ஏதுமில்லை . ரஞ்சனியும் வருத்தப்பட்டாள். லதாவிடம் ஏதாவது தகவல் கிடைத்ததா என கேட்டான் .

 அவள் சில விஷயங்களை சொல்லி இருந்தாள்.இப்படியே போனால் ராகவ் குடும்பத்தில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என நினைத்தான் .போலீஸ் பாதுகாப்பு கேட்பது கூட வீண் வேலை .

வேறு சில கேஸ் அழைப்புகளும் ராமுக்கு தொடர்ந்து வந்தன .அதை எல்லாம் லதாவை பார்க்க சொல்லி விட்டான். 

என்ன பண்ணிட்டு வந்த ஷியாம் .செல்வியை போட்டு தள்ளிட்டேன். யாரு செல்வி அதான் அப்புவோட wife .அவளை ஏன் கொன்ன.ரொம்ப பேசுனா அவதான் என்னை காட்டி குடுத்தா .சரி நீ இங்கே இருந்தா எனக்குதான் பிரச்னை உடனே கேரளா கெளம்பு. நீ போறதுக்குள்ளஎல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் . ஹக்கீம் கதையை முடிச்சுடு அவனால எனக்கு ஏகப்பட்ட லாஸ் .பணம்? அது கொடுக்குறேன் . நீ எப்போ போறே , இன்னிக்கி நைட் .அதான் நல்லது

 

ஹக்கீமை கொல்ல திட்டம் போடுகிறார்கள் என்ற விஷயத்தை லதா முன்பே சொல்லியிருந்தாள். இவன் ராகவ், ரஞ்சனியிடம் விடை பெற்றுக்கொண்டான் . யார் ஹக்கீம் இந்த கொலையை எப்படி தடுத்து நிறுத்த போகிறோம் என புரியாமலே கேரளாவுக்கு கிளம்பினான். நல்ல வேலையாக Facebook அவனுக்கு கை கொடுத்தது. அதில் தினந்தோறும் போகும் இடங்களை அப்டேட் செய்து வந்தான் ஹக்கீம் . அவன் இப்போது ஆலப்புழாவில் இருந்தான் . கேரளா போலீசுக்கு இன்போர்ம் பண்ணியிருந்தான் ஆனால் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஹக்கீமிடமே சொல்லலாம் என்று முடிவு செய்தான் .இவன் ஹக்கீமுடைய அலுவலக எண்ணுக்கு போன் செய்த போது நல்ல வேளையாக அவன் அங்கு இருந்தான் .விஷயத்தை சொன்னதும் அதெல்லாம் நான் பாத்துக்குறேன் சார் என்று போனை வைத்து விட்டான் .

 கடை திறப்பு விழாவிற்குத்தான் ஹக்கீம் வர இருந்தான் . 9 மணிக்கு கடை திறப்பு. அருகிலுள்ள லொட்ஜ், ஹோட்டல்களில் வேண்டுமென்றே தன் பெயர் ஷியாம் என்று சொல்லி ரூம் கேட்டான் .ஒரு ஹோட்டலில் இப்போதான் ஒருத்தன் அந்த பேருல ரூம் புக் பண்ணான் என கல்லாவில் இருந்தவர் சொன்னார் . முழு பேரென்ன சார் ஷியாம் சர்தார் னு சொன்னான் ,அதே ஹோட்டலில் ரூம் எடுத்து கொண்டான் . உங்க பேரு ராம் சுந்தர். இப்போ ஷியாம் னு சொன்னீங்களே நான் ராம்னு சொன்னது ஷ்யாம்னு காதுலே விழுந்திருக்கும் .

தீபுவை அவன் ஹக்கீம் வீட்டிற்கு அனுப்பியிருந்தான் . இன்டெர்வியூ எடுக்க தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதாகவும் இந்த கடை திறப்பை கவர் செய்ய விரும்புவதாகவும் சொல்லி appointment வாங்கி இருந்தாள். லோக்கல் கேமரா மேன் துணையுடன் கடைக்கு 8 மணி அளவில் வந்து விட்டாள். ரூம்போயிடம் விசாரித்ததில் ஷியாம் 207 இல் இருப்பது தெரிய வந்தது இவனுடைய ரூமை அவன் ரூமுக்கு எதிரில் மாற்றிக்கொண்டான் .

ராம் எடுக்க போகும் பெரிய ரிஸ்க் இது . ஷியாம் தனி ஆளாய்த்தான் வந்திருந்தான் . அவ்வப்போது தீபுவுடன் விஷயங்களை ஷேர் செய்தான் .ஷியாம் அசோக்கிற்கு போன் செய்தான் அந்த ராம் இங்கேயும் வந்துட்டான். போட்டு தள்ளிடு நான் பாத்துக்குறேன் . மொதல்ல ஹக்கீம் அப்புறம் ராம். ஷியாம் கதவிடுக்கு வழியாக பார்த்தான் ராமின் ரூம் கதவு பூட்டியிருந்தது .தீபு காமெராவை பெரிய screen டிஸ்பிளேயுடன் இணைத்திருப்பதை உறுதி செய்தாள்.ஷியாம் பதட்டப்பட வேண்டுமென்றேதான் ராம் அவன் ரூமுக்கு எதிர் ரூம் எடுத்தான் . ஷியாம் சுற்றும் முற்றும் பார்த்தான். கூட்டம் அதிகமில்லை. போலீஸ் செக்கிங்ம் இல்லை .

9 மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன .ராம் தன்னுடைய பிஸ்டல் சரியாக இயங்குகிறதா என பார்த்தான். பெயருக்கு ஒன்றிரண்டு போலீஸ் வந்திருந்தது . ஷியாம் சர்தார்ஜி வேஷம் போட்டிருதான். எப்போதோ ஹக்கீம் பேசிய வீடியோ பெரிய டிஸ்பிலேயில் காட்டப்பட்டது . இன்னும் 5 நிமிடங்கள் .ஷியாம் இப்போது கடைக்கருகே இருந்த சிறிய மேடையில் நின்றுகொண்டிருந்தான் .கூட்டம் அதிகமாக வர தொடங்கியது .நடிகை சஞ்சனா வருவதாக திடீர் அறிவிப்பு செய்தவுடன் கூட்டம் இன்னும் அதிகரித்தது . அங்கே குழப்பம் நிலவியது . ஹக்கீம் காரை விட்டு இறங்கியதும் பின்னாலேயே சஞ்சனாவும் இறங்கினாள்.கூட்டம் சஞ்சனாவை நோக்கி நகர்ந்தது . ஹக்கீம் தடுமாறிப்போனான் . திடீர் என பாம்பு பாம்பு என குரல் வர கூட்டம் கலைந்தோட தொடங்கியது. 

ஹக்கீமை குறிவைத்து ஷியாம் துப்பாக்கியை குறி வைத்தான். ராம் டிஸ்பிலேயில் அதிக சத்தத்துடன் அப்புவை கொல்லும் காட்சியை ஓட விட்டிருந்தான் . எல்லோரும் ஒரு கணம் டிஸ்பிலே வை பார்க்க ஷ்யாமை ராம் காலிலே சுட்டான் . தடுமாறி கீழே விழுந்தான் ஷ்யாம் .அவனை அள்ளிப்போட்டுக்கொண்டு அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் விரைந்தது .சஞ்சனாவை போலீஸ் பாதுகாப்பாக அழைத்து போனார்கள் . இவன் நிம்மதி பெருமூச்சு விட்டான் .தீபுவையும் ராமையம் ஹக்கீமுடைய வீட்டுக்கு அழைத்து போனார்கள் . ரொம்ப தேங்க்ஸ் பிரதர் என்றான் ஹக்கீம் அவன் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்தான் . போலீஸ் விசாரித்தார்கள் இவனுடையது லைசென்ஸ் துப்பாக்கி என்பதால் நடவடிக்கை எடுக்காமல் விட்டார்கள் .

தீபுவையும் ,ராமையும் இரண்டு நாட்கள் தங்கி விட்டு போகும்படி சொன்னார்கள் .இல்ல பரவாயில்ல இன்னொரு முறை வரோம் . நீங்க ஜாக்கிரதையா இருங்க என்றான் . ஹக்கீம் அசோக் மேல் ஆத்திரத்தில் இருந்தாலும் உடனடியாக எதுவும் செய்யவில்லை .

ஷியாம் மயங்கி இருந்தான் கண்விழித்து பார்த்தபோது ஏதோ ஒரு ஹாஸ்பிடலில் கையில் விலங்கோடு இருந்தான் . லோக்கல் போலீஸ் அவனை அரெஸ்ட் செய்திருந்தது. அசோக் அங்கு வந்திருந்தான் . இப்படி சொதப்பிடியே என்றான். ஷியாம் மறுபடி மயக்கத்துக்கு போனான்.

நீங்க ஏன் அவனை கால்ல சுட்டீங்க . போலீஸ் பிடிச்சிடுவாங்கனு எதிர்பாத்தேன் .அவனோட ஆம்புலன்ஸ் போல அது .இப்போ அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம் ஹக்கீம் போன் பண்ணி சொன்னார் . 

இனிமேலாவது போலீஸ் அலெர்ட்டா இருப்பாங்களா .நிச்சயமா .அவன் இப்போ உலகம் முழுக்க பிரபலம் .நீங்களும்தான் என்றாள் தீபு .

தூக்கம் கண்ணை சுழற்றியது .தீபு நீ டிரைவ் பண்றியா என்றான் . ஓகே சார் உனக்கும் தூக்கம் வந்துதுன்னா சொல்லு எங்கேயாவது நிறுத்திடலாம் .ஷியாம் செய்த கொலைகளுக்கு அவன் ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டும் என்பதே ராமின் எண்ணமாக இருந்தது .

தீபு திருத்தணிக்கு போயிருந்தாள். இவனும் லதாவும் மற்ற கேஸ் விவகாரங்களை பேசிக்கொண்டனர், அசோக் அரெஸ்ட் செய்யப்பட்ட செய்தி பிளாஷ் நியூஸ் செய்தியாக வந்தது .பிரபல க்ரானைட் தொழிலதிபர் அசோக் கேரளா தொழிலபதிபரை கொல்ல முயன்ற வழக்கில் ஷியாம் வாக்குமூலம் . லதாவுக்கு நன்றி சொன்னான் ராம் .

நீங்க மட்டும் ரிஸ்க் எடுத்து அந்த மைக்ரோபோனை வைக்கலேன்னா எல்லாமே மாறி இருக்கும் .

நீங்க இனிமே எங்க கூடவே இருந்துடுங்க . என்ன சொல்லறீங்க .கண்டிப்பா உங்க கூட இருந்தா பயம் இல்லே . அசோக் மீது கொலைமுயற்சி ,குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல், போன்ற பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது, அவனுக்கு ஜாமீன் இல்லாத பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டது. 

ஹக்கீம் சென்னைக்கு வந்த போது இவனை அழைத்து விருந்து கொடுத்தான் ,லதாவும் தீபுவும் கலந்து கொண்டார்கள் . ராகவுக்கு இதெல்லாம் ஆச்சர்யமாய் இருந்தது .

தீபு குழந்தை உண்டாயிருப்பதை சொன்னாள். இனிமே ஆபீஸ் பக்கமே வரக்கூடாது என அன்பு கட்டளையிட்டான் ராம் .லதா சொந்த ஊருக்கு போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனாள். இவனுக்கு இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டது . தீபு குழந்தை உண்டாயிருப்பதை சொன்னாள். இனிமே ஆபீஸ் பக்கமே வரக்கூடாது என அன்பு கட்டளையிட்டான் ராம் .லதா சொந்த ஊருக்கு போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனாள். இவனுக்கு இனம் புரியாத நிம்மதி ஏற்பட்டது . 

ராகவ் ,ரஞ்சனி புது அலுவலக திறப்பு விழாவிற்கு வந்து போனார்கள் . அவர்கள் முகத்தில் இன்னும் ஷியாம் பற்றிய கவலை இருந்தது , அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க அவனை கொஞ்ச நாள்ல அமெரிக்கா கொண்டு போயிடுவாங்க என்றான் . 

கொஞ்ச நாளில் தூதரக அதிகாரிகள் அவனை கஸ்டடியில் எடுத்தார்கள். அவன் அடுத்த வாரம் அமெரிக்கா போக எல்ல ஏற்பாடுகளையும் செய்தார்கள் .ராமின் புது அலுவலகத்தில் தீபக் சேர்ந்திருந்தான். பிற கேஸ் விஷயங்களை கவனித்துக்கொண்டிருந்தான் .லதா தீபு இல்லாமல் அவன் ஒருத்தனே அத்தனையும் பார்த்து வந்தான் . குழந்தை kidnap கேஸ் ஒன்று இவன் கவனத்துக்கு வந்தது . குழந்தை 6th படிக்குது சார் காணாமல் போய் ஒரு வாரம் ஆகிறது போலீஸ் complaint குடுத்துருக்கோம் .பேரு தீப்தி 

ஸ்கூல் விட்டு திரும்ப வரல சார். அந்த ஆட்டோக்காரய் விசாரிச்சா அன்னிக்கி அந்த பொண்ணு வண்டில வரலன்னு சொல்றாரு . நீ ஸ்கூலுக்கு போய் விசாரி தீபக் . நான் பின்னாடியே வரேன் . தீப்தி புகைப்படம் வாட்ஸாப்ப் மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தது .

தீபக் அங்கே இருக்கிற சிசிடிவி ல ஏதாவது தெரிஞ்சுதா ஒரு வயசானவர்வந்து அழைச்சுட்டு போறார் சார். இதை ஏன் போலீஸ் கவனிக்கலேன்னு தெரியலையே . அந்த வயசானவர் போட்டோவை நியூஸ் சேனல்ஸ் பிளாஷ் பண்ண சொல்லு தீபக் .தீபக் இதை நீயே handle பண்னு நான் அந்த குடும்பத்தை விசாரிக்கிறேன் .அந்த பெரியவரை இதுக்கு முன்னாடி பார்ததது கூட கிடையாது சார்.எதிர்பார்த்தது மாதிரி முன்னேற்றம் எதுவும் இருக்கவில்லை . 

அந்த பெரியவர் ஆதார் கார்டு மூலமா trace பண்ண முடியுமான்னு பாரு தீபக் .சரி சார் எனக்கென்னவோ அவர் ரொம்ப தூரம் போயிருக்க முடியாதுன்னு தோணுது . பக்கத்துல ஏதாவது எடத்துலதான் இருக்கணும் . சிக்னல் காமெராவையும் செக் பண்ண சொல்லணும் . எதிர்பார்த்தபடி அவர் சிக்னல் ஒன்றில் வாகனம் மோதி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருந்தார் . குழந்தை அவரை கிராஸ் செய்து விட போய் அதுவும் விபத்தில் சிக்கியிருக்கிறது . முகவரி அட்டையை விபத்து நடந்த இடத்திலேயே தவறி விட்டதாகவும் சொன்னார்கள் .இவன் நிம்மதி பெருமூச்சு விட்டான் .தீபக்கை கட்டி அணைத்து கொண்டான்.