webnovel

இரவுக்கு ஆயிரம் கைகள் part10

விடியோவை முதலில் பிரதி எடுத்தான் . இந்த வீடியோ பல பேரை கதிகலங்க செய்யும் அதே அளவு நமக்கும் ஆபத்து என்பதால் ராகவிடம் கூட சொல்லாமல் மறைத்தான் . அப்பு துணிச்சலாக கடைசி வரை போராடி இருக்கிறான் .அதை நாம் ஒன்றுமில்லாமல் செய்து விடக்கூடாது என நினைத்தான் . விடியோவை யாருக்கும் தெரியாமல் எப்படி கோர்ட் இல் ப்ரொடியூஸ் செய்வது என பலவாறாக சிந்தித்தான் . தீபுவிடம் சொல்லலாமா வேண்டாம் .டெல்லிக்கு போய் கொடுத்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் . தெரிந்த நண்பர் இருந்தார் அவருக்கு போன் செய்தான் . அசோக்குக்கு நீ இன்வோல்வ் ஆயிருக்கேன்னு தெரிஞ்சாலே உன்னை கொன்னுடுவாம்பா .

இந்த நேரத்தில் தீபு இருந்தால் உதவியாய் இருக்கும் .தீபு ரெண்டாம் நாளே வந்துவிட்டாள்.அவளுக்கு சூழ்நிலையை விளக்கினான் .நாம அனுப்ப வேண்டாம் அவங்களே கண்டுபிடிக்கிற மாதிரி செஞ்சா ?அப்படி செய்ய முடியுமா தீபு ? அவங்களுக்கு மொட்டை கடிதம் ஒன்னு போடுவோம் லொகேஷனோட . போய் எடுத்துக்கட்டும். இது ரிஸ்க் இல்லையா .ரிஸ்க்தான் ஆனால் வேற வழி இல்லை .copy எடுத்துடீங்கள்ல அப்புறம் என்ன கவலை .

ராம் என்றுமே மரணத்தை பற்றி அச்சப்பட்டதில்லை . குடும்பமும் இல்லை . ஆனால் அன்பானவர்களுக்கு ஒன்றென்றால் அவனால் தாங்கி கொள்ள முடியாது . ஊரிலிருந்து ராகவ் வந்திருந்தான் கல்யாணபத்திரிக்கையோடு. வாழ்த்துக்கள் ராகவ். நாங்க ரெண்டு நாள் முன்னமே வந்திடறோம்.திருப்பதில கல்யாணம் . நீங்க இருக்குற தைரியத்துலதான் கல்யாணமே. தீபு எங்கே .பக்கத்துல ஒரு வேலையா போயிருக்கா .சரி சார் நான் கிளம்பறேன் தீபு வந்தா சொல்லீடுங்க

தீபு லொகேஷன் முடிவு பண்ணிட்டயா . திருப்பதி .திருப்பதி உண்டியல்ல போடறோம் .அங்க சிசி டிவி எல்லாம் இருக்குமே . ஓ நான் யோசிச்சு சொல்றேன்.

ஷியாம் இப்போது உடல்நலம் தேறி விட்டான் .ஆளே மாற்றமாய் இருந்தான் .விடுதலை ஆகிவிடுவோம் என்ற நினைப்பே அவனுக்கு மேலும் தெம்பை கொடுத்தது . குற்ற உணர்வற்ற நிலையிலிருந்தான்.அப்புவை கொல்லும்போது லேப்டாப்பை தவறவிட்டது அவன் விட்டு சென்ற ஒரே தடயம் .

கல்யாணத்துக்கு கணவனோடு வந்திருந்தாள் தீபு . என்ன சார் சீக்கிரமாவே join பண்ண சொல்லீட்டீங்க . கொஞ்சம் urgent ஒர்க் என்று சொல்லி சமாளித்தான் ராம். கல்யாணம் சிறப்பாக நடந்தது .அப்புவின் மனைவியும் வந்திருந்தாள்.வீட்டுக்கு அவசியம் வரணும் தீபு . கண்டிப்பா .

விடியோவை ஒரு பெண் டிரைவ் ல் போட்டு பத்திரப்படுத்தி ஜட்ஜ் வெங்கடாசலம் முகவரிக்கு அனுப்பி வைத்தார்கள் . அவர் கொஞ்சம் நேர்மையானவர்தான் . அவர்தான் ஷியாம் கேஸை விசாரித்து கொண்டிருப்பவர். எதிர்பார்த்த மாதிரியே அவர் இந்த கேஸ் இல் இருந்து விலகிக்கொண்டார் . ராம் அனுப்பியது அவருடைய கையில் கிடைத்திருக்கவில்லை . சோசியல் மீடியாவில் அவருடைய மகன் மூலமாக வைரல் ஆனது . தாமாக முன் வந்து வழக்கை எடுத்த நீதிமன்றம்

ஷ்யாமின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை அளிக்க உத்தரவிட்டது.

ஷ்யாமுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என பேசிக்கொண்டனர் . ஷியாம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை . அசோக் திகைத்து போனாலும் சுதாரித்து கொண்டு ரகுராமனிடம் பேசினார் . இதை போய் fabricated அப்டின்னு என்னால சொல்ல முடியாது வேணா தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையா மாத்தி தரேன். அசோக்குக்கு ஆதரவான ஜட்ஜ் பன்னீர்செல்வம் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய உத்தரவிட்டார் .

ஒரு புறம் மீடியாவில் இது பற்றி விவாதிக்கப்பட்டது . மறுபுறம் வெங்கடாசலம் பதவியிலிருந்து விலக வேண்டும் என போராட்டம் வெடித்தது . ஆதாரத்தை பொது வெளியில் கசிய விட்டதற்காக அவர் மன்னிப்பு கேக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தப்பட்டது .

ஷியாம் சோர்ந்து போயிருந்தான் . அவனை ஆஜர்படுத்த போகும்போது தப்பி செல்ல திட்டம் வகுத்து கொடுத்திருந்தான் அசோக் . அதன் படி தப்பிக்க முயற்சி செய்தும் முடியாமல் மாட்டிக்கொண்டான் . ராமுக்கு வீடியோ வெளியானது அதிர்ச்சியாய் இருந்தாலும் ஷ்யாமுக்கு தண்டனை உறுதி என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் .

மருத்துவ அறிக்கை பெறுவதில் சிக்கல் இருந்தது. ஷியாம் போதுமான அளவு ஒத்துழைக்கவில்லை. அறிக்கையை தாமதப்படுத்தினால் அதற்குள்ளாக யார் அந்த விடியோவை அனுப்பியது என்பதை கண்டறியலாம் என கணக்கு போட்டான் . அசோக் இதற்கென ஒரு ஏஜெண்சியை அணுகினான் .அவர்கள் பென் டிரைவ் பறிமுதல் செய்வதற்கு முன்பே போலீஸ் விசாரணை செய்து பறிமுதல் செய்துவிட்டது .

விடீயோவின் உண்மைத்தன்மை அறிவதற்காக அப்புவின் மனைவியிடமும் அவனுடைய நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது . தூத்துக்குடி போய் ஹமீத், முத்து இல்லங்களிலும் கேமரா லேப்டாப் என எதுவும் இருக்கிறதா என ஆராயப்பட்டது .போரென்சிக் department அந்த வீடியோ உண்மை என சான்றளித்தனர்.

ஷியாம் ஆஜர்படுத்தப்பட்டு விவாதங்கள் நடந்தது . ஷியாம் ஒரு மனநோயாளிதான் என ரகுராமன் வாதிட்டார் . அவர் திட்டமிட்டு இந்த கொலையை செய்திருக்கிறார் அப்புறமும் மனநோயாளி என்கிறீர்களே இதற்கு ரகுராமனிடம் எந்த பதிலும் இல்லை . சீக்கிரம் அவருடைய மெடிக்கல் சர்டிபிகேட் கொடுங்கள் என மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார் .மருத்துவர்களும் அவர் கொலை செய்யும் போது திட்டமிட்டுதான் செய்தான் என சான்றளித்தனர் தெளிவான மனநிலையில் தான் இருந்திருக்கிறான் என்றனர் .

வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார் .ஷியாம் தப்பிக்க நாள் குறித்தான். அசோக் agency யை வறுத்தெடுத்தான் ஒரு பென் டிரைவ் எங்கேயிருந்து வந்ததுன்னு கண்டுபிடிக்க துப்பில்லை .சார் நாங்க ட்ரை பண்ணிக்கிட்டுதான் இருக்கோம் .எங்களுக்கு அந்த பென் டிரைவ் கெடைச்சாதான் ஏதாவது செய்யமுடியும் . அதான் ஜட்ஜ் தீர்ப்பே சொல்ல போறாரே .இன்னும் ஒரு சான்ஸ் குடுங்க லதா வை investigate பண்ண அனுப்புறோம் யாருய்யா லதா பெரிய சி ஐ டி யா . ஒன்னு லாஸ்ட் தடவை சார் . என்னவோ பண்ணித்தொலை என்றான்.

லதா விசாரணையை வெங்கடாசலமிடமிருந்தே துவக்கினாள். எனக்கெதுவும் தெரியாது. என் பையனை கேளுங்க ராகேஷ் இங்க வந்து இவங்களுக்கு பதில் சொல்லு .ராகேஷ் கல்லூரியில் படித்து கொண்டிருந்தான் .எப்படி அந்த பென் டிரைவ் இங்கே வந்தது? இப்டி கேட்டா கோரியர்ல வந்ததா இல்லே ஒரு சின்ன பொண்ணுதான் குடுத்தா

நீங்க எதுவும் கேக்கலையா கேட்டேன். ஒரு அக்கா குடுக்க சொன்னாங்கனு சொன்னா அப்புறமா ஓடிட்டா. அக்கா அப்டின்னாவுடனே பிரிச்சிடீங்க இல்லே அப்பா பேருக்கு வர டாக்குமெண்ட்ஸ் நாங்க யாரும் பிரிக்கமாட்டோம் .என்னவோ அன்னிக்கி அவர் வெளியூர் போயிருந்தார்அதனாலே பிரிச்சேன் .ஏன் அதை பார்க்காம ஷேர் பண்ணீங்க .என்னோட pendrive same மாடல் தான் . ரீல்ஸ் ஷேர் பண்ணும்போது அந்த விடியோவை க்ளிக் பண்ணிட்டேன். அப்புறம் friends சொன்ன போதுதான் தெரிஞ்சது .மறுபடி அந்த சின்ன பொண்ணை பார்த்தா எனக்கு immediate கால் பண்ணுங்க. ஓகே. என் நம்பர் நோட் பண்ணிக்குங்க இங்க சிசி டிவி இல்லையா இருந்துச்சு ஆனா ரிப்பேர் . தெருமுனை சிசிடிவிகளை லதா காவல்துறை அனுமதியோடு பார்வையிட்டாள். ஒன்றும் சிக்கவில்லை .ராம் வாட்சப்பில் வந்த ராகவ் ரஞ்சனி கல்யாண போட்டோக்களை பார்த்து கொண்டிருந்தான். பாஸ் உங்களுக்கொரு கல்யாணம் என இழுத்தாள் தீபு .யாரு விசாரிக்கிறா அந்த pendrive பத்தி குமார் agency லதா. அவ பெரிய கேடி ஆச்சே நேரா இங்கேயே வரவேண்டியதுதானே .

என்ன தீபு யு எஸ் போலாமா ஷியாம் போறானாம் .நீ நான் உன் husband எல்லாம் ஒரு ட்ரிப் மாறி போவோமா . கண்டிப்பா எனக்கும் யு எஸ் ல ஹனிமூன் கொண்டாடணும்னு ஆசைதான் . தூதரக அதிகாரிகள் ஷ்யாமை துளைத்தெடுத்தனர் . அவனோ வாய் திறக்கவில்லை .ஹாய் லதா எப்படி இருக்கீங்க நான் நல்லா இருக்கேன் விஷயத்தை சொல்லுங்க .அந்த பொண்ணு பேரு ரம்யா அவளோட ஸ்கூல் டேக் வாசல்லே கெடந்துருக்கு வேலைக்காரம்மா இன்னைக்குத்தான் குடுத்தாங்க .நீங்க கொஞ்சம் வாட்ஸாப்ப் பண்ணுங்க நான் விசாரிக்கிறேன் . கேகே மெட்ரிகுலேஷன் ஸ்கூல் அண்ணாநகர் அப்பா பேரு பரமசிவம் .சாயங்காலம் ஆகிவிட்டது பாப்பா வீட்டை கண்டு பிடிக்க. விஷயத்தை சொல்லி விசாரித்த போது எதுத்த வீடு ரீட்டா அக்காதான் குடுத்தாங்க . ரீட்டாவிடம் விசாரித்தபோது வாசலில் கிடந்தாகவும் அட்ரஸ் பார்த்து தான்தான் ரம்யாவை அனுப்பியதாக சொன்னாள்.

லதா குழம்பி போனாள். யாரோ வேண்டுமென்றே இப்படி செய்திருக்கிறார்கள் . ரீட்டா வீட்டில் சிசிடிவி இருந்தது எடுத்து பார்த்தாள். courier பையன் மாதிரி தெரியவில்லை தவறி விழுந்த மாதிரி போட்டு போயிருக்கிறான் . லதாவுக்கு தலை சுற்றியது .யு எஸ் ட்ரிப்புக்கு முன் லதா கிட்டேயிருந்து தப்பிக்கணுமே என்றான் ராம் .அவ தெரு தெருவா அலையுறா பாவம் .பேசாம நம்ம கூட சேர்த்துக்கிட்டா என்ன . எதுக்கு இந்த வேண்டாத வேலை? உனக்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ணியாச்சா இப்போ அங்கதான் போறேன் ஆல் தி பெஸ்ட் தீபு.

லதா மனந்தளராமல் அந்த ஏரியா பென் டிரைவ் சப்ளை செய்யும் கடைகளுக்கு போன் செய்து விசாரித்தாள். ஒன்றும் யூஸ் இல்லை .ஒரே ஒருத்தர் மட்டும் அந்த கடையில் அந்த particular மாடல் பென் டிரைவ் வாங்கி சென்றதாக சொன்னார் . அந்த கடைக்கு விரைந்தாள். சிசிடிவி காட்சிகளை பார்த்தாள் .இந்த பொண்ணா இந்த பொன்னேதான் என்ன பேருல பில் போட்ருக்கு தீபலட்சுமி . தீபலட்சுமி பேர்ல .மொபைல் நம்பர் எதுவும் குடுத்தாளா இல்லே மேடம் .

தீபலட்சுமி பேரை பாரு எங்க இருக்க நீ .தீபு தன் பெயரை பாஸ்போர்ட் application போர்மில் இன்னொரு முறை வாசித்து பார்த்தாள் . தீபலட்சுமி நல்லாத்தான் இருக்கு .

லதா ஆதார் கார்டு மையத்துக்கு சென்று போட்டோவை ஒப்பிட்டு பார்த்து அவள் முகவரியை கண்டுபிடித்தாள் . திருத்தணி அட்ரஸ் இருந்தது .போன் நம்பர் கிடைத்தது .

ஹலோ என் பேரு லதா நீங்க தீபலட்சுமியா ஆமா சொல்லுங்க என்ன விஷயம் . ரெண்டு வாரம் முன்னாடி பெண் டிரைவ் ஒன்னு வாங்குனீங்களே இல்லையே ராமன் ஸ்டோர்ஸ் ல . ஆமா அதுக்கென்ன குளுக்கல்ல உங்களுக்கொரு பிரைஸ் விழுந்துருக்கு .எனக்கெதுவும் வேண்டாம் நீங்களே வெச்சுக்கங்க . தீபலட்சுமி நான் உங்கள பாக்கணுமே .எதுக்கு? ஒரு பிரச்னை அத நீங்கதான் தீக்கனும். அட்ரஸ் அனுப்பிவிடறேன் வாங்க என்று போனை வைத்தாள் தீபு .